நம்பிக்கையான ‘குரங்கு பொம்மை’

ku 1

ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் LLP தயாரிப்பில் பாரதிராஜா, விதார்த் நடிப்பில் நித்திலன் இயக்கத்தில், உருவாகி இருக்கும் படம் “குரங்கு பொம்மை”

படத்தின்  பாடல்கள் வெளியீட்டு விழாவில்  பாரதிராஜா, நடிகர் எஸ்.வி.சேகர்,  மனோபாலா, ஆர்.  பார்த்திபன், இயக்குநர் தரணி,  சிபிராஜ்,  விதார்த், 

இப்படத்தில் நடித்திருக்கும் தயாரிப்பாளர் நடிகர் பி.எல்.தேனப்பன், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, நடிகர் மைம்கோபி,

டான்ஸ் மாஸ்டர் ராதிகா, ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் LLP  நிறுவனத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர் கண்ணன், ஆகியோர் கலந்துகொண்டனர்.

ku 2

நிகழ்வில் படத்தின் முன்னோட்டமும் , பாடல்களும் திரையிடப்பட்டன.

நிறைய நிகழ்வுகளுடன் , ஆக்ஷன் காட்சிகள், நல்ல வசனங்கள்  மற்றும் சிறப்பான கட்டிங்  இவைகளோடு கவனம் கவர்ந்தது முன்னோட்டம் .பாடல்கள் உயிர்ப்புடன் இருந்தன .

இரண்டாவது முன்னோட்டத்தை கிட்ட வாங்க ஒரு  ரகசியம் சொல்றேன் என்ற ரீதியில் நாயகி பேசும்போது முடித்த விதம் அழகு

நிகழ்ச்சியில்  பாரதிராஜா பேசுகையில், “பொதுவாக இந்த மாதிரி நிகழ்ச்சிகளுக்கு நான் வர விரும்புவதில்லை. வருவதில்லை. அதிலும் இது நானே நடித்திருக்கும் படம் வரமாட்டேன் என்றுதான் சொன்னேன்.

ஆனாலும் இந்த படத்தின் இயக்குநருக்காக வந்தேன். இந்த படத்தின் இயக்குநர் நித்திலன், வளர்ந்து வரும் தளிர். அந்த தளிரைப் பாராட்டவே வந்தேன். 

ku 8

பார்க்க ரொம்ப அமைதியாக இருக்கும் நித்திலன்  மிக ஆழமான சிந்தனை உடைய இளைஞன். அவனது குறும்படம், “புன்னகை வாங்கினால், கண்ணீர் இலவசம்” பார்த்துவிட்டு ,

அவன்மீது மிகுந்த பொறாமை கொண்டேன். அந்த அளவு திறமைசாலியான பையன். அவன் இயக்கிய இந்தப் படத்தில், நான் பாரதிராஜா என்பதை ஓரமாக தூக்கி போட்டுவிட்டு ,

நடிகனாக என் வேலையை மட்டும் செய்திருக்கிறேன். நித்திலன் நிச்சயம் மிகப்பெரிய இயக்குநராக பாராட்டப்படுவான். என் வாழ்த்துகள்.

விதார்த், மிக வீரியமான நடிகன், பெங்காலி சினிமாக்களையும் மலையாள சினிமாக்களையும் பார்க்கும்போது அந்த நடிகர்களின் மிக யதார்த்தமான நடிப்பை பார்த்து பிரமிப்பேன்.

ku 6

விதார்த், அப்படி ஒரு நடிகன். தமிழ் சினிமாவில், நடிப்பது தெரியாமல் நடிக்கக்கூடிய ஒரே நடிகன் விதார்த். நிச்சயம் பெரிய இடத்தை பிடிப்பான். விரைவில் நடிப்பிற்காக தேசிய விருது வாங்குவான்.

அவனுக்கு என் வாழ்த்துகள். இந்த படத்தின் ஒட்டு மொத்த நடிகர், நடிகைகளுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் வாழ்த்துகள்” என்றார்.

பார்த்திபன் பேசுகையில், “இயக்குநர் இமயம், பாரதிராஜா அவர்களை பாராட்டுவதற்கு வாழ்நாள் போதாது. தமிழ் சினிமா ஒட்டுமொத்தமாக பாரதிராஜா அவர்களுக்கு ஒரு பெரிய பாராட்டு விழா எடுக்க வேண்டும்.

இந்த படத்தின் தலைப்பு ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது. எனவே இயக்குநர் இமயம் அவர்களை வித்தியாசமாக பாராட்ட ஆசைப்படுகிறேன்.

ku 3

பாரதிராஜா நல்ல இயக்குநர்னு எல்லாரும் சொல்வாங்க. பாரதிராஜா சிறந்த மனிதர்னு சொல்வாங்க. ஆனா, நான் என்ன சொல்றேன்னா பாரதிராஜா ஒரு சிறந்த “குரங்கு”.

குரங்கு நான்கு எழுத்து. கு / நல்ல குணவான். ர / சிறந்த ரசனையாளர். ங் / இங்கிதம் தெரிந்தவர். கு / குவாலிட்டியானவர்

இதுதான் அந்த குரங்குக்கு அர்த்தம்” என்றார்.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய நிர்வாக தயாரிப்பாளர் கண்ணன்

kul

” என் நண்பன் விதார்த் சொல்லி நான் இந்தக் கதையைக் கேட்டேன் .

இயக்குனரின் குறும்படமும் பார்த்தேன். சொன்ன கதையும் நன்றாக இருந்தது . படத்தையும் இயக்குனர் நித்திலன் சிறப்பாக எடுத்துள்ளார் ” என்றார் .

இசையமைப்பாளர் பி. அஜனீஷ் லோகநாத்

ku 33

“நான் கன்னடப் படங்களுக்கு இசை அமைத்துள்ளேன் . தமிழில் எனக்கு இது முதல் படம் .

எம் எஸ் விசுவநாதன் , இளையராஜா, ஏ ஆர் ரகுமான் போன்ற மேதைகளை உருவாகிய தமிழ் சினிமா உலகில் இணைவதில் பெருமைப்படுகிறேன் ” என்றார்

நடிகர் குமாரவேல் தன் பேச்சில் ” இந்தப் படத்தின் இயக்குனர் மிக அருமையான திரைக்கதை அமைத்து இருந்தார் .

ku 22

அதுவே என்னை நடிக்க வைத்தது ” என்றார் .

நடித்திருக்கும் தயாரிப்பாளர் தேனப்பன் ” என்னை நடிக்க அழைத்தபோது நான் ஒத்துக் கொள்ளவில்லை . காரணம் எனக்கு நடிக்கத் தெரியாது .

எனவே நடிக்கிறேன் என்ற பெயரில் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு தயாரிப்பாளரின் பணத்தை வீணாக்க நான் விரும்பவில்லை .

ku 44

ஆனால் டைரக்டர் நான்தான் வேண்டும் என்று உறுதியாக இருந்தார் . அவர் சொன்னதை செய்தேன் . இப்போது எல்லோரும் என் நடிப்பைப் பாராட்டுகிறார்கள் ” என்றார் .

நாயகி டெல்னா டேவிஸ் பேசும்போது “எல்லாருக்கும் என்னோட நமஸ்காரம். நான் ஏன் முதலில் மலையாளத்தில் நமஸ்காரம் சொல்கிறேன் என்றால், 

நான் கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாக வந்திருக்கிறேன். நான் ஒரு மலையாளி என்பது உங்களுக்கு தெரிவதற்காகத்தான். எனக்கு சினிமா ஆசை சுத்தமா மனதில் கிடையாது.

ஆனால், எப்படியோ இன்று உங்கள் முன் நடிகையாக நிற்கிறேன். சினிமா நடிகையாக எவ்வளவு நான் இருப்பேன் என்று சொல்ல முடியாது. நாளை ஒருவேளை நான் அரசியலுக்கு வரலாம், கிரிமினல் லாயர் ஆகலாம்.

ku 9

அல்லது உங்களைப்போல ஒரு ஜர்னலிஸ்ட் ஆகலாம். ஏனென்றால் அதில்தான் எனக்கு விருப்பம். ஆனால் நான் எப்படி ஆனாலும் நான் குரங்கு பொம்மை கதாநாயகி என்றுதான், 

என்னை முதலில் அறிமுகம் செய்து கொள்வேன். அந்த அளவுக்கு இந்தப் படம் இருக்கும். எனக்கு அப்படி ஒரு இடத்தை குரங்கு பொம்மை வாங்கித்தரும்”என்றார்.

படத்தில் நடித்திருக்கும் கர்ண ராஜா “நான் தோட்டா தாரணி சாரிடம் உதவியாளராக இருந்தவன் . விதார்த்,  நான் தயாரிப்பாளர் கண்ணன் மூவரும் சின்ன வயது முதலே நண்பர்கள் .

இந்தப் படம் ஆரம்பித்தபோது என்னை கேஷியராக அழைத்தார்கள்.

ku 66

அப்படியே ஒரு கேரக்டரும் கொடுத்து நடிக்க வைத்தார்கள்” என்றார்

கதாநாயகன் விதார்த் தன் பேச்சில் ”இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் இந்தப் படத்தில் மிக மிக சிறப்பாக நடித்திருக்கிறார். அவருடன் எனக்கு நிறைய காம்பினேஷன் காட்சிகள் இல்லை.

