தமிழின் ‘ஜங்கிள் புக்’ ஆக, வெளிவரும் ‘ஜம்புலிங்கம் 3D’

jamb0 2
குழந்தைகளைக்  கவர்வதில்  3D படங்களுக்கு இணையே  இல்லை  என்பதை நிரூபிக்கும் வகையில் ,  சமீபத்தில் வெளியான ‘ஜங்கிள் புக்’ திரைப்படம்.  
உலகின் எல்லா மொழிகளிலும்  வெற்றி பெற்று வசூலை  அள்ளிக் குவித்தது .
 
நாலு சுவருக்குள் அடைந்திருந்த குழந்தைகளை வெளிக்  கொண்டு வர உதவியது.  என்றால்  கூட  அது  மிகையில்லை . 
 
அந்த   வகையில் இப்போது தமிழ் சினிமாவின் ஜங்கிள் புக்  என்று கூறப்படும் அளவுக்கு உருவாகி, மே 13 ஆம்  தேதி  திரிக்க வருகிறது ஜம்புலிங்கம்   3D. 
 
jambo 4
‘அம்புலி 3 டி’ மற்றும் ‘ஆ’ திரைப்படங்களை இயக்கிய  ஹரி  – ஹரிஷ் இயக்கி, ஜப்பான் நாட்டில் பல்வேறு தொழில்களில் வெற்றி கண்ட ,
 MSG மூவிஸ் மற்றும் ஷங்கர் பிரதர்ஸ் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘ஜம்புலிங்கம் 3 டி’. 

 
படத்தைப் பற்றிக் கூறும் ஹரி -ஹரீஷ் இரட்டை  இயக்குனர்களில் ஒருவரான  ஹரி  “காட்சிகளால் மனதை மயக்கி, பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைக்கும் திரைப்படமாக இந்த ஜம்புலிங்கம் 3 டி உருவாகியுள்ளது.
தற்போதைய கால கட்டத்தில், மக்கள் யாவரும் புதுப்  புது படைப்புகளை எதிர்பார்க்கின்றனர். 
 
jambo 1
அவர்களின்  எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்யும் வகையில்  பல சுவாரஸ்யமான  விசயங்களையும் இதில் சேர்த்து  இருக்கிறோம் 
 
அது மட்டுமில்லாது வணிக ரீதீயாக   வெற்றி  பெறுவதற்கான எல்லா அம்சங்களும் இந்த படத்தில் நிறைந்துள்ளது.” என்று கூற, 
தொடரும் ஹரீஷ்  ” எனவே  தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் ஜம்புலிங்கம் 3 டி  கண்டிப்பாக வெற்றிப்  படமாக அமையும். 
 
jambo 3
கலகலப்பான கதாபாத்திரத்தில் அஞ்சனா,  கோகுலுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.  முற்றிலும் தனித்துவமான படமாக இந்த ஜம்புலிங்கம் 3D  அமைய வேண்டும் என்பதற்காக, 
 
 90 சதவீத படத்தை நாங்கள் ஜப்பான் நாட்டில் படமாக்கியது குறிப்பிடத்தக்கது ” என்கிறார் .
குழந்தைகள் மட்டுமின்றி ஒட்டு மொத்த குடும்பங்களுக்கும் ‘ஜம்புலிங்கம் 3 டி’  ஒரு கோடை கால விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →