கண்ணா கணேசன் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் தீபா சங்கர், எஸ் ஜி எழிலன், திடியன், சின்னதுரை , சகுந்தலா, ராஜ அய்யப்பன், சபரீஷ், மணி வாசகன் , வீரமணி, ராணி ஜெயா நடிப்பில் சபரீஷ் ஒளிப்பதிவில், தமீம் அன்சாரி இசையில் விஜய் வேலுகுட்டி படத் தொகுப்பில் எஸ் ஜி எழிலன் எழுதி இயக்கி இருக்கும் படம் கட்டம் சொல்லுது.
நான்கு இளம் ஆண் நண்பர்கள்.. அவர்களது நட்பு, வேலை, காதல், குடும்பம் உறவுகள், சமூகம் அவர்களை பார்க்கும் பார்வை, உறவுச் சிக்கல்கள் ஆக்யவற்றோடு இவற்றில் ஜாதகம் ஜோசியம் இவற்றின் பங்கு அதனால் ஏற்படும் விபரீதங்கள் , கடைசியில் முடிவு என்ன என்பதே அடிப்படைக் கதை .
வரும் முகூர்த்தத்தை விட்டால் இனி தனது மகளுக்கு பெண் கிடைக்காது என்ற நிலையில் மண்டபம் புக் செய்து விட்டு மாப்பிள்ளை தேடும் ஒரு பெண்ணிடம் சொல்லப்படும் கதையாக மேலே சொன்ன நண்பர்கள் கதை விரிகிறது .
கடைசியில் என்ன ஆனது என்பதே கட்டம் சொல்லுது .
எஸ் ஜி எழிலன் எழுதி இயக்கி நாயகனாக நடித்து உள்ளார் . தொடக்கத்தில் சுந்தர் சி யின் பேச்சை போட்டு ஆரம்பிக்கும் விதம் ரகளை ரசனை .
காரைக்கால் பின்னணியில் நடக்கும் கதை.
கலகலப்பான சிச்சுவேஷன் காமெடிகள் படம் முழுக்க இருக்கின்றன . காமெடி திருப்பங்கள் ரசிக்க வைக்கின்றன .
அமைதியாக பேசியே கொல்லும் நபர், முதுகில் சீப்பால் சீவ சொல்லும் தாத்தா என்று எழிலனின் சில அப்சர்வேஷன்கள் பலே ரகம்
மேடை நாடக பாணியில் அமைந்த கதாபாத்திரங்கள், அதீதமாய் நீளும் காட்சிகள் , வசனம், இவையும் உண்டு . அமெச்சூர்த்தனமான நடிக்கும் கிராமிய முகங்கள் நிறைய .
கடைசி காட்சிகளில் மற்றவர்களுக்கு உதவுவது பற்றி சீரியசான நெகிழ்வான விஷயம் ஒன்றும் சொல்கிறார். அருமை. நெகிழ்வு .
உற்சாகமான ஒரு முயற்சி