கர்நாடகா மங்களூரில் பிறந்த ராதிகா ஷெட்டி திரைப்பட நடிகை ஆகி , தமிழில் எஸ் பி ஜனநாதன் இயக்கிய இயற்கை படத்தில் குட்டி ராதிகா என்ற பெயரில் வந்து அற்புதமாக நடித்திருந்தார் . ( முன்பே இங்கே ஒரு பெத்த ராதிகா இருப்பதால் இவர் குட்டி ராதிகா ஆனார் )
கர்நாடகாவின் பனிரெண்டாவது முதலமைச்சராக பதவி ஏற்றவர் குமாரசுவாமி (இவர் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகன்) , 2006 ஆம் ஆண்டு இவர் முதன் முதலாக முதலமைச்சர் ஆன போது , இவருக்கும் குட்டி ராதிகாவுக்கும் ரகசிய திருமணம் நடந்தது
குமாரசுவாமி முதல்வர் பதவியில் இருந்து இறங்கி , பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் குட்டி ராதிகா , தனக்கும் குமாரசுவாமிக்கும் 2006 ஆம் ஆண்டு திருமணம் நடந்ததையும் தங்களுக்கு ஷமிகா என்ற பெயரில் குழந்தை இருப்பதையும் வெளிப்படையாக அறிவித்தார் .
முதல் மனைவி இருக்கும்போதே ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்த காரணத்தால் வழக்கில் சிக்கிய குமாரசுவாமி , ஒரு நிலையில் அதில் இருந்து பிரம்மப்பிரயத்தனம் செய்து மீண்டார் . வழக்கு வந்தது … தப்பியது … இரண்டிலும் பர்சனல் மற்றும் அரசியல் காரணங்கள் உண்டு .
இப்படியாக ராதிகா ஷெட்டி என்ற குட்டி ராதிகா , ராதிகா குமாரசுவாமி யானார். இதற்கு எல்லாம் முன்பே ராதிகாவுக்கு பதிமூன்று வயதில் ரத்தன்குமார் என்பவரோடு திருமணம் நடந்து , ரத்தன்குமார் எதிர்பாராத விதமாக மாரடைப்பில் இறந்தார் .
மீண்டும் 2018 முதல் 2019 வரை ஓராண்டு முதல்வராக இருந்த குமாரசுவாமி , இப்போது சன்னபட்னா தொகுதியின் எம் எல் ஏ வாக இருக்கிறார் .
பல படங்களை தயாரித்த குமாரசுவாமி தனது மகன் நிகில் கவுடவை ஹீரோவாக வைத்து தனது முதல் மனைவி அனிதாவின் மூலம் இரண்டு படங்களை எடுத்தார் . தவிர குமாரசுவாமி க்கு சொந்தமான கஸ்தூரி என்ற சேனலை அனிதா குமாரசுவாமி நிர்வகித்து வருகிறார் .
சுமார் நாற்பது படங்களில் நடித்து , அப்பா வயது ஆளைத் திருமணம் செய்து கொண்டார் என்ற கமெண்ட்களை எல்லாம் சந்தித்து மீண்டு வந்த ராதிகா குமாரசுவாமி
2012 ல் யஷ் , ரம்யா நடிப்பில் லக்கி என்ற படத்தையும் 2013 ஆம் ஆண்டு தானே கதாநாயகியாக ஐந்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடித்து , ஆதித்யா என்பவருக்கு ஜோடியாக நடித்து ஸ்வீட்டி நன்ன ஜோடி என்ற படத்தையும் தயாரித்தார்.
இரண்டும் பெரிதாக வெற்றி பெறாத நிலையில் (ஸ்வீட்டி நன்ன ஜோடி படத்தில் ரம்யா கிருஷ்ணனுக்கு நல்ல பெயர் ) முயற்சியில் இருந்து சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் போல, அடுத்தடுத்து மூன்று படங்கள் மூலம் களம் இறங்குகிறார் ராதிகா குமாரசுவாமி
படம் ஒன்று பைரதேவி
இந்தப் படத்தில் அகோராவாக (பெண் அகோரி ) பைரதேவி என்ற கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்து தயாரிக்கிறார் ராதிகா குமாரசுவாமி
படத்தின் டீசரில் பல அகோராக்களுடன் சேர்ந்து ஒரு இறந்த உடலின் தலைப்பக்கம் அமர்ந்து ராதிகா குமாரசாமி தாந்த்ரீக பூஜை செய்வது போலவும் அதன்பிறகு ஒரு ரவுடி கும்பலால் தாக்கப்பட்ட ஒரு பெண்ணை காப்பாற்ற முயற்சிப்பது போலவும் ராதிகா அகோரா கதாபாத்திரத்தில் நடித்துள்ளது காட்டப்படுகிறது
ஒரு பெண் அகோராவை பற்றிய கதையம்சத்துடன் இந்திய சினிமாவிலேயே உருவாகும் முதல் படம் இது என்கிறார்கள் ரமேஷ் அரவிந்த்தையும் ஒரு போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்
நிர்வாக தயாரிப்பாளர்களாக ரவிராஜ் மற்றும் யாதவ் ஆகியோர் பணிபுரிகின்றனர் ரங்காயன ராஜூ, ரவிசங்கர் (பொம்மலி), ஸ்கந்தா அசோக், அனு முகர்ஜி, மாளவிகா அவினாஷ் மற்றும் சுசித்ரா பிரசாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
JS வாலி இந்தப்படத்தின் ஒளிப்பதிவை கையாள, கே.கே.செந்தில் பிரசாத் இசையமைக்கிறார். படத்தொகுப்பை C.ரவிச்சந்திரனும் சண்டைக்காட்சிகளை K.ரவிவர்மாவும் கவனிக்கின்றனர். நடனத்தை மோகனும் கலை இயக்கத்தை மோகன் B கெரேவும் கவனிக்கின்றனர். தெலுங்கு பாடல் வரிகளை ராமா ஜோகய்யா சாஸ்திரி மற்றும் ஸ்ரீ ஜெய்யும் தமிழ் பாடல் வரிகளை தாமரை மற்றும் ஸ்ரீ ஜெய் ஆகியோரும் எழுதியுள்ளனர்
மற்ற இரண்டு படங்கள் capture மற்றும் ஜாக்ரதா