இதன் பாடல் வெளியீட்டு விழாவில் கவிஞர் கண்ணதாசனின் அண்ணனும் இந்தியா முழுக்க புகழ் பெற்ற நம்ம ஊர் தயாரிப்பாளருமான ஏ எல் சீனிவாசனின் மருமகள் ஜெயந்தி கண்ணப்பன், உயர்நீதி மன்ற ஒய்வு பெற்ற நீதிபதி கண்ணகி, பழம்பெரும் புகழ் பின்னணிப் பாடகி எல் ஆர் ஈஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர் .
ஜெயந்தி கண்ணப்பன் பேசும்போது ” என் பெயர் ஜெயந்தி கண்ணப்பன் . என் மாமனார் ஏ. எல்.சீனிவாசன் நான்கு முதல்வர்கள் சம்மந்தப்பட்ட படங்களை தயாரித்தவர் .
பீம்சிங், கே எஸ் கோபாலகிருஷ்ணன் , மாதவன் உள்ளிட்ட பல சரித்திரம் படைத்த இயக்குனர்களுக்கு எல்லாம் முதல் படம் கொடுத்து அறிமுகப்படுத்தியவர் .
அதை விட எல்லாம் முக்கியம் . தமிழ் சினிமாவில் பெண் கதாபாத்திரங்களை முன்னிலைப்படுத்தி உருவான பல படங்களையும் பெண்களின் பெயரில் வந்த பல படங்களையும் தயாரித்தவர். பெண் என்றால் பெண், சாரதா, கற்பகம் , ஆனந்தி, சாந்தி இப்படி பல படங்களை சொல்லிக் கொண்டே போகலாம் .
எனது சிறிய மாமனார் கவியரசு கண்ணதாசன் பற்றி நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை . பெண்களின் உணர்வுகளை அவர் பிரதிபலித்த அளவுக்கு எத்தனை பெண் படைப்பாளிகள் கூட பிரதிபலிக்க முடியும் என்பது சந்தேகம்தான் .
இப்போது நாங்கள் படம் தயாரிக்காமல் இருக்கலாம் . ஆனால் நாங்கள் சினிமா பற்றிய சிந்தனைகளில்தான் இருக்கிறோம் . சினிமாவைத்தான் சுவாசிக்கிறோம். மூன்று தலைமுறைகளை சினிமாவில் நான் பார்த்து விட்டேன் .
ஆனால் பெண்களை மையப்படுத்தி படங்களை எடுக்கும் போக்கு குறைந்து விட்டது . பொழுது போக்கு என்ற பெயரில் எதை எதையோ சொல்கிறோம் . அது சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது . பெண்களை போகப் பொருளாகவே பார்க்கும் நிலைக்கு அதுவும் காரணம் ஆகிறது . இந்த நிலை மாற வேண்டும் .
அதே நேரத்தில் சமுதாயத்தில் நடக்கும் எல்லா பாலியல் குற்றங்களுக்கும் ஆண்களைக் குற்றம் சொல்லக் கூடாது . பெண்களும் நாகரீகமான உடை , நல்ல பழக்க வழக்கங்கள் , கண்ணியமான குணம் இவற்றோடு நடந்து கொள்ள வேண்டும் .
நான் நீதிபதியாக இது போன்ற வழக்குகளை சந்தித்தபோது கூட, அந்த பாலியல் குற்றங்களுக்கு பெண்ணும் காரணமாக இருந்தாளா என்பதை மனதில் வைத்துக் கொண்டுதான் வழக்கை அணுகுவேன் .
சில பல சமயங்களில் ஒரு பெண் என்னதான் ஒழுக்கமாக இருந்தாலும் அதையும் மீறி அவளை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கும் ஆண்களை கடுமையாக தண்டிப்பதே சரி . ஐந்து வயது சிறுமியைக் கூட பாலியல் கொடுமைக்கு ஆளாக்கும் மிருகங்கள் இருக்கின்றன, அதற்கு அந்த சிறுமியா காரணம் ? அது போன்ற ஆட்களை தெருவில் நிறுத்திக் கல்லால் அடித்துக் கூட கொள்ளலாம் . தப்பே இல்லை ” என்றார் .
நியாயம் !
இது போன்ற அறிவார்ந்த பெண்மணிகளின் கருத்துக்களை பின்பற்றி இன்றைய தலைமுறை பெண்கள் நடந்தால் , பெண்களுக்கான சமூகப் பிரச்னைகளில் பாதியாவது கண்டிப்பாக குறையும்