புதுமையான முறை டிக்கட் விற்பனையில் ‘கூத்தன்’

நீல்கிரிஸ்  ட்ரீம் எண்டர்டெயிண்மெண்ட்  தயாரிப்பில்  நீல்கிரிஸ் முருகன்  தயாரித்திருக்கும்  கூத்தன் திரைப்படத்தின்

 இசை வெளியீட்டு  விழா  திரைப்பிரபலங்கள் பத்திரைக்கையாளர்கள் மற்றும் படக்குழுவினர் முன்னிலையில் நடைபெற்றது. 

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக  திரைக்கதைத் திலகம் கே. பாக்யராஜ் , ஜாக்குவார்          தங்கம் ,  நடிகை  அர்ச்சனா, நடிகை நமீதா, நடிகை  நிகிஷா பட்டேல்  ஆகியோர்  கலந்து கொண்டனர்

இசை வெளியீட்டு விழா மேடையிலேயே புது விதமான  டிக்கெட் விற்பனை   முறையை அறிமுகப்படுத்திப் பேசிய தயாரிப்பாளர் நீல்கிரிஸ் முருகன்.“ஒரு மிகப் பெரும்  பிரமாண்ட படத்தின் மூலம் என் மகனை அறிமுகப்படுத்தி  ரசிகர்களுக்கு  பிரம்மாண்டமான படம் பார்க்கும் உணர்வை தர  நினைத்து  இந்தப்படம் தயாரித்துள்ளேன். 

 எந்த விசயத்திலும் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என நினைப்பவன் நான்.  தமிழ் நாட்டில் சின்ன படங்கள் ஓடுவது சிரமமான  விசயமாகிவிட்டது. 

அதை மாற்றி இந்தப் படத்தை அனைவரிடமும் கொண்டு  செல்லவும்,  இதை  வெற்றிப் படமாக்கவும் டிக்கெட் முறையில்  புது முறையை அறிமுகப்படுத்த உள்ளேன். 

ஒரு புதிய ஐடியாவாக படத்தின் டிக்கெட்டை நானே என்நண்பர்கள்  மூலமாகவும் என் நலம் விரும்பிகள் மூலம் இந்த டிக்கெட்டை  விற்பனை  செய்ய உள்ளேன். 

இதறகு எனது நண்பர்கள் அனைவரும் ஒத்துழைக்கிறார்கள். இந்த டிக்கெட்டைகொண்டு  நீங்கள்  தியேட்டர் சென்றால், 

 ஒன்பது நாட்களில் எந்த தியேட்டர்  செல்கிறீர்களோ  அந்தத்  தியேட்டரில் இந்தப் பட டிக்கெட்டை தருவார்கள். டிக்கெட் நீங்கள் தமிழ் நாட்டில் எங்கு வாங்கினாலும் எந்த விலைக்கு வாங்கினாலும்     அதிக டிக்கெட் விலையுள்ள தியேட்டருக்கு நீங்கள் சென்றாலும் இந்த  டிக்கெட் செல்லும். 

தியேட்டர்கள் ஒத்துழைப்புடன் இதை ஆரம்பித்திருக்கிறேன். ஒரு சின்னப் படத்தை 5 லட்சம் பேர் பார்த்தால் அது ஹிட் படம். 

இந்த மேடையிலேயே என் நண்பர்கள் மூலம் 20 லட்சம் ரூபாய் அளவு  டிக்கெட்டை  விற்கிறேன்.  இதைஅவர்கள் சந்தைப்படுத்துவார்கள் .   ஒவ்வொரு  கட்டமாக  இதை   நடைமுறைப்படுத்துவேன். 

இதன்மூலம் பார்வையாளர்களை நேரடியாக நாங்கள் சந்தித்து  தியேட்டருக்கு  அழைத்து வருவோம். மேலும் படத்தையும் மிகப்பெரிய ஹிட் படமாக ஆக்குவேன். 

படத்தின் இசை விழாவிலேபடத்தின் விற்பனை தொடங்கி விட்டது. இந்த முறை  எல்லோராலும் இனி பின்பற்றப்படும்” என்றார்.

இதை அடுத்து பேசிய பிரபலங்கள் இத் திட்டத்தினை வெகுவாக பாராட்டினர்.ஹீரோ ராஜ்குமார்  பேசியபோது, “இந்தப் படத்தின் டைட்டிலை  இயக்கு னர்  அவர் மனைவியிடம் கேட்டு   வைத்தார். 

இந்தப் படத்திற்காக அவர் கடுமையாக உழைத்திருக்கிறார்.  இப் படத்தில் பணிபுரிந்தது மறக்க முடியாத அனுபவம்.  இந்த வாய்ப்பு என்  தந்தையால் கிடைத்தது.

இதில்  நான் என்னால் முடிந்த அளவிலான உழைப்பை தந்திருக்கிறேன். உங்களுடைய  ஆசிர்வாதம்வேண்டும். எனக்கு ஆதரவு தாருங்கள்” என்றார்.

நடிகை நமீதா தனது பேச்சில் , “மேலாளர் மனோஜ்தான் நான் இங்கு வரக் காரணம்  என் வாழ்க்கையில் கொஞ்சம் வெற்றி வரக்காரணம் அவர் தான்.  அவர் தான்  தமிழில் பேசுங்கள் என்று உற்சாகப்படுத்தினார்.மச்சான்ஸ் வேர்ட் உருவானது அப்படித்தான். ஹீரோ ராஜ் நீங்கள் மனோஜ் மூலம்  அறிமுகமாகிறீர்கள் கண்டிப்பாக வெற்றி அடைவீர்கள். 

தண்ணியில்  குதித்து  விட்டதால் நீச்சல் கற்றுக்கொள்ளுங்கள்.திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்.  எல்லோருக்கும் என் நல்வாழ்த்துக்கள். ” என்றார் 

கே பாக்யராஜ் பேசும்போது,  ”நான் உள்ளே வரும்போது டீ ஆர் உணர்ச்சி  பொங்க  பாடிக்கொண்டிருந்தார்.  அவர் மேடைகளில் உணர்ச்சி  வசமாக  பேசிவிடுவதால்  இங்கு வரவில்லை என்றார்கள். 

அதுவும் சரிதான். நான் இந்த மாதிரியான கதையை அடிப்படையாக  வைத்து  ஒரு  கதையை  யோசித்து வைத்திருந்தேன்.ஆனால் இந்தப் படத்தை அவர்கள்  அற்புதமாக       எடுத்திருக்கிறார்கள். டான்ஸ் சம்மந்தமான நாகேந்திர பிரசாத் இதில் நடித்திருக்கிறார். தயாரிப்பாளர்  ஒருபேக்கரியில் வேலை பார்த்து இந்த அளவு முன்னேறியிருக்கிறார்.  எல்லாவற்றிலும்  மிகுந்த  திட்டமிடலுடன் இயங்குகிறார். 

இசை மேடையிலேயே வியாபாரத்தை தொடங்கி விட்டார். இதற்கு அவர்                                                  நண்பர்களுக்குத்தான்  அவர் நன்றி சொல்ல வேண்டும். 

நாயகன்  புதியவர்  போல் இல்லாமல் அதிகமாக உழைத்திருக்கிறார். திட்டமிடலுன்   இயங்கும்  இக்குழு கண்டிப்பாக வெற்றிபெறும்” என்றார் 

ஆர் கே செல்வமணி  தனது பேச்சில் , “இந்தப் படத்தின் இயக்குநர் வெங்கியை  முப்பது வருடமாக தெரியும். 

அவர் அப்போதே ஜீனியஸ்.எங்களுக்கே  தெரியாத பல விசயங்கள் அவருக்கு  தெரியும்.  இயக்குநர் தயாரிப்பாளருக்கு  சண்டை வராத படங்கள்   என்னைப்  பொருத்த வரை விளங்காது. 

என்னுடைய புலன் விசாரணை. படத்தில் ரிலீஸின் போது   என்னை அலுவலக  ரோட்டிலேயே வரக்கூடாது என்றார் என் தயாரிப்பாளர். 

ஆனால் பட ரிலீஸுற்கு பின் என்னை கூப்பிட்டுப் பாராட்டினார். அது போல் இந்தப் படத்திலும் எதாவது மனத்தாங்கல் இருந்தால் பட ஹிட்டுக்குப்

பி றகு நீங்கள் இணைய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். நாயகனின் கண்கள்விஜயகாந்தைப் போல் உள்ளது. அவர் போல் இவரும் மிகப்பெரும் இடத்தை அடைவார்.எல்லோருக்கும் வாழ்த்துக்கள் என்றார்.

ஜாக்குவார் தங்கம் பேசியபோது , ” கூத்தன் நாயகன் பிரமாதமாக நடனமாடியுள்ளார்.  அவர்  ஒரு தமிழர் என்பதில் பெருமை கொள்கிறேன். ஒரு தமிழன்  சூப்பர்  ஸ்டாராக  வர  வேண்டும்.   இவர் வருவார். இது சின்னப் படம்கிடையாது. தயாரிப்பாளர் இதை மிகப்பெரும் படைப்பாக படைத்துள்ளார். படத்தில் பணிபுரிந்த அனைவரும்  நன்றாக வேலை செய்திருக்கிறார்கள். 

படத்தை எல்லோரும் தியேட்டரில் மட்டும் பாருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்தப்படம் நிச்சயமாக வெற்றி பெறும்” என்றார். 

நடிகை அர்ச்சனா பேசும்போது ,”உலகில் முதலில் வந்தது கூத்துதான்.   கூத்தன் நல்ல தலைப்பு. தயாரிப்பளரின் முயற்சியில் நிறைய நேர்மை  இருக்கிறது.

 நல்ல முறையில் படக்குழுவினர் உழைத்துள்ளார்கள். பாக்யராஜ் இந்தப் படத்தில் இருப்பது மிகப் பெரிய பிளஸ். பெண்களுக்கு கண்கள் அழகாக இருப்பது மிகப் பெரிய பிளஸ். இந்தப் படத்தில் நாயகனின் கண்கள் வசீகரமாக இருக்கிறது. அவர் மிகப் பெரிய இடத்திற்கு செல்வார். உங்கள் தந்தை நீங்கள் சினிமா உலகில் நிரந்தர இடத்தை

 பி டிக்கவே இப்படத்தை தயாரித்துள்ளார். அதை மனதில் வைத்து பயணியுங்கள். மிகப் பெரிய வெற்றிஅடைவீர்கள். படத்தை தியேட்டரில் பாருங்கள்.  அதுதான்  சினிமாவிற்கு செய்யும் மரியாதை.படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்” என்றார். 

இசையமைப்பாளர் பால்ஜி , “நான் திரைப்படக் கல்லூரியில் படித்த  காலத்திலிருந்தே மேடையில் இருப்பவர்களை வியந்து பார்த்திருக்கிறேன்.  இவர்களுடன் மேடையை பகிர்ந்து கொண்டது மிகப்பெரிய விசயம்.

இந்தப் படத்தில்  எல்லோரும் ரசிக்கக் கூடிய துள்ளலான இசையை தந்திருக்கிறோம்.  படம் டான்ஸை மையமாக கொண்டது என்பதால் அதை சுற்றி  இசை அமைத்திருக்கிறேன்.

எல்லோரும் ரசிப்பீர்கள் என நம்புகிறேன்” என்றார் பாடலாசிரியர் விவேகா தனது பேச்சில் , “நான் இப்படத்தில் இரண்டு பாடல்களை  எழுதியிருக்கிறேன். இப்படத்தின் இசையமைப்பாளர் கன்னடத்தில் நிறைய இசையமைத்திருக்கிறார். 

எனது நெருங்கிய நண்பர். கதாநாயகன் அற்புதமாக  நடனமாடியுள்ளார்.  அவர்  மிகப்பெரிய இடத்தை அடைவார். 

தயாரிப்பாளர் அற்புதமனம் படைத்தவர். ஒரு பாடல் பதிவிற்காக  ஒரு  ரிசார்ட்டிற்கு  சென்றிருந்தோம். அங்கே அவரது இன்ஸ்டிடுயூட்டில் படித்தவர்கள் அவரை வந்து பார்த்தனர்.

 உடனே ஈன்ற பொழுதினும் பெரிதுவப்பவர் போல் மகிழ்ந்து அவர்களுக்கு பரிசளித்து 

மகிழ்ந்தார்.  அந்தக்குணம் எனக்கு மிகவும் பிடித்தது. இப்படம் நிச்சயம் வெற்றி பெறும்.” என்றார் .படத்தின் நடன இயக்குநர் அசோக்ராஜா , “இந்த ப்படத்தை சின்னப் படம் என்று யாரும் சொல்லாதீர்கள் . இது பெரிய படம் . தயாரிப்பாளர் அவ்வளவு செலவு செய்துள்ளார் ” என்றார் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *