
சூர்யா ஜோதிகா திருமணத்துக்கு இரண்டு முக்கியமான ஹீரோக்களுக்கு மட்டும் பத்திரிக்கை வைக்கப்படவில்லை. ஒருவர் விக்ரம் இன்னொருவர் சிம்பு .
சட்டென்று உணர்ச்சிவசப்பட்டு பேசும் பழக்கம் உடைய சிம்புவோடு முரண்படுவது ஒன்றும் அதிசய விஷயமில்லை . ஆனால் வித்தியாசம் பாராமல் அனைவரிடமும் இனிமையாக பழகும் — எல்லோருக்கும் இனியவரான விக்ரமுடன் முரண்படுவது யாருக்கும் சகஜமான விஷயம் இல்லை.
ஆனால் விக்ரம் மீது சூர்யா கொண்ட கோபம் நியாயம் என்றால் , அந்த நியாயப்படி விக்ரம் மீது சூர்யா காட்ட வேண்டிய கோபத்தை அவரது வீட்டிலேயே உள்ள ஒருவரிடமும் காட்ட வேண்டும்.
சரி பழைய கதை எல்லாம் இப்போது வேண்டாம். விசயத்துக்கு வருவோம்
”ஜட்டி போட்ட சமந்தாவுடன் முட்டி போட்டு ஆடி ரசிகர்களை ஏமாற்றுபவர் அல்ல விக்ரம் .


ஐ படத்துக்காக இரண்டு வருடம் நல்ல சாப்பாடு , சுகம் , சந்தோசம் , எல்லாவற்றையும் இழந்து வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி இருபத்தைந்து கிலோ எடை குறைத்து உயிரையே பணயம் வைத்து நடித்து இருக்கிறார் விக்ரம் . அந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்காகவே சென்னை வந்தார் ஆர்னால்டு.
நிகழ்ச்சி அரங்கில் ஆர்னால்டு முன்னிலையில் அசுரன் கெட்டப்பில் ஒரு அசுரத்தனமான ஃபர்பார்மன்ஸ் மட்டுமே கொடுக்க முடிந்தது விக்ரமால் . ஆஸ்கார் ரவிச்சந்திரன் கும்பலின் அரைவேக்காட்டுத்தனமான நிகழ்ச்சி திட்ட வடிவமைப்பால் ஆர்நால்டுடன் ஒரு புகைப்படம் கூட எடுத்துக் கொள்ள முடியவில்லை விக்ரமால். இன்னும் சொல்லப் போனால் ஆடியோ வெளியீட்டு போட்டோவில் கூட அவரால் நிற்க முடியவில்லை .
ஆனால் இதிலும் புகுந்து புறப்பட்டு விக்ரமை பழி வாங்கி இருக்கிறார் சூர்யா .

சென்னை வந்த ஆர்னால்டு லீலா பேலஸ் ஹோட்டலை தங்கி இருந்தபோது அங்குள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டு இருந்த சூர்யா ஆர்னால்டை சந்தித்தார். தப்பில்லை .
அவரிடம் ஆட்டோகிராப் வாங்கினார். அது கூட தப்பில்லை. ஏனெனில் அவருக்கு அந்த வாய்ப்பு அமைந்தது
அவருடன் போட்டோ எடுத்துக் கொண்டார் அதுவும் தப்பில்லை . ஏனெனில் சூர்யாவும் நம்ம ஊரில் பெரிய நடிகர் .
அந்த போட்டோவை சூர்யா தனது நண்பர்களிடம் காட்டலாம் . ஃபேஸ்புக்கில் டுவிட்டரில் போட்டுக் கொள்ளலாம்.
ஆனால் ஐ படத்தின் ஆடியோ லாஞ்ச் நடந்த அதே நாளில் சூர்யா ஆர்னால்டுடன் தான் போட்டோ எடுத்துக் கொண்ட விஷயத்தை பத்திரிகை செய்தியாக எல்லோருக்கும் அனுப்பி அனுப்பி குறுக்கு சால் ஒட்டி வைக்கிறார் என்றால் ..
இதுதான் சூர்யாவின் மேனர்ஸா? இல்லை விக்ரம் மீது சூர்யாவுக்கு இருக்கும் பழைய கல்யாண கோபத்தின் தொடர் வெளிப்பாடா ? “என்று முகம் சுளிக்கிறது இன்டலக்சுவல் வட்டாரம்