இசை அமைப்பாளர் ஷான் ரோல்டன் படத்தில் பாடிய பாடகர்களை எல்லாம் அறிமுகப்படுத்தி சில வார்த்தைகள் பேச வைத்தார் .
மண்மணம் மாறாத அந்த கிராமத்துப் பாடகர் மற்றும் பாடகிகளின் குரல் , மொழி எல்லாம் அவ்வளவு அழகு . படத்தின் பெரிய பலமாகவும் இருந்தது மண் மணக்கும் அந்தக் குரல்கள் .
ஷான் ரோல்டன் பேசும் போது; “இந்தப் படத்தின் பாடல்கள் வெற்றி பெறுவதற்கு கவிஞர் யுகபாரதியின் வரிகள்தான் முக்கிய காரணம்.
சினிமாவை மிகவும் விரும்பித் தயாரிக்கக் கூடிய தயாரிப்பாளர்களில் ட்ரீம் வாரியர்ஸ் பிரபு சாரும் ஒருவர். இந்தப்படம் நிலையானதொரு வெற்றியைப் பெறும்.” என்றார்
தயாரிப்பாளர் S.R.பிரபு தன் பேச்சில் “சகுனி’ படத்தைத் தொடர்ந்து நாங்கள் தயாரிக்கும் படம் இது. ராஜு முருகனின் முதல் படமான குக்கூ படமே நாங்கள் தயாரிக்க வேண்டியதுதான் . அது இடம் மாறிப் போனது .
இந்த நிலையில் இந்த ஜோக்கர் படத்தின் கதையைப் படித்த போது, கண்டிப்பாக நான் இதைத் தயாரிக்க வேண்டும் எனத் தோன்றியது.
படத்தின் ஒளிப்பதிவிற்காக நாங்கள் செழியன் சாரைத் தொடர்பு கொண்ட போது,மிக மகிழ்ச்சியாக ஒப்புக் கொண்டார்.” என்றார்
இயக்குனர் ராஜூமுருகன் குரு சோமசுந்தரத்தினை முதலில் வேறு கதாபாத்திரத்திற்குத் தான் முடிவு செய்து வைத்திருந்தார். ஆனால் அவருடன் பத்து நாள் பழகிய சூழலில் அவருடைய திறமையைத் தெரிந்து கொண்டு,
படத்தின் முதன்மையான முக்கிய கதாபாத்திரத்தினை அவருக்குக் கொடுத்தார். அனைவருக்கும் இது ஒரு வெற்றிப்படமாக அமையும்.” என்றார்
பாடலாசிரியர் கவிஞர் யுகபாரதி “‘ இந்தப் படத்தில் வரும் ‘என்னங்க சார் உங்க சட்டம்’ பாடல் எழுதத்தான் நான் சினிமாவுக்கு வந்தேனோ . இப்படி 15வருடங்கள் nகாத்திருந்தேனோ என்று இப்போது தோன்றுகிறது
ஷான் ரோல்டனின் இசைக்கு மட்டுமல்ல,பாடல் வரிகளுக்கும் நான் மிகப்பெரிய ரசிகன். ‘சூது கவ்வும்’ படத்தில் வரும் ‘எல்லாம் கடந்து போகுமடா’ பாடல் வரிகளில் என்னை பிரமிக்க வைத்தவர் அவர்.
இப்படி ஒரு திரைப்படம் உருவாக பணம் மட்டுமே போதாது. தைரியம் அதை விட முக்கியம். அந்த வகையில் தயாரிப்பாளர்களுக்கு ‘ஜோக்கர்’ குறிப்பிடத்தக்க ஒரு படம்.” என்றார்
ஒளிப்பதிவாளர் செழியன் பேசும்போது ” ஒரு சமூக அக்கறையுள்ள நல்ல படத்தில் நானும் பணியாற்றி இருப்பது எனக்கு பெரிய மகிழ்ச்சி ” என்றார்
நடிகர் குரு சோமசுந்தரம் பேசும்போது ” ‘ஜோக்கர்’ படத்தில் ஏற்கனவே ‘என்னங்க சார் உங்க சட்டம்’பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.
இப்போது இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களும் வெளியாகி உள்ளது. பாடலாசிரியர் யுகபாரதியின் வரிகளில்,ஷான் ரோல்டனின் இசையில் வந்துள்ள பாடல்கள் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.
நிச்சயமாக இந்தப் பாடல்கள் வெற்றி பெறும்.
என்னிடம் சில பேர் , ‘என்ன சார் முதல் படம் ஹீரோவா பண்றீங்க,அதுவும் அரசியல் படமா?’ என்று கேட்டார்கள்,’ இது வெறும் அரசியல் பற்றிய படம் மட்டுமல்ல. இதில் காதல் நகைச்சுவை எல்லாம் உண்டு .
நாடகம் என்பது நடிகருக்கான மீடியம் . டிவி என்பது விளம்பரத்துக்கான மீடியம் . சினிமா என்பது இயக்குனர்களின் மீடியம். அவ்ர்கள் நிச்சயமாக நல்ல படங்களைத் தான் தருவார்கள்.
இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் எனக்கு ‘அல்வா’ சாப்பிடுவது போல அமைந்திருக்கிறது. இந்தப் படத்தில் இயக்குனரிடமும், ஒளிப்பதிவாளரிடமும் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்.
இருவரும் வெளிப்புறப் படப்பிடிப்பு நேரங்களில்,மக்கள் கூட்டங்களுக்கிடையே மிகவும் பொறுமையாக மக்கள அனுசரித்து படப்பிடிப்பினை நடத்தினார்கள். அது ரொம்பப் பெரிய விஷயம் .” என்றார்
நடிகை காயத்ரி கிருஷ்ணா பேசும் போது;” மேற்குத் தொடர்ச்சி மலை’ என்னுடைய முதல் படம். நான் இந்தப் படத்தில் இசை என்கிற கதாபத்திரத்தில் நடித்துள்ளேன்.
இந்தப் படத்தில் நடிக்கும் போது குரு சோமசுந்தரம் மற்றும்ம் மு.ரா அய்யா விடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன்.
‘ஜோக்கர்’ படத்தின் பாடல்கள் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.” என்றார்
விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தன் பேச்சில் “ஷான் ரோல்டன் மற்றும் பிரதீப் ஆகிய இருவர் தான் என்னுடைய குருமார்கள் .
உலகின் தலைசிறந்த இசையமைப்பாளர்களில் ஷான் ரோல்டனும் ஒருவர். ஜோக்கர் படத்தில் அப்படி ஒரு அற்புதமான இசையை வெளிப்படுத்தியுள்ளார்.
சரியான விதத்தில் வாய்ப்புகள் அமைந்தால் ஷான் ரோல்டன் உலகின் தலைசிறந்த, கொண்டாடப்படும் இசையமைப்பாளர்களில் ஒருவராக நிச்சயமாக இருப்பார்.” என்றார்
சதுரங்க வேட்டை இயக்குனர் வினோத் பேசும்போது ” பெரிய நடிகர் நடித்த படத்தை நூறு கோடி வசூல் பட்டியலில் சேர்க்க ஒரு குழு முயல்கிறது .
இந்த நிலையில் சமூக அக்கறை உள்ள இந்த ஜோக்கர் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை ஊடகங்கள் அக்கறையோடு செய்ய வேண்டும்” என்றார்

இயக்குனர் ராஜுமுருகன் பேசும்போது ; படத்தின் தயாரிப்பாளர்கள்,படம் உருவாகிக் கொண்டிருக்கும்போது எந்தவித இடையூறும் செய்யாமல், என்னுடைய வேலையை என்னைச் செய்யவிட்டார்கள்.
இந்தப் படம் ‘Block Buster’ பட வரிசையில் இருக்குமா என்று எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்று நடக்கும்
தமிழகத்தில் இருக்கும் எட்டு கோடி மக்களில் படிப்பறிவு இல்லாத 6 கோடி மக்களைக் குறி வைத்துத்தான் சமூகத்தின் ஆதிக்க சக்தியாக இருக்கும் அரசியல்வாதிகள், பெரு வர்த்தக முதலாளிகள், திரையுலகினர் ஆகியோர் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்..
அதை மற்றும் முயற்சியே இந்தப் படம். படத்தின் கடைசியில் வரும் ஒரு பாடலுக்கு யுகபாரதி ‘வயலில் நடப்படும் பயிர்களின் மணியை நீ உண்ணாமல் போகலாம் , அது உனக்கு தெரியாமல் போகலாம் .
ஆனால் நாளை ஒருவன் அதை உண்பான் . அதில் நீ வாழ்வாய் ‘ என்று எழுதி இருப்பாய் . அதுதான் இந்தப் படம் ” என்றார்
நடிகர் சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் தயாரிப்பாளர் ராஜசேகரப் பாண்டியன் பேசும்போது ” இந்தப் படத்தின் கதையை நான்தான் தயாரிப்பதாக இருந்தது . எஸ் ஆர் பிரபு கொண்டு போய் விட்டார் .
படம் நன்றாக வந்துள்ளது சந்தோசம் ” என்றார்
இயக்குனர் வெற்றிமாறன் தன் பேச்சில்

“ஜோக்கர்’ மாதிரியான கதைக்களம் உள்ள படங்களைக் கவனமாகக் கையாளவேண்டும். இந்தப்படத்தினைத் தயாரிக்க, தயாரிப்பாளருக்கு ஒரு துணிச்சல் வேண்டும்.
தயாரிப்பாளருக்கு என் பாராட்டுக்கள். நடிகர் சோமசுந்தரத்தின் நடிப்பினை ஒரு நாடகத்தில்
பார்த்து பிரமித்துப் போனேன். இரட்டை வேடங்களில் அவ்வளவு அற்புதமாக நடித்திருந்தார்.
அவரை இந்தப் படத்தின் கதாநாயகனாகப் பார்ப்பது மிக்க மகிழ்ச்சி.” என்றார்
இயக்குனர் பாலா
“இந்தப் படத்தினை முதலில் நான் தான் தயாரித்திருக்க வேண்டும். S.R. பிரபு என்னை விட சிறந்த தயாரிப்பாளர்.
படம் நிச்சயமாக வெற்றி பெறும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்றார்