சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்க, ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், ஜாக்கி ஷெராஃப், மோகன் லால், சிவராஜ் குமார், சுனில், தமன்னா நடிப்பில் நெல்சன் இயக்கி இருக்கும் படம்.
ஓர் இளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (வசந்த் ரவி) சிலை கடத்தும் கும்பலின் ஆள் ஒருவனை ( சரவணன்) வளைக்க, அதன் விளைவாக கும்பலின் தலைவன் ( விநாயகன்) அவரைத் தூக்கி விட, அது போதாதென்று அவனது குடும்பத்தையும் கொல்ல முயல
அவனது தந்தையான முன்னாள் ஜெயிலர் ( ரஜினி காந்த்), தனது மனைவி ( ரம்யா கிருஷ்ணன்) , மருமகள், பேரன் ( ரித்விக் ) ஆகியோரின் உயிரைக் காக்க போராட, அதன் ஒரு பகுதியாக
அவருக்கு ஒரு வேலை கொடுக்கப்பட, அதை நிறைவேற்ற இந்தியாவின் பல பகுதிகளிலும் இப்போது பலமாக இருக்கிற- ஒரு காலத்தில் ஜெயிலரால் திருத்தப்பட்ட நபர்கள் (ஜாக்கி ஷெராப், சிவராஜ் குமார், மோகன் லால் ) உதவ, கடைசியில் வளர்த்த கடாவே மார்பில் பாய்ந்தபோது, என்ன நடந்தது என்பதே படம்
கிளைமாக்சில் பழைய பாணியில் தீக்குச்சி மீது தீப்பெட்டியை உரசி , தீப்பெட்டியை தூக்கிப் போடும் காட்சியில் ரஜினிகாந்த் தெரிகிறார் .
விநாயகன் கொஞ்சம் ஓவர் ஆக்டிங் என்றாலும் தேர்ந்த நடிப்பு
தமன்னா ஆட்டம் துள்ளல்
சுனில், ரெடின் கிங்ஸ்லி ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார்கள்.
படத்தில் பாடல்கள் எல்லாம் கொத்து பரோட்டா. பின்னணி இசை சத்தம் அதிகம். ஆனால் இசை ஒகே .
விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு சிறப்பு
பொதுவாக சினிமா படங்களில் கொரியர் கொடுக்க வரும் நபர், கதாநாயகி கோபமாக கோவித்துக் கொண்டு ஏறும் ஆட்டோவை ஓட்டும் நபர், காதலன் காதலி பாடி ஆடும் போது ஐஸ்வண்டி தள்ளும் ஆள் போன்ற வேலைகளுக்கு எல்லாம் ( கவனிக்கவும் நடிப்பு அல்ல . வேலை) அசிஸ்டன்ட் புரொடக்ஷன் மேனேஜரையோ அக்கவுண்ட் பார்ப்பவரையோ அவசர அவசரமாக அரைகுறையாக பவுடர் பூசி கேமரா முன்பு நிற்கச் சொல்வார்கள் .
அவர்களுக்குப் பதிலாக ஜாக்கி ஷெராஃப், சிவராஜ் குமார் , மோகன்லால் போன்றோர் நடித்துள்ளனர் . அஞ்சாம் வகுப்பில் நடக்கும் FANCY DRESS COMPETTITION-இல் அக்கம் பக்க மாநில ஹீரோக்களை பார்க்கிறோம் . PAN INDIA படம் !