காதலித்த பின்னர் நடிக்க வந்த ஜோடி

Fotor_143256102079248

பெரும்பாலும் படத்தில் நடிக்கும்  நாயகன் நாயகியர்  , நடிக்க வந்த பிறகு கஇருவர் ஒன்றாகி படம் எடுத்து முடிக்கும் முன்பாகவோ அல்லது முடிந்த பிறகோ , திருமணம் செய்து கொள்வதுண்டு. இப்படித்தான் பாக்யராஜ்- பூர்ணிமா,பார்த்திபன் -சீதா, ,செல்வமணி -ரோஜா, சூர்யா- ஜோதிகா போன்ற  ஜோடிகள் உருவானார்கள்.

ஆனால்’இருவர் ஒன்றானால்’ படத்தில் நடித்திருக்கும்  ஹீரோ  நடிகர் பி.ஆர்.பிரபுவும், ஹீரோயின் கிருத்திகா மாலினியும் ஆறு வருடம் காதலித்த நிலையில் படத்திலும் ஜோடியாக நடிக்க வந்தவர்கள்.

இதுபற்றிக்  கூறும்பி.ஆர்.பிரபு ” எனக்கு சொந்த ஊர் சேலம்..வீட்டுக்கு ஒரே பையன் நான். அப்பா அட்வகேட். நான்  சென்னையில் இந்துஸ்தான் கல்லூரியில் பி.இ.முடித்தேன். பிறகு அண்ணா பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ. முடித்தேன்.

Fotor_143256148112185

படித்ததெல்லாம்  குடும்பத்தினர் திருப்திக்காக மட்டுமே.  எனக்கு சினிமா ஆர்வம் உண்டு. நண்பர்கள் தொடர்பில் பல படப்பிடிப்புகள் சென்று ஒரு உதவி இயக்குநர் போல இழுத்துப் போட்டுக் கொண்டு வேலைகளைச் செய்ததுண்டு.

இப்படி ஏ.ஆர்.முருகதாஸ் சாரின் பல படங்களில் வேலை பார்த்தபோதுதான் இந்த இருவர் ஒன்றானால் படத்தின் தயாரிப்பாளர் சம்பத்குமார், இயக்குனர் அன்பு. பழக்கமானார்கள். அவர்கள்  படமெடுக்க முடிவு செய்தபோது நான் நடிப்பது என்றானது. ஒரு கதாநாயகி தேடிய போது,  நான் கிருத்திகா மாலினியைப் பற்றிக் கூறினேன்.நேரில்  பார்த்துவிட்டு தேர்வு செய்தார்கள்.

 நான் சினிமாவுக்கு வருவது என்று முடிவெடுத்த போது அதற்காக டான்ஸ் கற்றுக் கொண்டேன். அப்போது கிருத்திகா மாலினி அங்கு வருவார். இருவருக்கும் பழக்கமானது. ஒரு கட்டத்தில் இருவரிடையேயும்  உள்ளது வெறும் நட்பு அல்ல. ‘அதுக்கும் மேல’ என்று புரிந்து,  ஐலவ் யூ சொல்லிக் கொண்டோம்.

Fotor_143255998866265இப்படி காதலித்து  ஆறு ஆண்டுகள் ஆன பின்புதான் சினிமாவில் ‘இருவர் ஒன்றானால்’ படத்தில் நடித்தோம்.

திருமணத்துக்கு இருவர் வீட்டு சம்மதமும் கிடைத்தது. படப்பிடிப்பு முடிந்ததும்  காதலர் தினத்தின் மறுநாள் அதாவது 15.2.2015ல் சேலத்தில் திருமணம் நடந்தது. 17ஆம் தேதி சென்னையில் வரவேற்பு நடந்தது.

இருவர் ஒன்றானால்’ படத்தில் வருவது போல கிருத்திகாவுக்கு முன்பே  என்னை சில பேர் விரும்பினார்கள். அவர்களைத் தவிர்த்து விட்டேன். இன்றும் அவர்கள் என் நண்பர்கள்தான்.” என்கிறார்.(அவங்களும் இந்தப் படத்தில் நடிச்சு இருக்காங்களா தம்பி?)

Fotor_143256129510355கிருத்திகா மாலினி?

 ”ஆரம்பத்தில் எங்கள் காதலுக்கு வீட்டில் சம்மதிக்க வில்லை. சினிமாவில் நடிப்பதற்கும் சம்மதிக்க வில்லை. படத்தில் கவர்ச்சி, கட்டிப்பிடிக்கிற காட்சி எல்லாம் கூட இல்லை என்று கூறினோம்.’இருவர் ஒன்றானால்’படப்பிடிப்பு முடிந்ததும் திருமணம் என்றதும் சம்மதித்தார்கள்.

நான் விஸ்காம் படித்துள்ளேன். விஜய் டிவியில் கூட உதவி இயக்குநராக வேலை பார்த்துள்ளேன். நான் விளம்பரங்களில் நடிக்கவே விரும்புகிறேன். 

Fotor_143256118546691இனி சினிமாவில் நடிப்பதா இல்லையா  என்பதை’இருவர் ஒன்றானால்’ பட வரவேற்புக்குப்பின் தான் சொல்ல முடியும்.இருந்தாலும் விஸ்காம் படித்த நான் சினிமாவில் ஈடுபட எவ்வளவோ துறைகள் இருக்கிறதே ” என்கிறார்.

நிஜம்தான்…. சீக்கிரம் புரடியூஸ் பண்ணும்மா !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →