ஐங்கரன் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் கருணா மூர்த்தி மற்றும் அருண் பாண்டியன் தயாரிக்க ,
பிரபு தேவா , சத்யராஜ் , பிரகாஷ் ராஜ், பூமிகா, இன்ப நிலா , சிறுமி ஜோஷிகா நடிப்பில் தங்கர் பச்சான் எழுதி ஒளிபதித்து இயக்கி இருக்கும் படம் களவாடிய பொழுதுகள் .
உபயோகமான பொழுதுகளா ? பார்ப்போம்
கடன் வாங்கி டாக்சி வாங்கி ஓட்டி தவணை கட்டி மீதி காசில் மனைவி (இன்ப நிலா) ஒரு மகள் ( சிறுமி ஜோஷிகா) என்ற சிறு குடும்பம் கொண்ட,
நடுத்தர வயது இளைஞன் (பிரபு தேவா) ஒரு பயண வழியில் விபத்தில் சிக்கிய பணக்காரர் ஒருவரை (பிரகாஷ் ராஜ்) காப்பாற்றுகிறான் .
மருத்துவ மனையில் சேர்த்து விட்டு அவரது மனைவிக்காக காத்திருக்கும் நிலையில் வந்து நிற்கும் பணக்காரரின் மனைவி இவனது முன்னால் காதலி ( பூமிகா)
அவளுக்கே தெரியாமல் அங்கிருந்து அவன் வெளியேறுகிறான்.
குணமாகும் பணக்காரர், இவனுக்கு உதவ முயல, இவன் தொடர்ந்து அவரை சந்திக்க வர மறுக்க, ஒரு நிலையில் முன்னாள் காதலிக்கு கணவரைக் காப்பாற்றியது தன் முன்னாள் காதலன் என்பது தெரிகிறது .
அவன் குடும்பம் வறுமையில் வாடுவதை பார்க்கும் அவள் பல விதங்களிலும் உதவ முயல அவன் மறுக்கிறான் .
அவனது மனைவியின் மூலம் வற்புறுத்துகிறாள் .
பணக்காரக் கணவரும் தன் நிறுவனத்தில் அவனுக்கு நல்ல உயர் பதவி தருகிறார் .
எல்லாம் சரியாய்ப் போகையில் முன்னாள் காதலனுக்கும் அவன் மனைவிக்குமான அன்னியோன்யத்தை அவளால் ஜீரணிக்க முடியாமல் போகிறது .
அதன் விளைவு என்ன ? இந்தக் காதல் விவகாரம் கணவருக்கு தெரிய வந்ததா இல்லையா ? ஆம் எனில் நடந்தது என்ன ? இல்லை எனில் நிகழ்ந்தது என்ன ? என்பதே இந்த களவாடிய பொழுதுகள் .
தங்கர் பச்சான் எழுதிய சருகுகள் என்ற குறும்புதினமே படமாக மாறி இருக்கிறது .
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்கர் பச்சான் படம் . அந்த மண் சார் தன்மை, அவரது அழகியல் மிக்க ஒளிப்பதிவு , சிறப்பான படமாக்கல் , அழுத்தமான இயக்கம் தூய தமிழில் எழுத்துகள் எல்லாம் மனதைக் கொள்ளை கொள்கின்றன . அருமை . சிறப்பு . சிலிர்ப்பு
நவீன கலை வடிவங்களின் நச்சு, பாட்டாளி வர்க்க சிந்தனைகளில் வந்த மாற்றங்கள் இவற்றை பெரியார் (கவுரவத் தோற்றம் சத்யராஜ்) மற்றும் ஏழைப் பங்காளன் ஜீவா ஆகியோர் தோன்றி பேசும் காட்சி அருமை .
சேரன் எங்கே சோழன் எங்கே பாடலை ” அன்னைத் தமிழ் அரியணை ஏற ஆணையிடு ” என்று முடிக்கும் விதம் மெய் சிலிர்க்க வைக்கிறது . காதல் உரிமையை கண்ணியமாக காட்டி இருக்கும் வகையில் மரியாதைக்குரியவராக தன்னை தக்க வைத்துக் கொள்கிறார் தங்கர் பச்சான் .
பிரகாஷ் ராஜ் சிறப்பாக நடித்துள்ளார் .
பிரபு தேவா ஒகே . பூமிகா அழகு .
இன்ப நிலா ஏழைப் பெண்ணின் இயல்பான மனநிலை காட்டும் கதாபாத்திரத்தில் ஜொலிக்கிறார் . பரத்வாஜ் ஏமாற்றம் .
அழகி படத்தில் காதலி இருந்த இடத்தில் இந்தப் படத்தில் காதலன் இருக்கிறான் . இதுதான் முக்கிய வித்தியாசம் .
தவிர தங்கர் பச்சான் இயக்கிய சொல்ல மறந்த கதை படத்தின் சாரமும் இங்கே இருக்கிறது
காதலன் ஜெயிலுக்குப் போன நிலையில் அப்பாவின் கெஞ்சல் மற்றும் ஆசைக்காக காதலனை மறந்து வேறொருவனை மணக்கும் காதலி ….
எந்த அதிர்ச்சியும் காட்டாமல் காரின் பின் சீட்டில் ஹாயாக உட்கார்ந்து காத்து வாங்கிக் கொண்டு வருவது எல்லாம் என்ன மாதிரியான நியாயம் தங்கர் ?
அப்பா சதி செய்யும் அந்தக் காட்சியை எல்லாம் ஏதோ பெரிய திருப்பம் என்று நினைத்து படத்தில் வைத்து இருக்கிறார் தங்கர் பச்சான் . ஆனால் அப்படி வரல.
இன்றைய சினிமா ரசிகனுக்கு அருமை சற்று அந்நியமாகிவிட்ட பாணியிலான கதை சொல்லல் ஒரு குறையே .
எனினும் களவாடிய பொழுதுகள் .. பெரும்பாலும் கவிதையான பொழுதுகள் .
பெயர் : சு.செந்தில் குமரன்
புனைப் பெயர் : ராஜ திருமகன்
கல்வித் தகுதி : B.E. Mechanical
பிரசுரமான முதல் படைப்பு : கவிதை --
பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில்
தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே
தேவை என்றாராம் ஜெயவர்த்தனே!
நல்ல வேளை.....
தமிழன் ரத்தம் கேட்கவில்லையே
(ஜூனியர் விகடன் )
பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம்
மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது
விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்)
விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு)
கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு)
சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்)
நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்)
பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்)
சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் )
தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி )
நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி )
நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது )
திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்)
நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு )
-- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக)
-- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள்
பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா),
முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் )
அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து
தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462