நடிகர் சங்கக் கட்டிட விவகாரத்தில் சங்கத் தலைவர் சரத்குமாருக்கு எதிராக விஷால் நிற்பது அனைவரும் அறிந்த விஷயம்தான்.
“கட்டிடம் கட்டும் நிதிக்காக நான் ஆர்யா , கார்த்தி மூவரும் இலவசமாக ஒரு படம் நடித்துக் கொடுக்கிறோம் . வரும் லாபத்தை அப்படியே கட்டிடம் கட்டப் பயன்படுத்திக் கொள்ளலாம் . சேர்ந்து நடிக்க விரும்பும் நடிகர்களும் வரலாம் ” என்று விஷால் கூறி இருப்பது, நடிக நடிகையர் வட்டாரத்தில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது .
2ஜி , சி பி ஐ நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இந்த விஷயத்தை கூர்ந்து கவனிக்கும் கலைஞர் கருணாநிதி, விஷாலை மனம் விட்டுப் பாராட்டியதோடு, இரண்டு அடேங்கப்பா தகவல்களை விஷாலுக்கு சொல்லி அனுப்பி இருக்கிறாராம் .
‘”வரும் நடிகர் சங்கத் தலைவர் தேர்தலில் விஷால் போட்டியிட விரும்பினால் அவரை தலைவராக்க திமுக முழு ஆதரவையும் தரும்.
தவிர, விஷால் திமுகவில் சேர விரும்பினால் அவருக்கு உரிய மதிப்பு மரியாதை அந்தஸ்து பதவி எல்லாம் கட்சி வழங்கும் . (இது தளபதிக்கு தெரியுமா தலைவரே ?)
நல்ல பதிலாக சொல்லட்டும் ”
— இவையே அந்த இரண்டு தகவல்கள் .
விஷால் இரண்டையும் ஏற்பாரா ? இல்லை முதல் விஷயத்தையாவது ஏற்பாரா என்பது விரைவில் புரிந்து விடும் என்கிறார்கள்.
பத்து பங்களா ஃபிரீயா வருது . ஆனா அது பாகிஸ்தான்ல இருக்கு. பரவால்லியா?