பி என் பி கிரியேஷன்ஸ் , பிரைம் அசோசியேட்ஸ் , சவுத் இண்டியன் புரடக்ஷன்ஸ் சார்பில், செங்கோடன் துரைசாமி, நிர்மலா தேவி, எம் ஆர் தாமோதரன் தயாரிப்பில்
எம் ஆர் தாமோதர், விதிஷா, ரியா, சுதா , நிழல்கள் ரவி, சிங்கம் புலி, தமிழ்வாணன், ஜெயச்சந்திரன், ரவிகாந்த் , ஆதி வெங்கடாச்சலம், சபாபதி , சந்தோஷ், மோகன் ரெட்டி, மாஸ்டர் தருண், பிரவீன், நடிப்பில் சலங்கை துரை கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கும் படம்.
கொலைகாரனாக ஆகி குடும்பத்தை நிர்க்கதியாக்கி விட்டுப் போன கணவனைப் போல மகன் ( எம் ஆர் தாமோதர்) ஆகி விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் ஒரு தாய் ( சுதா).
மகனின் நண்பர்கள் கூலிக்குக் கொலை செய்பவர்கள். அவர்களோடு சுற்றும் மகனை கண்ணீரால் திருத்தி வைக்கிறார் தாய். . ஆனால் நண்பர்கள் , மகனின் இருப்பிடத்தைப் பயன்படுத்தி ஒரு கொலை செய்ய, கொலை செய்யப்பட்டவருக்கு வேண்டிய தாதாவின் தம்பி, திருந்தி வாழும் நாயகனை கொல்ல வர , வேறு வழியின்றி அவனைக் கொன்று விடுகிறான் நாயகன்
விஷயம் தெரிந்த அம்மா இறக்கிறார் . நேசித்த பெண் , அத்தை மகள் ( விதிஷா , ரியா) இருவரும் பிரிகிறார்கள்.
நாயகனும் அவனது நல்ல நண்பன் ஒருவனும் பயணம் செய்யும் பொழுதில் மேற்படி தாதா பணத்துக்காக ஒரு தாயையும் மகனையும் கடத்த , அந்தக் குழந்தையை மட்டும் நாயகன் காப்பாற்ற நேர்கிறது .
குழந்தையை அதன் பெற்றோர் யார் எனக் கண்டுபிடித்து ஒப்படைக்க நாயகன் முயல, இதை அறிந்து மீண்டும் நாயகன் மற்றும் அவன் நண்பனுடன் தாதா மோத நடந்தது என்ன என்பதே படம்.
உண்மை நட்பு, துரோக நட்பு, தாதாத்தனம், பண வெறி,, அம்மா மகன் பாசம், மனிதாபிமானம் இவற்றை வைத்து பயணிக்கும் திரைக்கதை.
ராஜ் செல்வா ஒளிப்பதிவில் பொள்ளாச்சி லொக்கேஷன்கள் அருமை
ஸ்ரீகாந்த் இசையில் தீம் மியூசிக் கவனிக்க வைக்கிறது.
குங்ஃபூ சந்துருவின் சண்டைப் பயிற்சி சிறப்பு .
சிங்கம் புலியின் காமெடிக் காட்சிகள், நிழல்கள் ரவிக்கு வேறு குரல் ஆகியவை எடுபடவில்லை .
மினிமம் கேரண்டிக்கு ஏற்ற திரைக்கதையில் முயன்று இருக்கிறார் . ஆனால் படமாக்கல் மேக்சிமம் பழைய பாணிப் படம் என்ற உணர்வைத் தருகிறது