ஏரி பல பகுதிகளாக பிரிக்கப்பட்டு உள்ளூர் மக்கள் மற்றும் மாடம்பாக்கம் பஞ்சாயத்து இவற்றின் ஆதரவோடு இதுவரை 24 முறை குப்பை அகற்றப்பட்டது. இதனால் 60 சதவீதம் கழிவுப் பொருட்கள் அகற்றப்பட்ட நிலையில் ..
தூய்மை இந்தியா திட்டத்தில் கமல்ஹாசனும் பங்கெடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை ஏற்ற கமல் தனது பிறந்த நாளான நவம்பர் ஏழாம் தேதி காலையில், நீர்ப்பரப்பு மற்றும் சுற்றுச் சூழல் இவற்றின் அவசியத்தை வெகு ஜன மக்களுக்கு கொண்டு செல்லும் நோக்கத்தில், மேற்படி இந்திய சுற்றுச் சூழல் அறக்கட்டளையோடு சேர்ந்து மாடம்பாக்கம் ஏரியை தூய்மைப்படுத்தும் பணியில் நேரடியாக ஈடுபட்டார். பாரதிய ஜனதாவின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனும் கலந்து கொண்டார் .
கமலுடன் இணைந்து மாடம்பாக்கம் பள்ளிகளில் இருந்து பல தன்னார்வலர்களும் பொதுமக்களும் சேர்ந்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர் . 25வது முறையாக நடந்த இந்த தூய்மைப் படுத்தும் பணியால் மாடம்பாக்கம் ஏரி மேற்கொண்டு குறிப்பிட்ட அளவு சுத்தப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சீரமைப்பு பணியில் பெருவாரியான பொதுமக்களை இடம் பெற வைக்கவும் இதோடு சேர்ந்து மாடம்பாக்கம் ஏரியின் நீர் ஆதாரத்தை மீண்டும் சீரமைக்க அரசுடன் சேர்ந்து விஞ்ஞான ரீதியிலான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட இருக்கிறதாம்.
காலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல்ஹாசன் மாலை நான்கு மணிக்கு பத்திரிக்கையாளர்களையும் ரசிகர்களையும் சந்தித்து தூய்மை இந்தியா இயக்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் அதில் தனது நற்பணி இயக்கத்தின் பங்கு , பொது மக்கள் இதில் ஈடுபடவேண்டியதன் அவசியம் பற்றி அழுத்தமாக பேசினார். நற்பணி மன்றத்தின் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கும் ஏழைகளுக்கும் மூன்று சக்கர சைக்கிள் மற்றும் தையல் மிஷின்கள் வழங்கப்பட்டன .
Comments are closed.