ஜெய் விஜயம் @ விமர்சனம்

A CUBE MOVIES APP வழங்க , ஜெய் ஆகாஷ் பிலிம்ஸ் தயாரிப்பில், ஜெய் ஆகாஷ், அக்ஷயா கண்டமுத்தன், அட்சய ராய்,மைக்கேல் அகஸ்டின், கனடா நடிகை (கன்னட நடிகை அல்ல) கிகி வாலஸ் மற்றும் பலர் நடிப்பில் ஜெய சதீசன் நாகேஸ்வரன் என்ற பெயரில் ஜெய் ஆகாஷ் , சண்டைப் பயிற்சி, நடனப் பயிற்சியோடு எழுதி இயக்கி இருக்கும் படம் . 

மனைவி ( அக்ஷயா கண்டமுத்தன்) அப்பா (ஏ சி பி ராஜேந்திரன்) தங்கை (அட்சயா ராய்) ஆகியோரோடு ஒரு புதிய வீட்டுக்கு குடி வரும் நபருக்கு ( ஜெய் ஆகாஷ்) நினைவுக் குழப்பப் பிரச்னை இருக்கிறது. 

 மனைவி மற்றும் தங்கையிடம் ஒருவன் ஆபாச சைகை செய்ய , அவனை கண்டிக்கப் போக, அவன் நான் அப்படி ஏதும் செய்யவில்லை என்று கூற, தங்கை , மனைவி, அப்பாவும் வந்து அவன் அப்படி தவறாக எதுவும் செய்யவில்லை எனவும், “உங்களுக்கு நினைவுக் குழப்பப் பிரம்மை நோய் இருப்பதால் அப்படி நீங்களாகவே கற்பனை செய்து கொள்கிறீர்கள் ” என்றும் கூறி,  , மாத்திரை போட்டு உறங்க வைக்கின்றனர் . 

ஒரு நிலையில் வீட்டுக்குள் சிலர் வந்து  அவனை கொலை செய்ய முயல, அவர்களை அவன் அடித்து விரட்டுகிறான் .

அடுத்த சில நாளில் அப்படி கொலை செய்ய வந்த நபர்களோடு மனைவி பேசிக் கொண்டு இருப்பதைப்  பார்க்கிறான் . ஆனால் மனைவி அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை  என்று மறுக்கிறாள் . 

ஒரு நிலையில் மனைவி , தங்கை , அப்பா அனைவரும் அவனுக்கு எதிராக சதி செய்வதை அறிந்து போலீசில் புகார் செய்கிறான் . 

அப்போதுதான்  நடந்து கொண்டிருப்பது  2012 ஆம் ஆண்டு என்று அவன் திட்டமிட்டு நம்ப வைக்கப்பட்டு இருப்பதும் , மனைவியாக நடிப்பது ஒரு டாக்டர் , அப்பாவாக நடிப்பது ஒரு இன்ஸ்பெக்டர் என்பதும்தங்கையாக நடிப்பது , 2012 ஆம் ஆண்டில் அவனால் கொலை செய்யப்பட்டவர்கள் என்று போலீஸ் நம்பும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவள் என்பதும் அவனுக்குத் தெரிய வருகிறது .

அவன்தான் கொன்றான் எனில் ஏன் ? இல்லை எனில் நடந்தது என்ன?

–  என்பதே இந்த ஜெய விஜயம் . 

வித்தியாசமான நல்ல விறுவிறுப்பான கதை . 

பேசும் வார்த்தைகளில் ஒற்றெழுத்துக்களை மென்மையாக்கியோ அல்லது விழுங்கி விட்டோ படபடவென்று வேகமாகப் பேசும் தனது பாணியில் அப்படியே பேசி நடிக்கிறார்  ஜெய் ஆகாஷ் . தோற்றப் பொலிவை அவர் தக்க வைத்திருக்கும் விதமும் பாராட்டுக்குரியது . 

அழகாக மட்டுமின்றி குடும்பப் பாங்காகவும் இருக்கிறார் அக்ஷய கண்டமுத்தன். நடிப்பும் சிறப்பு . 

அட்சயா ராய் நடிப்பும் ஒகே . 

நிஜ மனைவியாக நடித்திருக்கும் கிகி வாலஸ் ஈர்ப்பான முக அமைப்புடன் கவர்கிறார் .  ஆனால் காட்சிகள் குறைவு . அவரை இன்னும் நன்றாகப் பயன்படுத்தி இருக்கலாம். 

மற்றவர்கள் கண்ணும் கருத்துமாக வசனம் பேசி விட்டு மட்டும்  போகிறார்கள். 

புகையாக இருக்கும் ஆத்மா என்ற உத்தி சிறப்பானது. ஆனால் தொழில் நுட்ப ரீதியாக சரி இல்லை . 

அதே போல திரைக்கதை, நடிப்பு, உட்பட எல்லா தொழில்நுட்பத் துறைகளிலும்  இன்னும் நேர்த்தி தேவை . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *