டுவிட்டரில் அவ்வப்போது ”பதில் சொல்ல நான் ரெடி” என்று டுவிட் செய்து, கேள்விகளாக வரும் மற்ற டுவிட்களுக்கு பதில் சொல்வது குஷ்புவின் வழக்கம் .
அண்மையில் அப்படி டுவிட்டரில் குஷ்புவிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவரது பதில்களும்
* சுந்தர்.சி இயக்கத்தில் உங்களுக்கு பிடித்த படம் ?
உள்ளத்தை அள்ளித்தா, அன்பே சிவம்.
* முக்கியமான மூன்று விஷயங்கள்?
நண்பர்கள், எனது குடும்பம், மற்றும் என் சுயமரியாதை.
* நடிக்க விரும்பி வாய்ப்பு தவறிப் போன படம் எது?
சண்டி (தெலுங்கு சின்னத்தம்பி)
* இந்தியாவிலேயே ஸ்டைலான நடிகர் என்று யாரை சொல்வீர்கள்?
ஹிரித்திக் ரோஷன்.
* சிறந்த நடிகர் என யாரை சொல்வீர்கள்?
தமிழில் கமல், இந்தியில் அமீர்கான்
* உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்?
ஏழு மொழிகள் பேசத் தெரியும் , அதில் நான்கு மொழிகள் எழுதவும் தெரியும்
* உங்கள் குழந்தைகளும் சினிமாவிற்கு வந்தால் சம்மதம் சொல்வீர்களா?
முதலில் அவர்கள் படிப்பை முடிக்க வேண்டும்.
* அரசியலில் எப்போது பெரிய ஆளாக வருவீர்கள்?
ஐடியா இல்லை.
* உங்கள் ரசிகர்களுக்கு ஏதேனும் கருத்து?
வெற்றி பெற குறுக்கு வழியை தேர்ந்தெடுக்காதீர்கள்.
* நீங்கள் ஓரின சேர்க்கையாளருக்கும், ஆதரவு தெரிவிப்பீர்களா?
ஒவ்வொரு மனிதனுக்கும் தனது விருப்பப்படி வாழும் உரிமை இருக்கிறது
*அம்மா, அக்கா, குணச்சித்திர நடிகை என எதிர்காலத்தில் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா?
கண்டிப்பாக இல்லை.