“தமிழ் சினிமாவின் ஹாரி பாட்டர்” – ‘ஜம்புலிங்கம் 3D’ க்கு ஒரு ஜமாய் பாராட்டு !

jumbu 3

MSG மூவிஸ் சார்பில் ஹரி   நாராயணன்  மற்றும் ஷங்கர் பிரதர்ஸ் தயாரிக்க ,  கோகுல்நாத், அஞ்சனா  கீர்த்தி , பேபி ஹம்சி  ஆகியோர் நடிக்க , 

அம்புலி 3D , ஆ ஆகிய வித்தியாசமான படங்களை இயக்கிய ஹரி -ஹரீஷ் இரட்டை இயக்குனர்களின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ஜம்புலிங்கம் 3D. 
 
இந்தப் படத்தின்  90 சதவீதம் ஜப்பான்  நாட்டில் எடுக்கப்பட்டுள்ளது 
 
படத்தின் முதன்மைத் தயாரிப்பாளர் ஹரி   நாராயணன், பல காலமாக  ஜப்பானில்  வாழ்பவர் .
தமிழ் நாட்டில் இருந்து  கலைஞர்களை  ஜப்பானுக்குக் கொண்டு போய்  நாடகங்கள்  மற்றும்  திரைப்படக் கலை   நிகழ்ச்சிகள் நடத்துபவர் . 
ஸ்ரீவித்யா  என்ற  பெண் இசையமைப்பாளர் அறிமுகமாகி  இருக்கும்  படம் இது .  ஒளிப்பதிவு  சதீஷ் . கலை இயக்கம் ரெமியன் . 
வரும் 13 ஆம் தேதி வெளிவர இருக்கும் இந்தப் படத்தை வாங்கி வெளியிடுகிறது சேலம் எம் பி எல் பிலிம்ஸ் . இதற்குக் காரணமாக இருந்தவர் எஸ் வி சேகர் .
இதையொட்டி நடந்த,  படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில், 
 jumbu 1111
ஜப்பானுக்கான  சென்னை துணைத் தூதரக கலாசாரம் மற்றும் தகவல் பிரிவு அதிகாரி  திரு  புக்காவோ ஜுனிச்சி (FUKAO JUNICHI),
 எஸ் வி சேகர், இயக்குனர் பி வாசு, கங்கை அமரன் , ஓய ஜி மகேந்திரன் கிரேசி மோகன், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டு  பாடல்களை வெளியிட்டு வாழ்த்தினார்கள் . 
நிகழ்ச்சியில்  படத்துக்கான இரண்டு  முன்னோட்டங்களும்   நான்கு  பாடல்களும்  திரையிடப்பட்டன . 
உலகப் படங்களை  தமிழ் சப் டைட்டிலோடு  பார்த்துதான் பழக்கப்பட்டு  இருக்கிறோம் .
ஆனால் ஒரு உலகப் படத்தை தமிழிலேயே  பார்க்கப் போகிறோம் என்ற உணர்வை தரும் அளவுக்கு இருந்தன முன்னோட்டத்தில்  உள்ள காட்சிகள் . 
இது தவிர கோகுல்நாத்தின் காமெடியான மைம்  கலைக் காட்சிகள் , அழகழகான   ஜப்பான்  குழந்தைகள்  , (ம்… ம… ஜப்பான்  அழகுப் பெண்களும்தான் ), தமிழ் பேசும் ஜப்பானியர்களான ரஜினி  ரசிகர்கள்  என்று ….
வித்தயாசமான காட்சிகளுடன் மிகுந்த  எதிர்பார்ப்பை  ஏற்படுத்துகின்றன அந்த முன்னோட்டங்கள் . 
jumbu 33
மறுபக்கம் ஜப்பானியப் பெண்கள் மற்றும் ஆண்கள் நம்ம ஊர் குத்துப் பாட்டுக்கு ஆடும் பாடல்கள் பட்டையைக்  கிளப்புகின்றன . 
மேஜிக்,  மைம் கலை , கடத்தப்படும் ஒரு சிறுமிக்கும் , ஜப்பானுக்குப் போயிருக்கும் அப்பாவி  தமிழ் நாயகனுக்கு ஏற்படும் பாசம் , மேஜிக் நிபுணரின் உதவியாளப் பெண்ணோடு  அவனுக்கு வரும் காதல் என்று…
படத்தில் வெரைட்டி வெரைட்டியாய் …..  வெரைட்டிகள் !
இதற்கிடையிலும் “நானே தானா என்ற கேள்வியில் ….”என்ற ஒரு ஒரு காதுக்குள் தேனூற்றும் மெல்லிசைப் பாடலைக் கொடுத்து  இருக்கிறார் இசையமைப்பாளர் ஸ்ரீவித்யா .
வாழ்த்துகள் ஸ்ரீவித்யா ! பெண்கள்  மெட்டி போட்டா மட்டும் போதாது . இது மாதிரி நிறைய  மெட்டும் போடுங்க ஸ்ரீவித்யா . 
பாடலுக்கு ஹரீஷ் ராகவேந்தர் எழுதி இருக்கும் வரிகள் இசையோடு அவ்வளவு இழைந்து போகின்றன .
நிச்சயமாக இந்தப் பாடல்தான் இந்த வருடத்துக்கான சிறந்த மெலடியாக இருக்கும் என்று (ஏழு மாதம் மிச்சம் இருக்கும்போதே) தோன்றுகிறது . 
ஸ்ரீவித்யா
ஸ்ரீவித்யா

தவிர, இந்தக் கோடை விடுமுறையில் குழந்தைகளுக்கான கொண்டாட்டமாக ஜம்புலிங்கம் 3D இருக்கும் என்பதும் புரிகிறது . 

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய பாஸ்கி ” பொதுவாக ஒவ்வொரூ இயக்குனரும் தங்களுக்கென்று  ஒரு வித்தியாசமான பாணியை உருவாக்கிக் கொள்ள முயல்வார்கள் . 
ஆனால் இந்தப் படத்தின் இயகுனர்களான ஹரி ஹரீஷ் இருவரும் ஒவ்வொரு படத்துக்கும் ஒரு வித்தியாசமான பாணியை உருவாக்குபவர்கள். அம்புலி படத்தை 3Dயில் கொடுத்தாங்க .
அடுத்து ஆ  என்ற , தமிழின் முதல் ஹாரர் அந்தாலாஜி (பேய்க் கதைத் தொகுப்புப் )  படத்தைக் கொடுத்தாங்க . 
இப்போ மறுபடியும் ஜம்புலிங்கத்தை 3Dயில் கொண்டு வர்றாங்க . ஆனா இதுல மேஜிக் மைம் செண்டிமெண்ட் அப்புறம் ஜப்பான் எல்லாம்  சேர்த்து  வித்தியாசமா கொண்டு வர்றாங்க .
இந்த 3D கண்ணாடி  தயாரிக்கிறவங்க எல்லாம் , இந்த இயக்குனர்களுக்கு  ஒரு கோயில் கட்டணும் 
jumbu 11
கமல்ஹாசன்  நடித்த  ஜப்பானில் கல்யாண ராமன் படத்துக்குப் பிறகு ஜப்பானில் எடுக்கப்பட்ட தமிழ் படம் இது ” என்றார் . 
படத்தின் முக்கிய வேடத்தில் நடித்திருப்பவளும், ஹரி நாராயணனின்  மகளுமான ஹம்சியைப் பாராட்டிப் பேசிய கிரேசி மோகன் ,” இவ ஜப்பன்லயே பொறந்து வளர்ந்த கொழந்த. ஆனா எவ்வளவு  நல்லா  தமிழ் பேசறா பாருங்க . 
அது மட்டுமில்ல குழந்தைகளைக் கவரும்படி எடுக்கப்பட்டு உள்ள இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரம் இவதான் .
jumbu 111
இது இவளுக்கு முதல் படம் .
ஆனா கொஞ்சம் கூட பதட்டமே இல்லாமல் மெச்சூர்டா சிற்ப நடிச்சிருக்கா ” என்று பாராட்டி,  பொன்னாடை  போர்த்தி வாழ்த்தினார். 
பி .வாசு  தனது பேச்சில் ”  நகைக் கடையில் பொம்மையின் உடம்பில் விதமான அழகிய நகைகள் இருக்கும் . ஆனா அதுக்குப் பக்கத்தில் ஒரு பெண் எளிய உடையில் உட்கார்ந்து வேலை பார்த்துக் கொண்டு இருப்பார்.
jumbu 2
பொம்மை அங்கேயே  இருக்கும் .  ஆனால்  அந்தப் பெண் ஓடியாடி  இயங்குவார் . பொம்மை உயிர் இல்லாதது . பெண் உயிருள்ள மனுஷி . 
அந்த பொம்மை மீது போடப்பட்டு இருக்கும் நகைகள்தான் நவீன தொழில்நுட்பம் . ஆனா அந்த உயிருள்ள பெண்தான் கதை திரைக்கதை . பொம்மை மேல இருக்கும் அந்த நகையை எடுத்து,
 பெண்ணுக்கு அணிவித்தால் எவ்வளவு  சிறப்பாக இருக்கும் ?  அதுபோல   நல்ல கதை திரைக்கதையை எடுத்துக் கொண்டு அதற்கு நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தணும் .  
கதை திரைக்கதை இல்லாத தொழில் நுட்பம் என்பது பொம்மைக்கு நகை போடுவது போல தான் 
இந்தப் படத்தில் உயிருள்ள பெண்ணுக்கு நகைகளை போட்டு அழகு பார்த்திருக்காங்க 
படத்தில் கோகுல்நாத்தின் பங்காளிப்பு பிரம்மாதம் .
jumbu 444
பொதுவாக ஒரு சீனை நடிகரிடம் இயக்குனர் சொல்லி நடிக்க வைக்கலாம் .
ஆனால் இந்தப் படத்தில் கோகுல்நாத் செய்து இருக்கும் மைம் உள்ளிட்ட பல விசயங்கள் இயக்குனர் சொல்லி வருவதல்ல. 
எனது அனுபவத்தில் படத்துக்கு  தனது சொந்த பங்களிப்பை செய்யும் வேலையை சத்யராஜ் சிறப்பாக செய்வார் . ரஜினி சாரும் அப்படிதான். அந்த  வரிசையில் கோகுல்நாத் வருவதற்கு பாராட்டுகள் .
நான் 3D படம் எடுத்தது இல்ல . அதனால ஒரு நாள் இந்த ஜம்புலிங்கம் 3D  ஷூட்டிங் போய் எப்படி இருக்குன்னு பார்த்தேன் . அசந்துட்டேன் .
ஒரு 3D படத்தை இவ்வளவு குறைந்த செலவில் எடுக்க முடியுமா என்று எண்ணி வியந்து இயக்குனர்களான ஹரி ஹரீஷ் இருவரையும் பாராட்டினேன் .
உலகம் சுற்றும் வாலிபன், ஜப்பானில் கல்யாண ராமன் ஆகிய படங்களுக்குப் பிறகு ஜப்பானில் எடுக்கப்பட்டு இருக்கும் இந்தப் படம்  வெற்றி பெற வாழ்த்துகள் ” என்றார் 
ஒய் ஜி மகேந்திரன் பேசும்போது
jumbu 22
” சினிமா என்பது ஒரு ரயில் என்றால் அதில் காலியாக இருக்கிற ஒரு கம்பார்ட்மெண்டைப் பார்த்து ஏறி இருப்பது இந்த இயக்குனர்களின் புத்திசாலித்தனம் .
எல்லோரும் பேய்ப்படம் என்ற கம்பார்ட்மெண்டிலேயே ஏறிக் கொண்டு இருக்க, குழந்தைகள் படம் என்ற கம்பார்ட்மென்ட்டில் இவங்க ஏறி இருக்காங்க . 
இன்னிக்கு பல  நடன நிகழ்சிகளில் கேவலமான அர்த்தம் வருகிற பாடல்களுக்கு எல்லாம்  ஏழு வயசு எட்டு வயசுக்  குழந்தைகளை ஆட வைப்பதை  பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது .
இதுக்கு மார்க் போட ஜட்ஜுகள் வேற. 
உலகம் எங்கும் குழந்தைகளுக்கென்று  தனியாக படங்கள்  வந்து கொண்டுதான் இருக்கின்றன . அது ரொம்ப சிறப்பான விஷயம் . ஆனால் தமிழில் அது மாதிரி படங்கள் வருவதே இல்லை .
அந்தக் குறையைத் தீர்த்து மாபெரும் வெற்றி பெறப் போகிற படம் இது ஒரே வாக்கியத்தில் சொல்வதானால்  தமிழ் சினிமாவின் ஹாரி பாட்டர் என்று எல்லோரும் இந்தப் படத்தைக் கொண்டாடுவார்கள் .
அதில் சந்தேகம் இல்லை ” என்றார் 
எஸ் வி சேகர் தனது பேச்சில், 
jumbu 222
“முதல்ல இந்த புரடக்ஷன் மேனேஜர்களை ஃபெஃப்சியில் இருந்து பிரித்து, புரடியூசர் கவுன்சிலில் சேர்க்கணும். அவங்க பணம் கொடுக்கறவங்க தரப்புக்குதனே வேலை செய்யறாங்க .
ஏன் சொல்றேன்னா இங்கே புரடியூசர்கள் படும்பாடு கொஞ்ச நஞ்சம் இல்ல . 
வருடத்துக்கு பத்து படங்கள் வெற்றி அடையுது . பல படங்கள் தோல்வி அடையுது . ஆனா வருஷம் சுமார் நானூறு படம் வெளியாகாமலே போய்டுது . எவ்வளவு பணம் வீணாகுது . .
நான் இந்தப் படம் பார்த்தேன் . படம் நல்லா இருந்தது . படம் ஆறு ஏழு மாசத்துக்கு முன்னாடியே  முடிஞ்சிட்டாலும்  இதை குழந்தைகளுக்காக மே மாசம்தான் வெளியிடனும் என்று  தயாரிப்பாளர்   உறுதியா இருந்தார் . 
அது எனக்கு பிடிச்சு இருந்தது . நான் சொல்லித்தான்  எம் பி எல் பிலிம்ஸ் இந்தப் படத்தை வாங்கி வெளியிடுது . படம் வெற்றிகரமா ஓடும் ” என்றவர் , 
தொடர்ந்து ” சென்சார் போர்ட்லயும்  நான் இருக்கறதால சில  விஷயங்கள்  சொல்ல வேண்டி இருக்கு . 
படத் தயாரிப்பாளர்கள் சென்சாருக்கு வருவதை முறைப்படி திட்டமிடணும் . ரிலீஸ் தேதியை பிக்ஸ் பண்ணிட்டு கடைசி நேரத்தில் வந்து நிற்கக் கூடாது . ஒரு ஆபீசுக்கு போற மாதிரி வரணும் .
பலி பீடத்துக்கு வர ஆடு மாதிரி வரக் கூடாது. அங்க வந்து கெஞ்சக் கூடாது . 
சில பேரு கியூபுக்கு எல்லாம் படத்தைக் கொடுத்துட்டு அப்புறம் சென்சாருக்கு வருவாங்க . அது தப்பு . ஏன்னா சென்சார்ல  கட் கொடுத்தா ,
அப்புறம் அதை நீக்க நீங்க கியூபுக்கு நாற்பதாயிரம் செலவு பண்ணனும்” என்று , அவர் சொன்னது எல்லாம் பயனுள்ள விஷயங்கள். சபாஷ் எஸ் .வி.சேகர் !
கங்கை அமரன் பேசும்போது , 
jumbu 4
” இந்தப் படத்தின் பாடல்கள் எல்லாம் தெளிவா புரியுது . அதுக்காகவே இசையமைப்பாளர் ஸ்ரீவித்யாவை பாராட்டணும். இந்த பெண் குழந்தை சிறப்பா நடிச்சு இருக்கு .
எல்லாரும் பதினாறாம் தேதி அரசியல் ஓட்டுப் போடப் போறீங்க. அதுக்கு முன்னாடி  13 ஆம் தேதியே போடுங்கம்மா ஒட்டு ஜம்புலிங்கத்தைப் பார்த்து ! போடுங்கய்யா ஒட்டு ஜம்புலிங்கத்தைப் பார்த்து !!” என்றார் .
மிக அற்புதமாக அழகான தமிழில் பேசி எல்லோரையும் பரவசப்படுத்தினார் ஜப்பானுக்கான  சென்னை துணைத் தூதரகத்தில் கலாசாரம் மற்றும் தகவல் பிரிவின் அதிகாரியான திரு  புக்காவோ ஜுனிச்சி ) FUKAO (UNICHI),.
” ஜப்பானில் நடக்கும் பல தமிழ் நிகழ்சிகளில் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு அமைந்தது . அவற்றில் சினிமா தொடர்பானவையும் அடங்கும் .சந்திர முகி படத்துக்கு ஜப்பானிய மொழியில் சப் டைட்டில் எழுதியதும் நான்தான் 
ஜப்பானில் எல்லோருக்கும் டோக்கியோதான் தெரியும் . ஆனால் அங்கிருந்து ஆறு மணி நேரப் பயணம் செய்தால்  , தொயோமா என்ற இடம் வரும் அங்கு அழகான மலைகள் உண்டு . கடல் உண்டு .
FUKAO JUNICHI
FUKAO JUNICHI
பனிக் காலத்தில் பனி கொட்டும். சில மீட்டர்கள் உயரத்துக்கு பனி இருக்கும்  மிக அழகான பகுதி அது . அங்குதான் இந்தப் படத்தின் நிறைய காட்சிகள் எடுக்கப்பட்டன. 
 தமிழ்ப் படங்களை ரசிக்கும் ஜப்பானியர்கள் நிறைய  இருக்கிறார்கள் . நிறைய படங்களை எடுக்க தமிழ்  தயாரிப்பாளர்கள் ஜப்பானுக்கு வர வேண்டும் .
அவர்களுக்கு உதவ நாங்கள் இருக்கிறோம் “
என்று பேசி முடித்த போது, அரங்கமே பரவசத்தோடு  எழுந்து நின்று கை தட்டியது . அவர் பேசியதில் சப் டைட்டில்  , மீட்டர் என்ற இரண்டே ஆங்கிலச் சொற்கள் மட்டுமே இருந்தது .
மற்ற எல்லாம் தமிழ் . இது தமிழ் நாட்டில் நம்மவர்களால் கூட முடியாத சாதனை . அவருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார் எஸ் வி சேகர் . 
இயக்குனர்களில் ஒருவரான ஹரி பேசும்போது ” அம்புலி , ஆ படங்களுக்குப் பிறகு அடுத்து ன்ன செய்யலாம் என்று யோசித்து இப்படி ஒரு கதையை தயார் செய்தோம் .
இதை ஜப்பானில் எடுப்பது பற்றி ஆலோசனை கேட்கத்தான் ஹரி நாராயணனை சந்தித்தோம் . அனால் அவரே படத்துக்கு தயாரிப்பாளராக வந்தார் . இசை அமைப்பாளர் ஸ்ரீவித்யாவையும் அவரே கொடுத்தார் .
ஹரி - ஹரீஷ்
ஹரி – ஹரீஷ்
கோகுல்நாத் , அஞ்சனா இருவரும் மட்டுமல்லாது படத்தில் நடித்துள்ள அத்தனை சிறப்பாக நடித்தனர் 
பகல் இரவு பார்க்காமல் எல்லோரும் வேலை செய்தனர் . படம் விரைவாக எடுத்து முடிக்கப்பட்டது . படம் எல்லோரையும் கவரும் என்று நம்புகிறோம் ” என்றார் .
ஹரீஷ் பேசும்போது “ஜப்பானில் எங்களுக்கு கிடைத்த ஒத்துழைப்பு  மறக்க முடியாதது . அங்குள்ள ஒவ்வொருவர் பெயரையும் சொல்லி நன்றி சொல்ல வேண்டும் ” என்றவர் ,
அப்படி அவர்கள் பெயரை சொன்னதோடு , ஜப்பானிய மொழியிலும் நன்றி சொன்னார். 
தொடர்ந்து பேசும்போது ” இது 3D படம் மட்டும் அல்ல . குழந்தைகளுக்கான 3D படம் . அதே நேரம் பெரியவர்கள், இளைஞர்கள், தமிழை  ரசிப்பவர்கள், ரஜினி ரசிகர்கள் , நல்ல மெலடி பாடல் விரும்பிகள் …
FUKAO JUNICHIக்கு பொன்னாடை  போர்த்தும் ஹரி நாராயணன்
FUKAO JUNICHIக்கு பொன்னாடை போர்த்தும் ஹரி நாராயணன்
மைம் , மேஜிக் போன்ற கலைகளை ரசிப்பவர்கள் , செண்டிமெண்ட் ரசிகர்கள் எல்லோருக்கும் பிடித்த விசயங்களைக் கொண்ட படம் . அனைவரின் ஆதரவும் ஒத்துழைப்பும் வேண்டும் ” என்றார் .
மொத்தத்தில் ஆவலோடு எதிர்பார்க்கும்படி இருக்கிறது,  ஜம்புலிங்கம் 3D படத்தின் பாடல்கள் முன்னோட்டம்  உள்ளிட்ட படம் பற்றிய தகவல்கள் !
வரும் 13 ஆம் தேதி திரைக்கு வருகிறது படம் !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →