உறுதியான வெற்றியில் உத்வேக ‘ஜாக்பாட் ‘

2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில் ரேவதி ஜோதிகா நடித்துள்ள படம் ஜாக்பாட். கல்யாண் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை சக்தி பிலிம் பேக்டரி சார்பாக சக்திவேலன் உலகெங்கும் வெளியிடுகிறார். ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா  !
 

விழாவில் எடிட்டர் விஜய் வேலுகுட்டி பேசியபோது, “ஜாக்பாட் ட்ரைலரைப் பார்த்த அனைவரும் ரஜினி சார் படத்தின் ட்ரைலர் போல இருக்கிறது என்றார்கள். அது மகிழ்ச்சியாக இருக்கு” என்றார்

ஒளிப்பதிவாளர் ஆனந்த் பேசியபோது “படம் ரொம்ப ஜாலியா இருந்தது. கிரேன்ல இருக்கும் போது சூட்டிங்கில் பலமுறை சிரித்து இருக்கிறேன்ஜோதிகா மேடத்தைப் பார்த்தால் வியப்பாக இருக்கும். ரொம்ப நிதானமா இருப்பாங்க. அவர்களிடம் இருந்து நிறைய கத்துக்கணும்.” என்றார்

ஸ்டண்ட் மாஸ்டர் ராக்பிரபு , ” என்னிடம் முதலில் இது காமெடி படம் என்று தான் சொன்னார்கள். ஆனால் ஒரு ஆக்‌ஷன் படம் அளவிற்கு சண்டைக்காட்சிகள் அமைந்துள்ளது” என்றார்

நடிகர் ஜெகன் ,” ரொம்ப இதயப்பூர்வமான லேடி ஜோதிகா. தாமரை எழுதிய ஒவ்வொரு வரிக்கும் பொருத்தமானவர் ஜோதிகா. தவமே பெற்றவரம் சூர்யா. அவருக்கு நிறம் கொடுத்தவர் ஜோதிகா” என்றார்

நடிகர் டேனி ,” இப்படி ஒரு புரொடக்சன் கம்பெனியை நான் பார்த்ததே இல்லை. சாப்பாடு விசயத்தில் மிகச் சிறப்பாக கவனிப்பார்கள். சுகர்லாம் இல்லாமல் நாட்டுச் சக்கரை தான் கொடுப்பார்கள்.  ஜோதிகா மேடம் போல ஒரு ஆக்‌ஷன் ஹீரோ பைட் செய்வாரா என்பதே சந்தேகம். கல்யாண் அவர்கள் மனிதரா இல்லை ரோபோவா என்று தெரியாதளவில் வேலை செய்கிறவர்” என்றார்

பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ்,”பாட்டெழுதி முடித்ததும் பாட்டு ரொம்ப நல்லா இருக்கு என்று கோ புரொடியூசர் ராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண்டியன் சார்  போன் பண்ணி சொன்னார்.  முதல் முதலாக பாட்டெழுதிய உடனே ஒரு தயாரிப்பு நிறுவனம் சார்பில் போன் பண்ணிய வாழ்த்தியது 2D எண்டெர்டெயின்மெண்ட்-ல் தான்ஜோதிகா மேடத்தின் ரசிகன் நான். சூர்யா சார் எல்லோரும் பேசத்தயங்கும் விசயங்களை தைரியமாகப் பேசினார். அவர் பேசியதை நாம் வழி மொழிந்து பேச வேண்டும்” என்றார்

நடிகர் மன்சூர் அலிகான் பேசும்போது, ,” சிவக்குமார் அவர்களின் அர்ப்பணிப்புகளை உள்வாங்கி சூர்யா சிறந்த படங்களை கொண்டு வரும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஜோதிகா நடித்ததும் எனக்குப் பயம். ஜெயலலிதாவைப் பார்த்தால் அமைச்சர்கள் எப்படி பயப்படுவார்களோ அப்படி பயந்தோம். ஏன்னா விஜய் குஷி படத்தில் பட்டபாடு தான் தெரியுமே. ஜோதிகாவைப் பார்க்கும் போது ராஜராஜ மன்னன் போல அவ்வளவு கம்பீரமாக இருக்கும். கல்யாண் மிகப்பெரிய இயக்குநராக வருவார்.

அவரோட ஸ்லாங் எல்லாருக்கும் பிடிக்கும். கல்யாண் படத்தில் நடிப்பது அத்திவரதர் தரிசனம் கிடைத்த மாதிரி. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு அனுபவம். இந்தப்படம் எனக்கு நல்ல அனுபவம். தேவா படத்தில விஜய் கூட நடிச்சேன். ப்ரேம்ல கொஞ்சம் பிசகி நின்னா கூட சிவக்குமார் அய்யா கோபப்படுவார். சூர்யா பேசிய கல்விக்கொள்கைக்கு அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும். செந்தமிழன் சீமான் ஆதரவு கொடுத்துள்ளார். இன்னும் எல்லாரும் ஆதரவு கொடுக்க வேண்டும். அப்போது தான் அரசின் காதுக்கு கேட்கும்” என்றார்
 

தயாரிப்பாளர் சக்திவேல் “ஒரு படத்தின் வெற்றி என்பது பர்ஸ்டே பர்ஸ்ட் சோவில் தான் தெரியும். ஆனால் எங்களுக்கு முன்னாடியே தெரிந்து விட்டது. ஏன் என்றால் தமிழ்நாட்டில் பல திரையரங்க உரிமையாளர்கள் போன் பண்ணி கேட்கிறார்கள். இந்தப்படம் அவ்ளோ நல்லாருக்கு. ஜோதிகா மேடம் நடித்ததிலே இந்தப்படம் தான் எனக்கு ரொம்ப பிடித்தது. 2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் படங்களை வெளியீடுவதை  பெருமையாகச் சொல்வேன். சூர்யா அண்ணன் என்மேல் வைத்துள்ள நம்பிக்கைக்காக வேகமாக ஓடுவோம்.” என்றார்

இயக்குநர் கல்யாண் “எனக்கு பெரிய ஜாக்பாட் என்னன்னா 2D எண்டெர்டெயின்மெண்ட் தான். நான் ராஜா சாரிடம் போய் மூன்று சீன் தான் சொன்னேன். உடனே செக் கொடுத்துட்டார். பிறகு ஜோதிகா மேடத்திடம் கதையைச் சொன்னேன். அவர் உடனே சூட்டிங் போகலாம் என்றார்.
ஸ்பாட்டில் சூர்யா தான் ஜோதிகாவுக்குள் வந்துவிட்டாரோ என்று நினைக்கும் அளவிற்கு பிரமாதமாகப் பண்ணி இருக்கிறார். படத்தில் ஜோதிகா பாதி சூர்யாவாகவும் பாதி ஜோதிகாவாகவும் தெரிவார்.” என்றார்

சூர்யா தன் பேச்சில், “. என்னோட ஜோ தான் என்னோட ஜாக்பாட். 100 சதவிகிதம் 200 சதவிகிதம் எந்த காம்ப்ரமேஸும் இல்லாமல் சரியாச் செய்ற அம்மா ஜோதிகா. அவர் தேர்ந்தெடுக்கிற படங்கள் எல்லாவற்றையும் மிகவும் யோசித்து யோசித்து தான் செய்வார். தமிழ்நாட்டுப் பெண்கள் ஒவ்வொருவரும் அவர்களைப் பற்றி, சமூகத்தைப் பற்றி மிகச் சரியான மதிப்பீட்டை வைத்திருப்பார்கள்.

ஜோதிகாவுக்கு இந்தப்படம் சரியான படம். சில ஆக்‌ஷன் காட்சிகளைப் பார்த்து எப்படி இதையெல்லாம் செய்திருப்பார் என்று ஆச்சர்யப்பட்டேன். ஆறுமாதம் சிலம்பம் கத்துக்கிட்டார். மீண்டும் நான் ஜோதிகாவிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்” என்றார்.
 

தயாரிப்பாளர் ராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண்டியன் ” எனக்குச் சூர்யா நண்பராக கிடைத்தது ஜாக்பாட். இப்படி ஒரு ஸ்கிரிப்ட்டைக் கேட்டு சிரித்தளவுக்கு வேறு எந்தக்கதையைக் கேட்டும் நாங்கள் சிரித்ததில்லை. 2D எண்டெர்டெயின்மெண்ட் பேர்லே எண்டெர்டெயின்மெண்ட் இருக்கு. எங்கள் கதைகளில் 70% கமர்சியல் இருக்கும் 30% மெசேஜ் இருக்கும். கல்யாண் வெறித்தனமாக வேலை செய்பவர். அவரது டீமும் அப்படித்தான்” என்றார்

 ஜோதிகா  பேசும்போது “முதல் நன்றி சிவக்குமார் அப்பாவிற்கு. 2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தில் இரண்டு வருசத்துக்குப் பிறகு நடிக்கிறேன். இது எனக்கு ரொம்ப புதுசான படம். இப்படி ஒரு கதையில் நான் நடித்ததே இல்லை. ரேவதி மேடத்திற்கு ஈக்குவலான ரோல். அதற்கு கல்யாண் சாருக்கு நன்றி. ஹீரோஸ் என்னன்ன பண்றாங்க என்பதைப் பார்த்து எல்லாவற்றையும் எங்களைப் பண்ணச் சொன்னார்.

பாடல்கள் ரொம்ப நல்லாருந்தது. பெண்களுக்குப் பவர் வேண்டும். இந்தப் பாடல்களில் அது இருக்கிறது. எல்லா ஷாட்ஸ்களையும் பிரம்மாண்டமாக எடுத்திருக்கிறார்கள். ஒரே நாளில் ஒரு பாடலை எடுத்து முடித்தார் பிருந்தா மாஸ்டர். இந்தப் படத்தில்  எனக்கு என் ஹஸ்பெண்ட் சண்டைக்காட்சிகளுக்கான கிட்ஸ் நிறைய வாங்கிக் கொடுத்தார்.
 
அவர் தான் என்னோட எல்லா முயற்சிகளுக்கும் கை கொடுப்பவர். அவர் இல்லை என்றால் நான் இல்லை. என்னோட ஜாக்பாட் சூர்யா தான். பெரும்பாலும் நடிகைகள் நடித்தப்படங்களை அந்தந்தப் படங்களின் ஹீரோக்களோடு தான் ஒப்பிட்டுப் பேசுவார்கள். ஆனால் நான் பெரிய பெரிய  ஹீரோயின்களோடு நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றிருக்கிறேன். அதைப் பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன்” என்றார்
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *