லைசென்ஸ் @ விமர்சனம்

JRG புரடக்ஷன்ஸ் சார்பில் என். ஜீவானந்தம் தயாரிப்பில், சூப்பர் சிங்கர் (செந்தில்) ராஜலக்ஷ்மி , ராதாரவி, அபி நக்ஷத்ரா, , அனன்யா, நடிப்பில் கணபதி பாலமுருகன்  இயக்கி இருக்கும் படம் 

சிறு வயது முதலே துணிச்சலான பெண்ணான பாரதிக்கு ( அபி நட்சத்திரா) பள்ளி நாட்களில் ஒரு அப்பாவி தோழி, அந்தத் தோழியை சிலர் பாலியல் பலாத்காரம் செய்து  விட அவள் தற்கொலை செய்து கொள்கிறாள்.

“இறந்த பின்னும் என் மகள் அவமானப் பட வேண்டாம் “என்று பெண்ணின் அம்மா சொல்லி விட , அந்த  வேண்டுகோளுக்கு ஏற்ப, பாரதியின் அப்பா ( ராதாரவி) , ஒரு போலீஸ்காரராக இருந்தும் , குற்றவாளிகளைத் தண்டிக்கவில்லை என்பதால் அப்பாவிடம் பேசாமல் இருக்கிறாள் பாரதி ( ராஜ லக்ஷ்மி) 

கல்யாணம் , கணவன் பிள்ளை என்று ஆன பின்பும் அப்பாவிடம் பேசாமலே இருக்கும் பாரதி ஆசிரியை ஆனதோடு ,  பெண்கள் , பெண் குழந்தைகள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்காக ஒரு வக்கீல் தம்பியோடு களமாடுகிறாள். 

தொடர்ந்து பெண்களுக்கு நடக்கும் பாலியல் பலாத்காரங்களைத் தடுக்க அவர்கள் அனைவருக்கும் துப்பாக்கி வைத்துக் கொள்ளும் லைசன்ஸ் தர வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும்படியாக முதலில் அவள் லைசன்ஸ் கேட்கிறாள் . 

சட்ட விதிகளும் அவளுக்கு படிக்காதோர் தரும் அழுத்தமும் லைசன்ஸ் கோரிக்கையை நிராகரிக்க வைக்க, அவள் கோர்ட்டுக்குப் போக நடந்தது என்ன என்பதே படம். 

கதை திரைக்கதை வசனம் இயக்கம் அனைத்திலும் நீக்கமாற நிறைந்திருப்பது பக்குவமில்லாத தன்மையும்  தெளிவற்ற உருவாக்கமும்தான். . இதில் கடைசியில் தேவையற்ற டுவிஸ்டுகளும் உண்டு. ஒன்று ஓவர் ஆக்டிங் அல்லது நோ ஆக்டிங் என்ற ரீதியிலேயே எல்லோரும் நடிக்கின்றனர் . 
ராஜலக்ஷ்மி எல்லாம் கிராமத்து அமெச்சூர் நாடக நடிகை போல நடித்துக் குவிக்கிறார் . 

ராதாரவியும் அபி நக்ஷத்ராவும் சிறப்பாக நடித்துள்ளனர் . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *