காதல் அகதி @ விமர்சனம்

kadhal 1

ராமையா  சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஓசூர்  ராமையா என்பவர் தயாரிக்க , ஹரிகுமார் ஆயிஷா அசிம் , சுதர்ஷன் ராஜ் , மம்தா  ஆகியோர் நடிப்பில்,

 ஷாமி திருமலை இயக்கி இருக்கும் படம் காதல் அகதி . பகுதி அகதியா? மிகுதியும் அகதியா ? பார்க்கலாம் . 

மாநகரின் முக்கிய காய்கறி மார்க்கெட்டில் கடை வைத்து இருக்கிற — நேர்மையும் வீரமும் நிறைந்த ஒருவனை (ஹரி குமார்) ,  காதலிக்கிறாள் ஒரு பெண் (ஆயிஷா ) . 
அந்தப் பெண்ணின் மாமா மகன் (சுதர்ஷன் ராஜ்) இயக்குனராக ஆசைப்பட்டு சென்னைக்கு வருகிறான் . தன்னை காதலிக்கும் பெண்ணுக்காக அவனுக்கு தனது கடையில் வேலை தருகிறான் நாயகன் . 
kadhal 2
தொழில் எதிரிகளால் நாயகனுக்கு ஏற்பட இருந்த ஆபத்தில் இருந்து அவனை காப்பாற்றுகிறான் இந்த சினிமா கனவு இளைஞன். ஒரு வழியாக இளைஞன் சினிமாவில் பணியாற்றவும் துவங்குகிறான் . 
நாயகனுக்கும் நாயகிக்கும் கனியும் காதல் கல்யாணத்தில் முடிகிறது . அன்றைய இரவில் மீண்டும் வரும் தொழில் எதிரிகள் நாயகனை அடித்த அடியில்,
 அவனுக்கு மன நிலை பாதிக்கப்படுகிறது .எனினும் அவன் மூலம் அவள் தாயாகிறாள் .  
kadhal 4
எட்டு வருடம் கழித்து ஓரளவு குணமாகும் நாயகன் , தன் மகளைப் பார்த்து , அது தன் மனைவிக்கும் அவளது மாமன் மகனுக்கும் பிறந்த குழ்நதை என்று எண்ணி உச்ச பட்ச மூர்க்கத்தனத்தோடு மூவரையும் தாக்க,  , 
அப்புறம் என்ன நடந்தது என்பதே இந்த காதல் அகதி . 
மன நிலை பாதிக்கப்பட்டவனாக தன்னளவில் முடிந்த வரையில் நடித்து இருக்கிறார் ஹரி குமார் . 
ஆயிஷா அவரால் முடிந்த அளவுக்கு உற்சாகமாக நடிக்கிறார் . 
kadhal 3
பாண்டிய ராஜன் , சிங்க முத்து  , பிளாக் பாண்டி லொள்ளு சபா மனோகர் என்று பல காமெடி நடிகர்கள் படத்தில் வந்து போகிறார்கள் . 
ஃபரான் ரோஷன் இசையில் அமைந்த பாடல் காட்சிகளை  ரசித்து எடுத்துள்ளனர் . 
கதை,  திரைக்கதை,  வசனம் ,படமாக்கல் , இயக்கம் என்று எல்லாவகையிலும் இன்னும் நேர்த்தி தேவைப்படும்  படம் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *