பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் , வளர்ந்த பத்மினி (பின்னே, இன்னுமா குட்டி பத்மினி என்று சொல்வது?) ஆகியோர் குத்து விளக்கு ஏற்றினர் .
படத்தின் பாடல்கள் , முன்னோட்டம் ஆகியவை திரையிடப்பட்டன .
படத்தில் கானா பாலா எழுதிப் பாடிய தாயின் பெருமை சொல்லும் பாடல் ஒன்று உள்ளது .
அதை மேடையில் பாடினார் பாலா.
தவிர ”இனிமேல் பெண்களை கிண்டல் செய்வது மதுவின் பெருமை பேசுவது போன்ற வரிகள் வரும் பாடல்களை பாட மாட்டேன்” என்று கூறியவர் ,
குடிக்காதவர்களைப் பாராட்டும்படியான பாடல்களை இப்போது எழுதுவதாக கூறினார் .
நாசர் பேசும்போது ” பாபு கணேஷ் எப்போதும் எதையும் வித்தியாசமாக செய்பவர் . அதனால்தான் கின்னஸ் சாதனை முயற்சிகளை எல்லாம் செய்து வென்றார் .
இந்தப் படத்தின் மூலம் தன மகனை நடிக்க வைக்கிறார் . இருவருக்கும் வாழ்த்துகள் ” என்றார் .
இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளர் ஆர்.கே. செல்வமணி பேசும் போது” பாபு கணேஷ் என் நெருங்கிய நண்பர். குடும்பத்துடன் பழகிடும் குடும்ப நண்பர். என் காலத்தில் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்தவர்.
நான் 30 ஆண்டுகளுக்கு முன் ‘செம்பருத்தி’ எடுத்தபோது அவர் ‘கடல்புறா’ எடுத்தார். இப்போது ‘காட்டுப்புறா’ எடுத்திருக்கிறார். அவர் மகன் அன்று கைக்குழந்தை,
இன்று கதாநாயகனாகி இருக்கிறான்.8 பேக் வைத்திருக்கிறான் .
ஒரு நாள் பாபு கணேஷ் எனக்கு தொலைபேசியில் கூப்பிட்டுப் பேசினார்.
‘என் மகனை நடிகர்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டியான செலிப்ரிட்டி கிரிக்கெட் லீக்.கில் சேர்க்காமல் தவிர்த்து விட்டார்கள் . ஏதாவது செய்ய முடியுமா/’ என்றார்.
‘அது நடிகர் சங்கம் சம்பந்தப்பட்டது. நான் ஒன்றும் செய்ய முடியாதுப்பா” என்றேன்.
என் மனைவி ரோஜாவின் அண்ணன் மகள் என்னிடம் கேட்டாள். ‘என்ன மாமா உங்க ஆளுங்க. ஊத்திக்கிட்டு வந்துட்டாங்க போல..’ என்று அவள் என்னைக் கேலி செய்தாள்.
செலிபிரிட்டி கிரிக்கெட்டில் நம் நடிகர்கள் சரியாக ஆடாததைத்தான் அப்படிச் சொல்லிக் காட்டினாள்.
யாரோ நடிகர்கள் செலிபிரிட்டி கிரிக்கெட் ஆடுகிறார்கள். ஆனால் வெளியில் இருப்பவர்கள் தமிழ்நாடே ஆடுவதாக நினைக்கிறார்கள்..தமிழர்களே ஆடுவதாக நினைக்கிறார்கள். நம் மானம் போகிறது.
நடிகர் சங்கத்துக்கு நான் வேண்டுகோள் வைக்கிறேன் இதுமாதிரி செலிபிரிட்டி கிரிக்கெட்டுக்கு ஆடத்தெரிந்த நடிகர்களை அனுப்புங்கள் .
ஆடத்தெரியவில்லை என்றால் சில மாதம் பயிற்சி கொடுத்து அனுப்புங்கள். இப்படி மானத்தை வாங்காதீர்கள்.
ரிஷிகாந்துக்கு தாணு சார் வாய்ப்பு தருவதாக கூறியிருக்கிறார்.இன்றைக்கு சினிமா மாறியிருக்கிறது.இன்றுள்ள சூழலில் ‘காட்டுப்புறா’வை வெளியிட முடியுமா? இன்றைக்குள்ள சினிமா பழையபடி வருமா?
இன்று ‘படம் ஓடவில்லை ஓடவில்லை ‘ என்கிறோம். எந்த தியேட்டரில் எந்தப் படம் ஓடுகிறது என்று நமக்கே தெரிவதில்லை. ரசிகன் எப்படி வருவான்?
பழையபடி குறிப்பிட்ட திரையரங்குகளில் தினசரி 3 காட்சிகள் முறை மீண்டும் வர வேண்டும். எந்த தியேட்டரில் எந்தப் படம் ஓடுகிறது என்று ரசிகர்கள் மனதில் பதியச் செய்ய வேண்டும்.
சினிமா சூழல் மாறி விட்டது. முதலில் இயக்குனர்களாகிய எங்களை விரட்டினார்கள். இனி தயாரிப்பாளர்களையும் விரட்டப் போகிறார்கள்.
இப்போது சினிமா புரோக்கர்கள் கையில் போய்விட்டடது. புரோக்கர்கள்தான் நம்மை ஆண்டு வருகிறார்கள். உற்பத்தி செய்பவர்கள் வாழ முடியவில்லை, விற்கிறவர்களும் வாழ முடியவில்லை.
இது விவசாயத்தில் மட்டுமல்ல, சினிமாவிலும் வந்து விட்டது. இது என்று மாறும்? ” என்றார் ஆவேசமாக .
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது “பாபு கணேஷும் நானும் திரைப்படக் கல்லூரி காலத்தில் இருந்தே நண்பர்கள் . நான் பரபரப்பாக படங்களை இயக்கிக் கொண்டிருந்த காலத்தில்,
அவர் என்னிடம் பல படங்களில் நடிக்க வாய்ப்புக் கேட்டார் . எனக்கு தரக் கூடாது என்று எல்லாம் எண்ணம் இல்லை . ஆனாலும் ஏனோ கடைசிவரை அமையவில்லை .
ஆனால் இப்போது அவர் உருவாக்கும் இந்தப் படத்தில் என்னை நடிக்க வைத்து உள்ளார் . நான் இதில் பேய் விரட்டும் ஒரு சாமியாராக நடிக்கிறேன் .
நான்கு நாட்கள் வேலை இருக்கும் என்று சொல்லி கூப்பிட்டார் . ஆனால் நான்கே மணி நேரத்தில் முடித்து அனுப்பி விட்டார் .
என்னை எந்த லொக்கேஷனுக்கும் அழைத்துக் கொண்டு போகவில்லை . ஒரு இடத்தில் உட்கார வைத்து புளூ மேட் சிஸ்டத்தில் பின் புலங்களை பொருத்திக் கொண்டு எடுத்து முடித்து அனுப்பினார் .
சினிமா இப்போது அவ்வளவு சுலபம் ஆகி விட்டது . எனக்கு மீண்டும் படம் எடுக்க ஆசை வருகிறது .
நீங்கள் சிக்ஸ் பேக் உள்ள ஹீரோக்களைதான் பார்த்து இருப்பீர்கள் . ஆனால் இந்தப் படத்தில் நடிக்கும், பாபு கணேஷின் மகன் ரிஷி ராஜ் எய்ட் பேக் வைத்துள்ளார் . நான் எண்ணியே பார்த்தேன் .
எய்ட் பேக் வைத்துள்ள ஒரே ஹீரோ இவர்தான் ” என்றார் .
தாணு தனது பேச்சில் ” பாபு கணேஷ் மிக நல்ல பிள்ளை ஆர்வத்துடன் சினிமாவில் ஈடுபடுபவர் . இந்தப் படத்தில் அறிமுகமாகும் அவரது மகனுக்கு எதாவது செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன் .
கலைப்புலி சேகரனிடம் பறக்கும் படை என்ற ஒரு சிறப்பான கதை இருக்கிறது .
அதை வாங்கி வந்தால் ரிஷி ராஜை வைத்து நான் தயாரிக்க தயார் ” என்றார்