ட்ரீம் வாரியர்ஸ் சார்பில் எஸ் ஆர் பிரகாஷ் பாபு எஸ் ஆர் பிரபு மற்றும் ரமணியம் தயாரிப்பில்
அசோக் செல்வன் , பிரியா ஆனந்த நடிக்க,
த.செ.ஞானவேல் ராஜா எழுதி இயக்கி இருக்கும் படம் கூத்தில் ஒருத்தன் .
படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் .சிவ குமார் , சூர்யா , இயக்குநர் ஞானவேல் , அசோக் செல்வன் , இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா ,
இயக்குநர் ராஜு முருகன் , இயக்குநர் தரணி , இயக்குநர் ராதா மோகன் , ஆர்ட் டைரக்டர் கதிர் , பால சரவணன் , ஆர்ஜே பாலாஜி , கேமரா மேன் பிரமோத் , எடிட்டர் லியோ ஜான் பால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேடையில் மூன்று பாடல்களை பாடகர்களோடு சேர்ந்து இசைத்து லைவ் ஷோ ஆகப்பாடினார் நிவாஸ் பிரசன்னா . பாடல்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருந்தது .
சூப்பர் என்றும் இல்லாமல் வெஸ்ட் என்றும் இல்லாமல் எப்போதும் எதிலும் சராசரி என்று பெயர் வாங்கும் ஓர் இளைஞனின் கதை இது என்பது பாடல்கள் மற்றும் முன்னோட்டத்தில் தெரிந்தது .
இதுவரை தனக்கு அமையாத வித்தியாசமான கெட்டப்பில் இருந்தார் அசோக் செல்வன். கொழு கொழு பிரியா ஆனந்த் !
விழாவில் தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு பேசியபோது, “கூட்டத்தில் ஒருத்தன் எனக்கு மிகவும் பிடித்த கதைக்களம் கொண்ட மிகச்சிறந்த திரைப்படம்.
படத்தின் இயக்குநர் ஞானவேல் எங்கள் குடும்ப நண்பர் அவரை எங்கள் குடும்பத்தில் ஒருவர் என்று கூட சொல்லலாம். ஞானவேல் அவர்கள் திரைப்படம் உருவாக்கும் கலை நன்கு பயின்றவர்.
அவருடைய படத்தை தயாரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நிவாஸ் பிரசன்னா அவருடைய இசையால் எங்களை ஆச்சரியப்படுத்தினார். அவருடைய இசை இப்படத்துக்கு மிகப்பெரிய பலமாகும்” என்றார்
சிவகுமார் தன் பேச்சில் ”இந்தப் படத்தின் தயாரிப்பாளர் மிகச்சிறந்த படங்களைத் தேர்ந்தெடுத்துத் தயாரித்து வருகிறார். அவர் கார்மெண்ட்ஸ் துறையில் வேலை பார்த்து
இப்போது சிறந்த தயாரிப்பாளராக மாறி மாயா , ஜோக்கர் , காஷ்மோரா போன்ற மிக சிறந்த படைப்புகளைத் தயாரித்து வருகிறார். என்னால்தான் படித்து பட்டம் வாங்க முடியவில்லை ,
என் மகனையாவது படித்து பட்டம் வாங்க வைக்கவேண்டும் என்று எண்ணி சூர்யாவை படிக்க வைத்தேன் அவர் இன்று B.com பட்டதாரி. படித்து பட்டம் வாங்கி என்னுடைய வயித்தில் பாலை வார்த்துவிட்டார்.
அவர் படித்து முடித்த பின்பு முதன் முதலில் அம்பத்தூரில் இருந்து சோழிங்கநல்லூரில் வேலைக்குச் செல்வார். அவர் வேலைக்கு சென்ற இடத்தில் யாருக்கும் அவர் என்னுடைய மகன் என்று தெரியாது.
அப்படி இருந்து கடுமையாக உழைத்த அவர் இன்று அதைவிட கடுமையாக உழைத்து நாயகனாக மாறி வெற்றிபெற்று இருக்கிறார்.
அவர் திரையில் மிகப்பெரிய அளவில் சாதிப்பார் என்று நான் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. கூட்டத்தில் ஒருத்தன் இயக்குநர் ஞானவேல் என்னை முதன் முதலில் பேட்டி காண வந்து,
எங்கள் குடும்பத்தோடு ஐக்கியமாகி இன்று அகரம் குழுமத்தின் அறங்ககாவலராக இருந்து வருகிறார். இன்று திறமைமிக்க அவர் இயக்குநராகி இருப்பது எனக்கு மகிழ்ச்சி.
இப்படத்தின் பூஜை மருந்தீஸ்வரர் கோவிலில் காலை 4மணிக்கு நடந்தது அதில் நானும் கலந்து கொண்டேன். எஸ்.ஆர்.பிரபுவை போல் ஒரு தயாரிப்பாளரை கண்டுபிடித்து,
நல்ல படத்தை இயக்கியுள்ள ஞானவேலுக்கு வாழ்த்துக்கள்” என்றார்
இயக்குநர் ராஜு முருகன் பேசியபோது “நானும் இப்படத்தின் இயக்குநர் ஞானவேலும் ஒன்றாகத்தான் விகடனில் வேலை பார்த்தோம்.
நான் போயஸ் கார்டன் அருகே உள்ள ஒரு பாட்டியை பேட்டி எடுக்கச் செல்ல வேண்டும் என்று அனுமதி கேட்டு கடிதம் கொடுக்கும் போது அவர் முதலமைச்சரை பேட்டி எடுக்க வேண்டும் என்று கேட்டு கடிதம் கொடுப்பார்.
நான் கமல்ஹாசன் அவர்களை பேட்டி எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து அவருடைய பி.ஆர்.ஒவின் நம்பரை தேடி எடுக்க ,மூன்று நாட்கள் ஆகிவிடும்.
ஆனால் அவரோ அந்த நேரத்தில் உலகநாயகன் கமல்ஹாசனோடு அமர்ந்து பேசிக் கொண்டு இருப்பார். இதை நான் ஏன் கூறுகின்றேன் என்றால் அவர் அந்த அளவுக்கு ஆற்றல் மிக்கவர்.
அவர் இயக்கியுள்ள “ கூட்டத்தில் ஒருவன் “ திரைப்படம் நிச்சயம் வெற்றி பெறும்” என்றார்
நடிகர் பால சரவணன் தன் பேச்சில் ” கூட்டத்தில் ஒருத்தன் படத்தின் மூலம் “ நடு பெஞ்ச் “ மாணவர்களைப் பற்றிய படத்தை எடுத்திருக்கிறார் ஞானவேல். அவருக்கு என்னுடைய பாராட்டுக்கள்.
நான் பள்ளியில் படிக்கும் போது முதல் பெஞ்ச் மாணவர்களை ஆசிரியர்கள் எல்லோரும் பாராட்டுவார்கள் , கடைசி பெஞ்ச் மாணவர்களை எல்லோரும் அடிப்பார்கள் திட்டுவார்கள்.
ஆனால் இந்த நடு பெஞ்ச் மாணவர்களை யாரும் திட்டவும் , முடியாது அடிக்கவும் முடியாது ஏனென்றால் அவர்கள் பரீட்சையில் தேர்ச்சி அடைந்துவிடுவார்கள் , எல்லா நாளும் கல்லூரிக்கும் வந்துவிடுவார்கள்.
அவர்களை ஒன்று செய்ய முடியாது , அதே நேரம் அவர்களை யாருக்கும் தெரியாமாலும் போய்விடும். அவர்களை பற்றிய படம்தான் இது.
அந்த வகையில் இது தனித்துவமான படமாக இருக்கும். நானெல்லாம் “ Accused“ வகையை சேர்ந்தவன்” என்றார் நடிகர்
இயக்குநர் ஞானவேல் தன் பேச்சில் ” எனக்கு பத்திரிக்கைதான் முதல் முகவரி அதனால் நான் வேலை செய்த பத்திரிக்கையான விகடனுக்கு நன்றி .
நான் முதன் முதலில் பத்திரிக்கையாளன் ஆகப் போகிறேன் என்றதும் எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் பயந்தார்கள். பின்னர் நான் சிவகுமார் அய்யாவோடு இருப்பதை எல்லாம் தொலைக்கட்சியில் பார்த்து ,
என் மீது எங்கள் வீட்டில் நம்பிக்கை வந்தது. நான் இந்த இடத்துக்கு வருவதற்கு முக்கிய காரணம் எங்கள் குடும்பத்தில் உள்ள எல்லோரும்தான்.
நான் படிக்க வேண்டும் என்பதால் என்னுடைய அண்ணன் அவருடைய படிப்பையே தியாகம் செய்தார். அவரால்தான் இந்த இடத்தில் நான் உள்ளேன். அவர் இங்குதான் இருக்கிறார் ,
இங்கு அமர்ந்து நான் மேடையில் இருப்பதை ரசித்து கொண்டிருப்பார் அவருக்கு நன்றி. நான் பத்திரிக்கையில் வேலை பார்க்கும்போது எனக்கு கிடைத்த அனுபவம்தான் இந்த படம்.
ஒருமுறை நான் கார்த்தியைப் பேட்டி காணும் போது , ‘நான் என்னுடைய குடும்பத்தில் நடு பையனாக பிறந்தததால் என் மீது யார்க்கும் பெரிதாக கவனம் இருக்காது.
முதல் பையன் அண்ணன் சூர்யா அம்மா செல்லம் , எங்கள் வீட்டின் கடைசி பிள்ளை என் தங்கை அவர் அப்பா செல்லம். இடையில் பிறந்த நான் எல்லோருக்கும் பொது என்று இருந்து வந்தேன்’ என்று ,
அவர் கூறியதுதான் இந்தப் படம் உருவாவதற்கு முக்கியப் புள்ளி. இந்த உலகத்தை மாற்றி பலர் நடு பெஞ்ச் மாணவர்கள்தான். அப்படி பட்ட நல்ல கருத்தை கூறும் படம்தான் இது” என்றார் இயக்குநர் ஞானவேல்.
விழாவில் சூர்யா பேசியபோது, “படத்தின் இயக்குநர் ஞானவேலின் உழைப்பு மிகவும் ஆழமான உழைப்பாகும். எங்களுடைய அகரம் குழுமத்துக்கு அப்பெயரை வழங்கியது அவர்தான்.
எங்களுடைய அகரத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் ஞானவேல்தான். அவரல்தான் எனக்கு இந்த சமூகத்தில் நடிகன் என்பதை தாண்டி நிறைய நல்ல பெயர் கிடைத்தது.
1500 பேர் இப்போது அகரத்தின் மூலம் படித்துள்ளர்கள் வருகிற 2020ல் 3௦௦௦க்கு மேலான மாணவர்கள் படித்து முடித்து வெளியே வருவார்கள். நான் கூட்டத்தில் ஒருத்தன் திரைப்படத்தை பார்த்துவிட்டேன் .
மிக சிறந்த படம். இது நிச்சயம் உங்கள் அனைவரையும் யோசிக்க வைக்கும் படமாக இஇருக்கும். அசோக் செல்வன் இந்த கதைக்கு கன கச்சிதமாகப் பொருந்தி இருக்கிறார்.
சிறு வயதில் இருந்து அவரை பார்த்து வருகிறேன். அவருடைய நடிப்பு மிகவும் அருமையாக உள்ளது நிவாஸ் கே பிரசன்னாவின் இசை நிச்சயம் படத்துக்கு பலம் சேர்க்கும். அவருடைய இசையே வேறு
அந்த இசை மிக துல்லியமான இசை. சமீபத்தில் நான் பார்த்ததில் மிக சிறந்த லைவ் ஷோ இவர் இப்போது நடத்தியதுதான்” என்றார் சூர்யா