காதல் படத்தில் கொடூர வில்லனாக அறிமுகமாகி காதல் தண்டபாணி என்றே அறியப்பட்ட தண்டபாணி இன்று காலை மரணம் அடைந்தார்.

71 வயது வயதான தண்டபாணி குறுகிய கால கட்டத்துக்குள் தமிழ், தெலுங்கு மலையாளம் கன்னடம் என்று சுமார் 170 படங்களில் நடித்து விட்டவர் இவர் .
நேற்று கூட சரத்குமார் நடிக்கும் சண்டமாருதம் படத்தில் நடித்தவர் இரவு வீடு திரும்பினார் .
இன்று ஞாயிற்றுக் கிழமை அதிகாலையில் உடல் நலம் சரியில்லாமல் சென்னை வடபழனி விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தண்டபாணி மாரடைப்பு காரணமா மரணம் அடைந்தார் .
தகவல் தெரிந்து விரைந்து வந்த சரத்குமார், சமுத்திரக்கனி இயக்குனர் வெங்கடேஷ் ஆகியோர் தண்டபாணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர் .

அவரது உடல் இன்று இரவு அவரது சொந்த ஊரான திண்டுக்கல்லுக்கு கொண்டு போகப்பட்டு நாளை திங்கள் அன்று இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.தண்டபாணிக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.
அந்த அம்மைத் தழும்பு முகமும் அழுத்தமான கரகர குரலும் இன்னும் பல காலம் நினைவில் இருக்கும் .
