ஒன்று பெஞ்ச் ஃ ப்ளிக்ஸ் .BENCH FLIX .
ஆர்வத்தோடு சொந்தப் பணத்தை போட்டு எடுக்கப்படும் குறும்படங்கள் முதற்கொண்டு திரைப்படங்கள் வரை பல்வேறு கால அளவுகளில் எடுக்கப்படும் படங்களை விநியோகம் செய்து தருகிறார் கார்த்திக் சுப்புராஜ் . இதன் மூலமாக படைப்பாளிகள் அவர்களுக்கான சுய அடையாளத்தையும் வருமான வழிகளையும் உருவாக்கிக்கொள்ள வாய்ப்பும் இருக்கிறது . உதாரணமாக இந்த பெஞ்ச் ஃ ப்ளிக்ஸ் இணைய தளத்தில் ஒரு படத்தை பார்க்கும் பார்வையாளர்கள் தாங்கள் விரும்பிய தொகையை அந்த படைப்பாளிக்கு அனுப்பும் வசதியும் இருக்கிறது . இது பற்றிய விவரங்களை www.benchflix.com என்ற இணைய தளத்தில் காணலாம் . தவிர ஆறு சிறப்பான குறும்படங்களை தேர்ந்தெடுத்து பெஞ்ச் டாக்கீஸ் என்ற தனது அமைப்பு மூலம் டிசம்பர் மாதம் திரைக்கு கொண்டு வருகிறார் கார்த்திக் சுப்புராஜ்.
படைப்பாளிகளுக்கு பொருத்தமான திறமையான புதுமுகங்கள் கிடைப்பது சிரமமாக இருக்கிறது . திறமை உள்ளவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது பெரும் சிரமமாக உள்ளது . இந்த இடைவெளியை குறைத்து படைப்பாளிகளையும் வாய்ப்புத் தேடும் கலைஞர்களையும் ஒன்றிணைக்கும் மென் பொருள் மேடை இந்த பெஞ்ச் காஸ்ட் . இதில் வாய்ப்பு தேடும் படைப்பாளிகள் தங்களது புகைப்படம், விவரங்கள் , திறமைகள்,, ஸ்டில்கள், வீடியோக்கள் , அனுபவம் பற்றிய குறிப்புகள் ஆகியவற்றை பதிந்து வைக்கலாம் . அதே படைப்பாளிகள் தங்களுக்கு தேவைப்படும் புதுமுகங்கள் பற்றியும் குறிப்பிட்டு தகவல் தரலாம். இது பற்றிய முழு விவரங்களையும் www.benchcast.com மூலம் அறியலாம் .
நம் நாட்டு மொழிகளில் தயாரிக்கப்படும் படங்களுக்கு உலக அளவில் வெளியாகும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதற்காக , படத்தின் வசனங்களை அர்த்த அளவில் மிக சிறப்பாகவும் காட்சியின் உணர்ச்சியை சரியாக கொண்டு போகும் வகையிலும் மொழி பெயர்க்கும் சேவை இது . தொழில் நுட்பம் , ரகசியம் காத்தல் , தரம், அளவான சம்பளம் , இடைவெளி இல்லாத பணி , பன்மொழி உதவி இவற்றுக்கு உறுதி சொல்கிறார் கார்த்திக் சுப்புராஜ் . இது பற்றிய முழு விவரங்களையும் www.benchsubs.com என்ற இணையதளம் மூலம் அறியலாம் .
இந்த சேவைகளின் தொடக்க விழாவில் பாரதிராஜா கலந்து கொண்டு துவங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கார்த்திக் சுப்புராஜின் இந்த முயற்சிகளின் அவசியத்தை பேசியதும் சிறப்பாக இருந்தது .