சிபு தமீன்ஸ் தயாரிப்பில், ஆனந்த் சங்கர் இயக்கத்தில் சீயான் விக்ரம் இரட்டை வேடங்களில் நடிக்கும் ‘படம் இருமுகன்’ .
படத்தில் நயன்தாரா , நித்யாமேனன் என்று இரண்டு கதாநாயகிகள் . போலீஸ் அதிகாரியாக நயன்தாரா நடிக்க, மிகவும் ஆக்டிங் ஸ்கோப் உள்ள ஒரு கதாபாத்திரத்தில் நித்யாமேனன் நடிக்கிறார் இது தவிர ஷார்மியும் உண்டு
‘‘விக்ரம் நடிக்கும் இரண்டு வேடங்களில் ஒன்று இதுவரை யாரும் நடித்திராத வேடம் . அவர் மட்டும் அல்ல, இதுவரை தமிழ் சினிமாவில் எந்த நடிகரும் இதுபோன்ற வேடத்தில் நடித்ததில்லை.
அந்த அளவுக்கு பிரத்யேகமான வேடம் ஏற்றுள்ளார் விக்ரம்’ என்கிறார்கள் ,
இதற்காக தனது உடல் முழுவதும் வித்தியாசமான மேக்கப்பையும் போட்டு நடித்துள்ளாராம் விக்ரம்.
‘ஐ’ படத்தின் மேக்-அப் மேன் தான் இந்த படத்திற்கும் மேக்-அப்.
”படத்தில் வில்லன் வேடத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த வில்லன் யார், என்பது சஸ்பென்ஸ்” என்கிறது படக் குழு . கண்டு பிடிக்க முயன்றும் வாய் திறக்க மறுக்கிறார்கள்
அதனால், வில்லன் விஷயத்திலும் தற்போது ‘இருமுகன்’ பலத்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது .
விக்ரமுக்கு ஜஸ்ட் சாதரணமாக ஒரு இரட்டை வேடம் கொடுத்தா ஒரு படத்தை எடுப்பார்கள் ?
இரு முகன் என்ற பெயர் .. முகம என்பதை மனமாக, குணமாகக் கொண்டால் இரண்டு வெவ்வேறு குணாதிசயங்கள் .. ஒருவர ஹீரோ எனில் இன்னொருவர் வில்லனாகததானே இருக்க முடியும் ?
தவிர நயன்தாரா வேறு போலீஸ் அதிகாரியாக வருகிறார் . (காதலிச்சு கண்களால் கைது செய்து,
அப்புறம் விலங்கு போட்டுக் கைது செய்வாரோ ?)
எனவே அந்த வில்லனும் விகரம்தான் என்பது. ‘நம்ம (தமிழ் சினிமா)’ யூகம் .
படத்தின் படப்பிடிப்பு தற்போது 60 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில், நாளை (ஏப்ரல் 17ஆம் தேதி ) விக்ரமின் பிறந்த நாள் வருகிறது .
விக்ரமின் பிறந்தநாளுக்காக ஸ்பெஷலாக எதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்த ‘இருமுகன்’ படக்குழுவினர், படத்தின் டீசரை வெளியிடலாம் என்று முடிவெடுத்து,
குறுகிய காலத்தில் டீசர் ஒன்றை தயார் செய்துள்ளார்கள்
ஒரு நிமிட ஓடக்கூடிய இந்த டீசரில், இந்தப் படம் எந்தமாதிரியானது என்பதை ரொம்ப நேர்த்தியாக விவரித்துள்ளாராம் இயக்குநர் ஆனந்த் சங்கர்.
அதை ரொம்பவும் ரசித்த இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் அதற்கென்று ஸ்பெஷலாக ஒரு பின்னணி இசை அமைக்க , அதைப் பார்த்து வியந்து போன இயக்குனர்,
அந்த பின்னணி இசையையே படத்துக்கு தீம் மியூசிக் ஆக பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்து விட்டாராம் .
இப்படி எல்லோரும் பின்னிப் பிணைந்து உருவாக்கிய, இருமுகன் படத்தில் ஃபரஸ்ட் லுக் டீசர்,
விக்ரமின் பிறந்த நாளான நாளை (ஏப்ரல் 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ),
விக்ரம் ரசிகர்களுக்கு விக்ரமின் பிறந்த நாள் பரிசாக வெளிவருகிறது .
இந்த டீசருக்குப் பிறகு படத்தின் வில்லன் பற்றிய சர்ச்சை இன்னும் அதிகம் ஆகலாம் .