ஆனால், அவரது காட்சிகள் நடக்கும்போது அருகில் இருந்து கவனிப்பேன். மிக யதார்த்தமாக நடித்திருக்கிறார் என்பதை விட வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

அதனால் நிச்சயமாக இந்த படத்தில் சிறந்த நடிப்பிற்காக தேசிய விருது நிச்சயம் வாங்குவார்,

இந்த படம் மிக சிறப்பான படம். நித்திலன் மிக திறமையான இயக்குநர். இந்த படத்தில் நான் நடித்திருப்பதால் எனக்கு நான்கு படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது.

அதோடு, நான் இப்போது இயக்குநர் இமயம் இயக்கும் படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறேன். ஏன் இதைச்சொல்கிறேன் என்றால், இது எல்லாம் அமைய நித்திலனும் குரங்கு பொம்மையும்தான் காரணம்.

ku 55

எனவே நித்திலனுக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். இந்த படம் உருவாக என் நண்பர்கள் கண்ணன் மற்றும் கர்ணா ராஜா மிக முக்கியமான காரணம்.

அவர்கள் இருவருக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்கிறேன்.

பாரதிராஜா படத்தில் நடிப்பது அவ்வளவு கஷ்டம், சம்பளம் தரமாட்டார், திட்டுவார், அடிப்பார் என்று சொல்வார்கள். ஆனால், பாரதிராஜா அவர்கள் என்னிடம் கதை சொன்னதும், 

உனக்கு இவ்வளவு இலட்சங்கள் சம்பளம் தருவேன் என்று ஒரு நல்ல தொகையை சொன்னார். நானும் சரி என்றேன். அவர் என்ன தொகை சொன்னாரோ,

அதே அளவு தொகை ஒரு கடன்காரருக்கு நான் உடனடியாக கொடுக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் நான் அப்போது இருந்தேன். பாரதிராஜா சார் என்னை அழைத்து கதை சொன்னதும்,

எனக்கு அட்வான்ஸ் பணத்தை செக்காக கொடுத்தார். சம்பளமாக சொன்ன தொகையில் ஒரு கால்வாசியை அட்வான்ஸ் செக்காக கொடுத்திருப்பார் என்று நினைத்தேன்.

ku 7

ஆனால் சம்பளமாக பேசிய முழுத்தொகையையும் ஒரே செக்’காக கொடுத்தார். நான் அதை எதிர்பார்க்கவில்லை. உடனே அந்த செக்கை வைத்து என் கடனை திருப்பிகொடுத்து ,

அந்த இக்கட்டான சூழலில் இருந்து தப்பித்தேன். அதே மாதிரி அவ்வளவு அழகாக அன்பாக நடிக்கச் சொல்லிக் கொடுத்தார்.

அவர் டைரக்ஷனில் நடிப்பது அவ்வளவு சுகமாக இனிமையாக எளிதாக சுவாரஸ்யமாக இருந்தது அந்தப்படம் வந்ததும் என் வளர்ச்சி அடுத்த லெவலுக்கு கண்டிப்பாக போகும் என்றார்.

இயக்குனர் நித்திலன் தன் பேச்சில் ” முதல் படத்திலேயே பாரதிராஜாவை இயக்கியது என் பெருமை . படப்பிடிப்பில் நான் டெக்னிகலாக சில தவறுகள் செய்தபோது எனக்கு சொல்லிக் கொடுத்தார் .

அந்த வகையில் அவரின் சிஷ்யனாக இருந்த திருப்தியும் கிடைத்தது . அதே நேரம் அவர் ஒரு பாணியில் நடிக்க நான் ஒரு பாணியை சொன்னபோது மறு பேச்சு பேசாமல் அப்படியே செய்தார் .

ku 77

விதார்த் இல்லை என்றால் இந்தப் படமே இல்லை . அவரை மறக்க முடியாது . படம் ஆரம்பித்த அடுத்த நாளே நின்று போகும் சூழல் வந்தது .

அப்போது தயாரிப்பாளர் கண்ணன் மிக திறமையாக செயல்பட்டு தவறானவர்களை நீக்கினார் . ஆர்ட் டைரக்டர், ஒளிப்பதிவாளர் , இசை அமைப்பாளர் , என்று எல்லோருமே சிறப்பாக அமைந்த படம் இது.

பாரதிராஜா சார், விதார்த், இசை, திரைக்கதை என்று நான்கு விசயங்களில் விருது பெற வாய்ப்புள்ள படம் இது   ” என்றார்

வாழ்த்துகள்!

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *