அருளானந்து மாத்யூ அருளானந்து தயாரிப்பில் , ரியோ ராஜ், மாளவிகா மனோஜ், பவ்யா ட்ரிகா , சார்லி, அன்புதாசன், ஏகன், வி ஜே ராகேஷ் நடிப்பில் , ஹரிஹரன் ராம் எழுதி இயக்கி இருக்கும் படம்
கோவை வாழ் கல்லூரி இளைஞன் ஒருவன் ( ரியோ ராஜ்) அங்கே படிக்கவரும் ஆலப்புழா மாணவி ( மாளவிகா மனோஜ்) மீது காதலாகிறான். அவளும் அந்தக் காதலை ஏற்க, படிப்பு முடிந்து பிரிய, கல்யாணத்தை நோக்கி யோசிக்கும்போது, பெண்ணின் உறவினர்கள் தமிழ்ப் பையன் என்பதால் மறுக்க, அதன் விளைவாக மாபெரும் இழப்பு ஒன்று நேர்கிறது .

நொறுங்கிப் போன பையனை கஷ்டப்பட்டு மீட்கும் பெற்றோர், மகனுக்கு கல்யாணம் பற்றி யோசிக்கின்றனர் . அப்பாவின் நண்பரும் பணக்காரருமான ஒருவரின் மகளை ( பவ்யா ட்ரிகா) திருமணம் செய்து கொள்ள, அவளுக்குள் ஒரு பிரச்னை. எனவே அங்கும் அவனுக்கு வாழ் வெறுமையாக நடந்தது என்ன என்பதே படம்.
கோவைப் பகுதியில் அடிக்கடி நடப்பதாகச் சொல்லப்படும் விசயத்தில் நடக்கும் முதல் பாதி.
அட்டகாசமான மேக்கிங்கில் கவர்கிறார் இயக்குனர் .
ரியோ ராஜ், மாளவிகா மனோஜ், பவ்யா ட்ரிகா ஆகியோர் மிக சிறப்பாக நடித்துள்ளனர் .

நண்பர்களாக வரும் ஏகன் , அன்பு தாசன், வி ஜே ராகேஷ் மூவரும் அவ்வளவு இயல்பாக சிறப்பாக நடித்துள்ளனர் . கவனிக்க வைக்கிறார் ஏகன்.
லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் பற்றி இந்தப் படத்தில் வரும் வசனம் படத்தின் சிகரம் . ஹரிஹரன் எழுத்தின் மகுடம் .
சித்து குமார் இசை வித்தியாசமான ஒலிகளோடு கவர்கிறது. ராகுல் கே விக்னேஷின் ஒளிப்பதிவும் சிறப்பு.

கிளைமாக்ஸ் டுவிஸ்ட் லாஜிக் இல்லை என்றாலும் ஒரு சின்ன அட போட வைப்பதை மறுப்பதற்கு இல்லை
மேக்கிங் , காட்சிகள், நடிப்பு என்று நன்றாக இருந்தாலும் , பல பிரபல படங்களை அப்படியே அடுத்தடுத்து ஞாபகப்படுத்தும் கதையும் , தேவையில்லாத காட்சிகள் துருத்திக் கொண்டு நிற்கும் திரைக்கதையும் பின்னடைவு
எனினும் ஜோ …சற்றே சபாஷ் போடவைக்கிறான்.