சென்சாருக்கே டுவிஸ்ட் கொடுத்த ‘குரங்கு கைல பூ மாலை’

25
பொதுவாக ஒரு படம் பற்றிப் பேசும் போது ”எங்க படத்தில் ஹீரோ  இவராக்கும் ; ஹீரோயின் இவராக்கும் ;   இசை அவர் ; ஒளிப்பதிவு இவர்” என்று  இயக்குனரும் தயாரிப்பாளரும்  பெருமையுடன் பேசுவது வழக்கம். அதில் தப்பும் இல்லை.

ஆனால் ஓர் இயக்குனர் ” எங்க படத்தின் முதல் ஹீரோ கதை திரைக்கதைதான்” என்று  எஃ கு  உறுதியோடு கூறுவதும்,  அதை படத்தின் தயாரிப்பாளர் முறுக்குக் கம்பி உறுதியோடு வழி மொழிவதும் லேசுப்பட்ட விஷயமா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். அது ரொம்ப சந்தோஷமான விஷயம் கூட அல்லவா ?

அந்த இயக்குனரின் பெயர் ஜி.கிருஷ்ணன் . தயாரிப்பாளரின் பெயர் கே. அமீர் ஜான் .

அது என்ன படம் ? அப்படி என்ன கதை ? என்கிறீர்களா ?

சாய் அமீர் புரடக்ஷன் சார்பில் கே. அமீர் ஜான்  தயாரிக்க , ஜகதீஷ், கவுதம் கிருஷ்ணா , பிரவீன் குமார் , கணேஷ்,  சாந்தினி , நிஷா … இப்படி பல புதுமுகங்கள் இவர்களுடன் இயக்குனர் சரவண சுப்பையா நடிக்க , கதை திரைக்கதை வசனம் எழுதி ஜி.கிருஷ்ணன் இயக்கி இருக்கும் படம் இந்த ‘குரங்கு கைல பூமாலை’
இந்த ஜி.கிருஷ்ணன் பற்றி அடுத்து வரும் செய்திக்காக உணர்ச்சிவசப்பட்டு சல்யூட் எல்லாம் அடிக்கக் கூடாது . ஒகேவா ?
நடிகை அமலா  பாலை விகடகவி என்ற படத்தின் மூலம் முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர் இவர்தான் . (”இப்போ அமலா பால்கிட்ட கால்ஷீட் கேட்கவேண்டியதுதானே ?”என்று ஒரு பத்திரிக்கை சகா கேட்ட போது “வேண்டாம் சார்….. அவங்க எல்லாம் வளர்ந்து எங்கயோ  போய்ட்டாங்க . நாம இன்னொரு அமலா பாலை” பொங்க வைப்போம் , அடச்சே ! “உருவாக்குவோம்”  என்கிறார் )
27
அடுத்த கேள்வி அப்படி என்ன கதை என்பதுதானே ?
தான் உயிருக்குயிராக நேசித்த காதலி தன்னை ஏமாற்றியதால் மனம் கெடும் ஒருவன் , தன் வலையில் சிக்கும் எல்லா பெண்களையும் காதலிப்பது போல நடித்து படுக்கையில் வீழ்த்தி   அனுபவித்து விட்டு  வீசி எறிகிறான். இன்னொருவன் ஒரே பெண் மீது  தீவிர ஆசை வைத்து அவளையே அடைய நினைக்கிறான் . முறைமாமன் ஒருவன் ஒரு பெண்ணை , அவள் விருப்பம் பற்றிக் கவலைப்படாமல் திருமணம் செய்தே தீருவேன் என்று அடாவடி செய்கிறான் .

இன்னொருவன் ‘தனக்கு திருமணமே வேண்டாம் . ஆனால் தினமும் ஒரு பெண் படுக்கைக்கு வேண்டும்’ என்று வாழ்கிறான்.

இந்த நாலு பேரிடமும் ஒரே பெண் சிக்கினால் அவள் கதி  என்ன என்பதுதான் இந்தப் படமாம் .
படத்தில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் .
 29
நாலு பேரும் ஒரே பெண்ணை குறிவைப்பது  நான்கு கேரக்டர்களுக்கும் படத்தின் இறுதியில்தான் தெரிய வருமாம் . படத்தில் வரும் இருபத்தைந்து கேரக்டர்களும் கிளைமாக்சில் வருவார்களாம்.
“இந்த உலகத்தில் எல்லோருமே கெட்டவர்கள் ஆகிக் கொண்டு இருக்கிறார்கள் . நல்லவர்கள் குறைகிறார்கள் . ஒரு கெட்டவன் இருந்தால் பல நல்லவர்களை கெடுக்க முடிகிறது . சில சமயம் கெட்டவர்கள்  நல்லவர்கள் ஆவதும் உண்டு .
ஒரே நேரத்தில் பல பெண்களை விரும்பும் ஆண்கள் மட்டுமல்ல. ஒரே நேரத்தில் பல ஆண்களை மயக்கும் பெண்களும் பெருகி விட்டார்கள் . இவர்களை  எல்லாம் இந்தப் படம் வெளிச்சம் போட்டுக் காட்டும் ” என்கிறார் இயக்குனர் .
படத்தை பார்த்த சென்சார் முதல் பாதி முடிந்த போது கொந்தளித்து விட்டார்களாம் . “என்ன இப்படி எல்லாம் மோசமாக காட்சிகள் வைத்து இருக்கிறீர்கள்? இந்தப் படத்துக்கு கண்டிப்பாக ஏ சான்றிதழ்தான் கொடுப்போம்”என்று கொதித்துப் போய்க் கூறினார்களாம் .
30
இரண்டாம் பாதி ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் “பரவாயில்லை… யூ ஏ தரலாம்” என்றவர்கள் , கடைசி இருபது நிமிடம் படம் ஓடி முடிந்த போது  “இன்றைய நிலையை புட்டுப்  புட்டு வைத்து விட்டீர்கள் ” என்று பாராட்டி யூ சர்டிபிகேட் கொடுத்து வாழ்த்தினார்களாம் . இப்படி சென்சாருகே டுவிஸ்ட்  கொடுத்து இருக்கிறது இந்தப் படம் .
“கடைசி இருபது நிமிடம்தான் படம் . டைரக்டர் கிருஷ்ணன் அசத்தி விட்டார்” என்று மனதார பாராட்டுகிறார்  தயாரிப்பாளர் அமீர் ஜான்
“புழு மீனுக்கு உணவு. மீன் கொக்குக்கு உணவு . கொக்கு மனிதனுக்கு உணவு . மனிதன் புழுவுக்கே உணவு ” போன்ற பாராட்டத்தக்க பாடல் வரிகளும் படத்தில் இருக்கின்றன. 
படத்தில் வரும் வித்தியாசமான  கேரக்டர்கள், வித்தியாசமான காட்சிகள் , வித்தியாசமான வசனங்களை வைத்து அட்டகாசமான மூன்று  டீசர்கள்   பண்ணி இருக்கிறார்கள் .
அதில் ஒரு டீசரில்  மேலே விளக்கப்பட்ட நான்கு  ஆண்  கதாபாத்திரங்கள் பற்றியும் சொல்லி ” இவங்க கிட்ட அந்தப் பொண்ணு மாட்டிக்கிட்டாளா ?  இல்ல அந்தப் பொண்ணுகிட்ட  இவங்க மாட்டிக் கிட்டாங்களா? இல்ல… இந்த அஞ்சு பேர் கிட்டயும்  படம் பாக்கப் போற நீங்க மாட்டிக்கப் போறீங்களா? தியேட்டர்ல முடிவு பண்ணிக்குவோம் வாங்க ” என்கிறார்கள் .
ஆனால் இந்த தில்லான கடைசி வாக்கியமே சொல்கிறது , இந்தக் குரங்கு கைல  பூமாலை ரசிகர்களை ஏமாற்றாது என்று .
வாழ்த்துகள் !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →