ஃபெய்ரி டேல் பிக்சர்ஸ், ஏ ஆர் டூரிங் டாக்கீஸ் புரொடக்ஷன்ஸ் , விஜிவி கிரியேஷன்ஸ் மற்றும் சினிமாரஸா புரொடக்ஷன்ஸ் சார்பில் அணில் குமார் ரெட்டி, ராகவேந்திரா பெல்லம்கொண்டா ஆகியோரோடு சேர்ந்து தயாரித்து இருப்பதோடு டி ஆர் பாலா என்பவர் எழுதி இயக்க முகேன் ராவ், பவ்யா திரிகா , இமான் அண்ணாச்சி, வினோதினி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஜின் தி பெட்
தமிழ்நாட்டில் இருந்து மலேசியாவுக்கு கச்சேரி செய்யப் போன ஒருவன் ( முகேன் ராவ்) அங்கிருந்து வரும் இஸ்லாமிய மத அடிப்படையில் பேய் என்று சொல்லப்படும் – அதே நேரம் வளர்ப்பவருக்கு ஒரு பெட் அனிமல் போல இருக்கும் ஜின் ஒன்றை கொண்டு வருகிறார் .
வந்தவுடன் அவருக்கு நர்ஸ் ஒருவருடன் (பவ்யா த்ரிகா) காதல் செட் ஆகிறது . அவளோடு கல்யாணம் நடக்கிறது, தனக்கு அதனால் நல்ல விஷயங்கள் நடப்பதாக அவர் நம்புகிறார் . அதே நேரம் அவரது அக்கா (வினோதினி) அப்பா ( இமான் அண்ணாச்சி) அம்மா (வடிவுக்கரசி) ஆகியோர் வேறு சில சம்பவங்களை வைத்து அது வந்த பிறகு குடும்பத்துக்கு கெடுதல் நடப்பதாக நம்புகின்றனர்
இந்த நிலையில் மனைவி வீட்டில் ரத்தக் காயத்துடன் கிடக்க, ரத்தத் துளிகள் அந்த ஜின் இருக்கும் பெட்டியில் இருக்க, அவள் நிலைமைக்கு ஜின் தான் காரணம் என்று எல்லோரும் சொல்ல, ஜின் னை தூக்கி வெளியில் போடுகிறான் கணவன்
ஆனால் அவளது நிலைக்கு ஜின் காரணம் இல்லை என்று தெரிய வர, அவளைக் கொலை செய்ய ஒரு அதிகாரம் மிக்க கூட்டம் முயல, ஜின் உதவிக்கு வர , அப்புறம் நடந்தது என்ன என்பதே படம்
ஜின் என்பதை இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் ஜின்னி என்று அழைக்கின்றன. ஜின்னி என்பது இருளுக்குள் ஒளிரும் பச்சை நிறத்தில் ஓங்கி உயர்ந்த உருவம் , பொதுவாக அது மசூதிகளில் இருக்கும் . அவை நல்லோர்க்கு நன்மை செய்யும் சக்திகள் அல்லாதோருக்கு தீமை செய்பவை என்று கூறப்படுகின்றன .
படத்தின் ஆரம்பக் காட்சிகள் உண்மையிலேயே சிறப்பாக மிரட்டலாக இருந்தன. ஆனால் ஆனால் அதன் பிறகு சராசரிக்கும் கீழே சர்ரென்று இறங்கி விட்டது படம் .
ஒரு சில காட்சிகளில் சத்தம் , சி ஜி மூலம் நிஜமாகவே திரில்லாக இருந்தது .
இடைவேளைக்குப் பிறகு மிரட்டப் போகிறார்கள் என்று பார்த்தால் ஜின்னை மொட்லு – பட்லு , சின்ஷு- சிஷுமாரி அளவுக்கு இறக்கி கூத்தடிக்கிறார்கள் .
கடைசியில் நல்ல ஜின்னும் தீய ஜின்னும் மோதிக் கொள்ளும் காட்சியையாவது மிரட்டும்படி எடுத்து இருக்கலாம். ஆனால் இவர்கள் வீடியோ கேம் ஆடுகிறார்கள் .
இவர்கள் ஜின் என்பதை பேயாகவும் சரியாக உணரவில்லை. பெட் ஆகவும் ஒழுங்காக காட்சிகளை அமைக்கவில்லை.
ஜின்களை வைத்து ஒரு படம் என்பது அட்டகாசமான சப்ஜெக்ட் . ஆனால் இவர்கள் ஜின் என்பதை சரியாக feel பண்ணவே இல்லை