நீண்ட நீண்ட வசனங்களை பேசி அசத்தும் தம்பி ராமையா அவற்றை விட கடைசியில் சோன்பப்டி என்ற ஒற்றை வார்த்தையில் தியேட்டரையே அதிர வைக்கிறார் .
ஃபார்ச்சூன் பிலிம்ஸ் சார்பில் நவீன்ராஜ் தயாரிக்க, சந்தானம், தான்யா ஹோப் , ராகினி திரிவேதி, கோவை சரளா, தம்பி ராமையா, செந்தில், மன்சூர் அலிகான், பிரம்மானந்தம், சாது கோகிலா நடிப்பில் கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கி வெளிவந்திருக்கும் படம்
எம் ஜே என்ற பிரபல விளம்பரக் கம்பெனி ஒன்றின் முதலாளி ( தம்பி ராமையா) சார்பில் அதன் நிர்வாகி ( சந்தானம்) கொடுக்கும் பிசினஸ் போட்டியை சமாளிக்க முடியாமல் தடுமாறுகிறது அண்ணன் ( மனோபாலா) தங்கை ( கோவை சரளா) என்று இரண்டு பேரை முதலாளியாகவும் ஓர் இளம்பெண்ணை ( தான்யா ஹோப்) நிர்வாகியாகவும் கொண்ட இன்னொரு விளம்பரக் கம்பெனி
இடையில் இன்னொரு விளம்பரக் கம்பெனி முதலாளி (மன்சூர் அலிகான்) அந்த பெண்ணின் கம்பெனிக்கு சப்போர்ட் .
இந்த நிலையில் எம் ஜே விளம்பரக் கம்பெனியின் பொருளே இல்லாத ஒரு டம்மி விளம்பரம் ஒன்றை நிர்வாகி இல்லாத போது முதலாளி வெளியிட்டு விடுகிறார் . அதை நம்பி ஏஜெண்டுகள் பணம் டெபாசிட் செய்கின்றனர். பொருள் இல்லை என்று பணத்தை திரும்பிக் கொடுத்தால் பெயர் கெட்டு விடும் என்ற நிலையில் , விளம்பரத்தில் உள்ளது போல ஒரு ஆரோக்கிய உற்சாக மருந்தை தேடி அலைகின்றனர் .
இது தெரிந்து போட்டிக் கம்பெனி பெண் , மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று வழக்குத் தொடுக்க, குறிப்பிட்ட நாளுக்குள் மருந்து ஒன்றை ரெடி செய்ய , நாயகன் பாங்காக் போய் ஒரு விஞ்ஞானியை ( பிரம்மானந்தம்) பார்க்க, விஷயம் தெரிந்து அதைத் தடுக்க போட்டிக் கம்பெனி சார்பாக நாயகி போக , நடந்தது என்ன என்பதை கலர்புல்லாக கவர்ச்சியாக கமர்சியலாக காமெடியாக கலவரமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் பிரசாந்த் ராஜ்
அர்ஜுன் ஜன்யாவின் இசையில் பாடல்கள் சிறப்பு .
சுதாகர் ராஜுவின் ஒளிப்பதிவு வண்ணமயமும் அழகுமாக இருக்கிறது.
வித்தியாசமான கதையை எடுத்து இருக்கிறார் பிரசாந்த் ராஜ். எல்லா தொழில் நுட்பக் கலைஞர்களிடமும் நடிகர்களிடமும் சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார் .
மிகச் சிறந்த கமர்சியல் பட இயக்குனராக இருக்கிறார்.
படம் முழுக்க அழகான அல்லது கவர்ச்சியான அல்லது பல்வேறு ஷேப் பெண்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள்.
சந்தானம் தனது வழக்கமான பஞ்ச்களில் சிரிக்க வைக்கிறார்.
கொஞ்சம கூட சீரியஸ் இல்லாத திரைக்கதையும் கொட்டிக் குவிக்கப் படும் வசனமும் பலவீனமாகி விட்டது . முதன் முதலாக தமிழுக்கு வந்த நிலையில் இயக்குனர் பிரசாந்த் ராஜ் திரைக்கதை வசன விசயத்தில் சரியான ஒருவரின் துணை இருந்திருந்தால் படம் இன்னும் நன்றாக வந்திருக்கும்