கைதி @ விமர்சனம்

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ் ஆர் பிரகாஷ் பாபு, எஸ் ஆர் பிரபு, பிரபாகரன் மற்றும் விவேகானந்தா பிக்சர்ஸ் சார்பில் திருப்பூர் விவேக் ஆகியோர் தயாரிக்க, 

கார்த்தி, நரேன், ஜார்ஜ் , தீனா, பேபி மோனிகா , ரமணா, ஹரீஷ் பெராடி , ஹரீஷ் உத்தமன் நடிப்பில் , மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும்  படம் கைதி . 
 
ஆயுள் தண்டனையை அனுபவித்து முடித்து  விட்ட நிலையில்  அநாதை இல்லத்தில் வாழும் தன் மகள் அமுதாவை (மோனிகா) , முதன் முதலாக பார்ப்பதற்கு  விடுதலையாகிப் போய்க் கொண்டிருக்கும் தகப்பன் டில்லி ( கார்த்தி)
 
சுமார் 840 கோடி ரூபாய் மதிப்புள்ள 900 கிலோ போதைப் பொருளை போலீஸ் அதிகார் பிஜாய் (நரேன்) தலைமையிலான ஐவர் படை கைப்பற்றி கமிஷனர் அலுவலகத்தில் வைக்கிறது . 
 
பொருளை இழந்த வெறி பிடித்த போதை மாபியா தலைவன், பிஜாய் தலைமையிலான அந்த படையை கொன்று , போதைப் பொருளை மீட்க வெறி கொண்டு கிளம்புகிறான் . 
 
கமிஷனர் வீட்டு மது விருந்தில் கலந்து கொண்டு போலீஸ் அதிகாரிகள் பலர் மது அருந்த , போதை மருந்து கலந்த மதுவை அருந்திய பல அதிகாரிகளும் உயிராபத்துக்கு ஆளாகின்றனர் . 
 
போலீசின் மானம் காக்க அவர்களது உயிரை காப்பாற்றுவதோடு , கமிஷனர் ஆபீசை காப்பாற்றும் கடமையும்  பிஜாய்க்கு !
 
கமிஷனர் ஆபீசில் ஒரே ஒரு போலீஸ் அதிகாரியோடு , கல்லூரி மாணவ மாணவியர் சிலரும்  போதைக் கும்பலிடம் மாட்டிக் கொள்கின்றனர் . 
 
பிஜாயின் பணியில் அவருக்கு உதவ கட்டாயப்படுத்தப்படுகிறான் டில்லி . 
 
என்ன நடந்தது ?
 
டில்லியால் தன் மகளை பார்க்க முடிந்ததா என்பதே  இந்த கைதி . 
 
தமிழ் சினிமா இதுவரை பார்த்திராத சில சூழல்களை திரைக்கதையில் கொடுத்து அசத்தி இருக்கிறார் இயக்குனர் லோகேஷ்   கனகராஜ் . அட்டகாசமான படமாக்கல் . நேர்த்தியான இயக்கம் . தமிழ்த் திரையுலகில் தர ரீதியாக தன் இடத்தை உறுதி செய்து கொண்டு இருக்கிறார் லோகேஷ் கனகராஜ் . 
 
கதாநாயகி இல்லாத படம் .
 
டில்லி கேரக்டரை உணர்ந்து உண்டு உயிர்த்து ரசித்து ருசித்து உழைத்து நடித்து சபாஷ் போட வைக்கிறார் கார்த்தி. உடல் மொழிகள், நுண்ணிய பாவனைகள் , குரல் நடிப்பு எல்லாம் அபாரம் . கார்த்தியின் நடிப்புப் பயணத்தில் இந்தப் படம் ஒரு மைல்கல். 
 
மற்ற கதாபாத்திரங்களுக்கும் பொருத்தமான நடிகர்  தேர்வும் சிறப்பான நடிப்பும் !
 
சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு படத்தை நிஜ நிகழ்வாக உணர வைக்கும் ரசவாதம் புரிகிறது . லொக்கேஷன்கள் அபாரம் . 
 
 சாம் சி எஸ் தனது அட்டகாசமான பின்னணி இசையால் நெகிழ்ச்சி, அதிர்ச்சி, திரில் எல்லாவற்றையும் கொண்டு வருகிறார் . 
 
பொன் பார்த்திபன் மற்றும் லோகேஷ் கனகராஜின் வசனங்கள் சந்தர்ப்பம் அமையும்போது எல்லாம் சதிராட்டம் நடத்துகின்றன . அருமை . 
 
சதிஷ்குமாரின் கலை இயக்கம் யதார்த்தம் . 
 
பிலோமின் ராஜுவின் படத் தொகுப்பு படத்துக்கு வேகம் தருகிறது . குறிப்பாக முதல் பாதி அபாரம் . 
 
சண்டைக் காட்சிகளில் தெறிக்க விட்டு இருக்கிறார்கள் அன்பறிவ். 
 
என்னதான்  தாதா கும்பல் என்றாலும் ஒரு கமிஷனர்  ஆபீசை  இப்படியா ஏதோ குக்கிராம போலீஸ் ஸ்டேஷன் போல அடித்து நொறுக்க முடியும் ? இப்படி  பல இடங்களில் லாஜிக்  லக லக . 
 
செண்டிமெண்ட் காட்சிகள் இன்னும் அழுத்தமாக இருந்திருக்கலாம் . 
 
இரண்டாம் பாதி இன்னும் நேர்த்தியாக இருந்திருக்கலாம் . 
 
இப்படி ஓரிரு குறைகள் இருந்தாலும் சித்தரிக்கப்பட்ட சூழல்கள், கார்த்தியின்  ரசவாத நடிப்பு,  தரமான படமாக்கல் இவற்றால் தீபாவளி விருந்தாக அமைந்து இருக்கிறது படம் 
 
கைதி …… ரசிக இதயங்களை சிறை பிடிப்பான் . 
 
மகுடம் சூடும் கலைஞர்கள் 
——————————————–
கார்த்தி, லோகேஷ் கனகராஜ்,  சத்யன் சூரியன், சாம் சி எஸ், பேபி மோனிகா , பொன் பார்த்திபன், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் 
 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *