நடிகை கஸ்தூரி என்றால் உடனே ‘ குத்துப் பாட்டுக்கு நடனம் ஆடும் முன்னாள் கதாநாயகி’ என்பதுதான் இப்போது பலரும் கொடுக்கும் அடையாளம் . ஆனால் பி பி சி தொலைக்காட்சி நடத்திய மாஸ்டர் மைன்ட் குவிஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அரை இறுதிவரை போன ஒரே தமிழ்நாட்டு ஆளு என்ற பெருமைக்கு சொந்தக்காரர் அவர்.
இப்படி இருக்க, ஒரு குவிஸ் நிகழ்ச்சியை தொலைக் காட்சியில் நடத்த அவரை விட கிளாமர் ப்ளஸ் தகுதி வேறு யாருக்கு இருக்க முடியும் ? அதனால்தான் புதுயுகம் தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஞாயிறு அன்றும் பகல் 11 : 00 மணி முதல் 12 : 00 மணிவரை ஒளிபரப்பாகும் ‘வினா விடை வேட்டை’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வேலையை சிறப்பாக செய்கிறார் கஸ்தூரி.
மாணவர்களின் ஞாபகத் திறனை மட்டும் அடிப்படையாகக் கொண்டு கேள்விகள் கேட்காமல் நுண்ணறிவு மற்றும் மாற்று சிந்தனையை கருத்தில் கொண்டு இந்தியா சம்மந்தமான விஷயங்கள் மற்றும் தேடல்கள் அடிப்படையில் கேள்விகள் அமைக்கப்பட்ட விதத்தில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சி அடுத்த கட்டமாக இந்தியா மட்டுமல்லாது உலகம் சார்ந்த கேள்விகள் மற்றும் தேடல்களுடன் நடத்தப்படுகிறது.
பொதுவாக தொலைக் காட்சி வினா விடை நிகழ்ச்சி என்றாலே புரியாத சம்மந்தமில்லாத கேள்விகளை ஆங்கிலத்தில் கேட்பதே வழக்கம் என்ற நிலையில் இருந்து மாறி தமிழிலும் சுவாரஸ்யமாக கேள்விகள் கேட்கப் படுகின்றன.
பல்வேறு வினா விடைப் போட்டிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அனுபவம் மற்றும் ஆற்றலுடன் புதுயுகம் தொலைக்கட்சியில் ஞாயிறு தோறும் 11 : 00 மணிமுதல் 12 : 00 மணிவரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியால் , சந்துரு என்ற பெயருக்கு பதில் கஸ்தூரி என்ற பெயரைப் போட்டு ”கலக்கறீங்க கஸ்தூரி .. ம்ம்.. பிரம்மாதம் ” என்று பெயர் வாங்கிக் கொண்டு இருக்கிறார் கஸ்தூரி. (நாக்கு மேல பல்லைப் போட்டு நாலு பேரு நம்மளைதான் கேள்வி கேட்கக் கூடாது. நாம கேட்டாலும் காசு . பதில் சொன்னாலும் காசு. சரிதானே கஸ்து?)
Comments are closed.