| மோத்தி ஆர்ட்ஸ் தயாரிப்பில் மோத்தி.பா எழுதி இயக்கியுள்ள கோலா படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா .
விழாவில் பேசிய ஸ்டன்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம், “கோலா படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான
மோத்தி.பா போதையை ஒழிக்க வேண்டும் என்ற கருத்தை கோலா படத்தில் சொல்லி இருக்கிறார்.
இந்தக் கஞ்சா தண்ணி போன்ற போதைப்பொருட்களை பயன்படுத்துவோர்கள்தான் நிறைய குற்றங்களைச் செய்கிறார்கள்.
தயவுசெய்து நல்லபழக்கங்களை கைக்கொள்ளுங்கள். கஞ்சா அடித்தால் கொலை செய்யவும்
தயங்க மாட்டார்கள் என்று சொல்லுகிறார்கள். கஞ்சா விற்பவர்களை வெடிகுண்டு வீசி கொலை செய்ய
வேண்டும்.இவர்களை சட்டம் தண்டிப்பதை விட மக்களே தண்டிக்க வேண்டும்.
ஆங்கில மொழியை பேசுவதை பெருமையாக நினைக்கிறார்கள்.
தமிழ் பல ஆயிரம் ஆண்டுகள் பெருமை கொண்டது. தயவுசெய்து தமிழில் பேசுங்கள்.
படத்தின் பாடல்கள் மிக அருமையாக இருந்தது. இந்தப்படம் பெரிய வெற்றிபெற வேண்டும்.” என்றார்
இயக்குநர் மோத்தி.பா பேசும்போது, “இந்தக் கோலா படத்தில் உழைத்த அனைவருக்கும்
நன்று கூறும் விழா தான் இவ்விழா.” என்றார்
கே.பாக்கியராஜ் தனது பேச்சில், “கஞ்சா குடிப்பதைப் பற்றி ஜாக்குவார் தங்கம் கோபப்பட்டார்.
நானே கஞ்சா நிறைய குடித்திருக்கிறேன். சிகரெட்டில் கலந்து கோயம்பத்தூரில் கொடுத்தார்கள்.
சில நேரங்களில் கஞ்சா நல்லவே வேலை செய்யும். ஒருநாள் அது கிர்ர்னு ஏறியபிறகு எல்லாரும்
சிரிச்சிக்கிட்டே இருந்தோம். அப்போதுதான் யோசித்தேன். லைப்ல என்னமோ சாதிக்கணும்னு
நினைத்தோமே..ஆனால் இப்படி இருக்கோமே என்று அன்று தான் தோன்றியது.
புத்தருக்கு போதிமரம் மாதிரி எனக்கு போதைமரம் தான் புத்தி கொடுத்தது.
இப்போது சிகரெட்டையும் விட்டுவிட்டேன்.
போலீஸ்காரர் கதை எழுதி படம் இயக்கி இருப்பதால்
இந்த கோலா படத்தில் நிறைய நல்ல விசயங்கள் இருக்கும்” என்றார் |