விஜய் ஆண்டனி – அர்ஜுன் கூட்டணியில் ‘கொலைகாரன் ‘

தியா மூவீஸ் சார்பில் பிரதீப் தயாரிக்க, விஜய் ஆண்டனி, அர்ஜுன், நடிப்பில் , ஆண்ட்ரூஸ் இயக்கி இருக்கும் படம் கொலைகாரன் . இன்னும் ஓரிரு வாரங்களில் திரைக்கு வரவிருக்கும் இந்தப் படத்தை பாஃப்டா  தனஞ்செயன் வாங்கி வெளியிடுகிறார் .

 படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர்  சந்திப்பில் ட்ரைலர் , டீசர், இரண்டு பாடல்கள் திரையிடப்பட்டன . 

முகேஷ் என்ற இளைஞரின் அற்புதமாக ஒளிப்பதிவு, சைமன் கிங் தந்திருக்கும் இசை இவற்றோடு விஜய் ஆண்டனியின் மேஜிக், கூடுதலாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் என்ற பவர் த்ரில்லான கதை இருப்பது தெரிந்தது . 

விஜய் ஆண்டனி மிக இயல்பான முறையில் அழகாக நடித்திருக்கிறார் . மற்றவர்களும் அப்படியே . 

நிகழ்ச்சியில் இயக்குனர்கள்  சசி, வசந்த பாலன்,  புஷ்கர் – காயத்ரி, வாய்மை செந்தில் குமார், ராதா மோகன், தயாரிப்பாளர்கள் டி. சிவா, பெப்சி சிவா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள் .

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசும்போது, ” ஆரம்பத்தில்  இந்த கதையை நான் தயாரிப்பதற்காக விஜய் அன்டனி அனுப்பி வைத்தார் . ஆனால் கதையில் எனக்கு சில கேள்விகள் இருந்ததால் அப்போது செய்யவில்லை . படம் முடிந்ததும் பார்க்க சொன்னார் விஜய் ஆண்டனி . பார்த்தேன் பிரமாதமாக இருந்தது . நானே வாங்கி ரிலீஸ் செய்கிறேன். ஆண்ட்ரூஸ் இயக்கும் அடுத்த படத்தை நான் தயாரிக்கிறேன் . ராதா மோகன் இயக்கும் படம் ஒன்றையும் தயாரிக்கிறேன்  ” என்றார் .

இயக்குனர் சசி பேசும்போது, ” பிச்சைக்காரன் படம் முடிந்த நிலையில் நான் ஒரு இரட்டை ஹீரோ படத்துக்கு விஜய் ஆண்டனியை கேட்டேன் . இப்போதைக்கு இரட்டை வேடம் வேண்டாம் சார் என்றார் . இப்போது நடித்திருக்கிறார் .  ஒளிப்பதிவும் இசையும் நன்றாக உள்ளது வாழ்த்துகள் ” என்றார் .

அற்புதமாக பேசிய வசந்தபாலன், ” எந்த ஒரு படத்திலும் வாழ்வின்  தரிசனம் இருக்க வேண்டும் என்பது என் ஆசை .  வணிகத்துக்காக கமர்சியல் செக்ஸ் இரண்டும் வைத்தால் கூட அதையும் மீறி எங்காவது அந்த வாழ்வின் தரிசனம் இருக்க வேண்டும் .  சசி இயக்கிய பிச்சைக்காரன் படத்தின் அந்த வாழ்வின் தரிசனம் இருந்தது .

எங்கள் இயக்குனர் ஷங்கர் சார் இயக்கி  ரஜினி சார் நடித்த எந்திரன் படத்தின் இறுதியில் ரோபோ தன் தலையை தானே கழட்டி வைக்கும்போது, , அர்ஜுன் சார் நடித்த முதல்வன் படத்தில் என்னையும் அரசியல்வாதி ஆக்கிட்டீங்களே டா என்ற அந்த கிளைமாக்சில் அந்த வாழ்வின் தரிசனத்தை பார்த்தோம் . இந்த படத்திலும் அது இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்றார் .

 விஜய் ஆண்டனி, ஆண்ட்ரூஸ் இவர்களோடு லயோலா கல்லூரியில் படித்த புஷ்கர் காயத்ரி இருவரும் அப்போதே விஜய் ஆண்டனி  இசை மீது காட்டிய ஆர்வத்தை , ஆண்ட்ரூஸின் திறமையை புகழ்ந்தனர் . 

அர்ஜுன் சாருக்கு இன்னும் முடி கூட கொட்டவில்லை . அப்படியே இருக்கிறார் ” என்றார் ராதா மோகன் . 

டி. சிவா  தனது பேச்சில் , ” மிக எளிமையாக இயல்பாக பழகும் குணம் கொண்டவர் விஜய் ஆண்டனி சார் . சிறந்த உழைப்பாளி. அப்படி ஒரு மனிதரை பார்க்கவே முடியாது. அர்ஜுன் , விஜய் ஆண்டனி காம்பினேஷன் சிறப்பாக வந்துள்ளது. தனஞ்செயன் ஒரு படத்தை எடுக்கிறார் என்றால் அது கண்டிப்பாக வெற்றி பெறும்” என்றார் .

” ஆறு மணி கால்ஷீட் என்றால் அஞ்சு மணிக்கே வந்து விடுவார் விஜய் ஆண்டனி சார் ” என்றார் ஃபெஃப்சி சிவா . 

ஆண்ட்ரூஸ் தனது பேச்சில், ”  இந்தப் படத்துக்கு  விஜய் ஆண்டனி , அர்ஜுன் மற்றும் அனைவரும் கொடுத்த ஒத்துழைப்பு அற்புதமானது ” என்றார் . 

விஜய் ஆண்டனி  தன் பேச்சில், “இந்தப் படம் ஆண்ட்ரூஸின் உழைப்பின் பலன் . அவருக்கு வாழ்த்துகள் . படப் பிடிப்பில் அர்ஜுன் சாரைப் பார்த்து வியந்தேன் . பிச்சைக்காரன் படம் மாதிரி இன்னொரு படம் கொடுக்க முடியுமா என்று தெரியவில்லை . ஒவ்வொரு முறை பிச்சைக்காரன் படத்தை டிவியில் போடும்போதும்  இண்டஸ்ட்ரியில் எனது மார்க்கெட் வேல்யூ கூடுகிறது . சசி சாருக்கு மறக்க முடியாத நன்றிகள்.

அடுத்து வரும் அக்கினி சிறகு, தமிழரசன்,  காக்கி படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்கள் வாழ்த்த வந்துள்ளார்கள் . அவர்களுக்கு நன்றி. பொதுவாக எனக்கு கதாநாயகியோடு கெமிஸ்ட்ரி  இல்லை என்று பலர்  வருத்தப் பட்டார்கள் . இந்தப் படத்தில்  உள்ள கெமிஸ்ட்ரி எப்படி இருக்குன்னு சொல்லுங்க . நன்றி” என்றார் . 


அர்ஜுன் தனது பேச்சில், ” விஜய் அன்டனி என்ற மிகச் சிறந்த மனிதரோடு இந்தப் படத்தில் நான் பணியாற்றி இருக்கிறேன் . கொஞ்சமும்  பாசாங்கு இல்லாத அவரது பண்பு சிறப்பானது . ஆண்ட்ரூ சிறப்பாக படத்தை உருவாக்கி உள்ளார் . படம் எல்லோருக்கும் பிடிக்கும் ” என்றார் . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *