அபி அண்ட் அபி பிக்சர்ஸ் சார்பில் அபினேஷ் இளங்கோவன், ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்க, வைபவ் , சோனம் பஜ்வா, வரலக்ஷ்மி, கருணாகரன், ஆத்மிகா, ரவி மரியா, ஜான் விஜய் நடிப்பில் டீகே இயக்கி இருக்கும் படம் .
கிராமத்தில் புதையல் இருப்பதாகக் கேள்விப்பட்டு அதைத் தேடி வரும் ஆறு பேர் அடங்கிய கும்பல் அந்த ஊரில் இருக்கும் காட்டேரிகளிடம் சிக்கிக் கொள்கிறது . புதையல் கிடைத்ததா? நடந்தது என்ன ? என்பதே காட்டேரி . அழகிய மலை கிராமம் ஒன்றில் இரவில் நடக்கும் கதை . ஆரம்பப் பாட்டும் ஒரு ஊரையே கொலை செய்வதும் திகைக்க வைக்கிறது . அப்புறம் காமெடி , காம நெடி , அறுவை வசனங்கள் என்று போகும் படம் இடைவேளைக்குப் பிறகு வரும் ஜான் விஜய் , வரலக்ஷ்மி பிளாஷ் பேக்கில் நிமிர்ந்து உட்கார வைக்கிறது.
விக்னேஷ் வாசுவின் ஒளிப்பதிவு, செந்தில் ராகவனின் கலை இயக்கம், எஸ் என் பிரசாத்தின் இசை ஆகியவை சில காட்சிகளில் ஜொலிக்கின்றன .