பொதுவாக ஒரு படத்தை பார்த்து இம்ப்ரெஸ் ஆகி அதே போல ஒரு தரமான படம் எடுக்கவேண்டும் என்று ஆசைப்படுவதில் தப்பில்லை .
இன்னொரு பக்கம் ஒரு படத்தில் நாம் வியந்த தன்மையை தனது பாணியில் சொல்ல விரும்பி ஒரு படைப்பு உருவாக்கி , மூலப் படைப்புக்கு நன்றி சொல்லி படத்தை ஆரம்பிப்பதும் கூட ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு விசயம்தான் .
ஆனால் ஒரு படத்தில் வந்த ஒரு காட்சியை அப்படியே காப்பி அடிப்பது என்பது அடுத்தவன் வீட்டில் புகுந்து திருடுவதற்கு சமம் .
பொதுவாக இப்போதெல்லாம் சில தமிழ்ப்பட படைப்பாளிகள் (?) இந்த கேவலத்தை கூசாமல் செய்கின்றனர் என்றாலும் பல கோடி செலவில் பெரும் பிரயத்தனத்துடன் எடுக்கப்படும் படங்களில் கூட இந்த அற்பத்தனம் நடப்பதுதான் அசிங்கம் .
அண்மையில் முருகதாஸ் இயக்கிய கத்தி படத்தில் பல காட்சிகள் இப்படி பல படங்களில் இருந்து திருடப்பட்டதை கையும் களவுமாக பலரும் சமூக வலை தளங்களில் பிரித்து மேய்ந்தது அனைவரும் அறிந்த ஒன்றுதான் .
ஆனால் ரஜினி நடித்த லிங்கா படத்திலும் இந்த அசிங்கம் நடந்திருப்பதுதான் அநியாயம்!
படத்தில் ‘திருடன் லிங்கா, லலிதா ஜுவல்லரி நகைக் காட்சியில் ஒரு நெக்லஸ் திருடும் காட்சியில் ஒரு சிறு அறைக்குள் அனுஷ்காவுடன் இருந்து கொண்டு அவரை உரசிக் கொண்டே, ஒரு காந்தத்தை பயன்படுத்தி அறைக்கு வெளியே இருக்கும் ஒரு இரும்பு சாவியை இழுத்துக் கவர்ந்து கதவு திறப்பார் அல்லவா ?
அந்தக் காட்சியை பார்த்து “ஸ்ஸ்ஸ்ஸ் ச … என்னா சூப்பரா தலைவர் மூளைய யூஸ் பண்ணி ஐடியா பண்ணி அசத்துறாருப்பா “என்று நீங்கள் பெருமைப்பட்டீர்களா?
உங்களைத்தான் மூக்கறுத்திருக்கிறது லிங்கா யூனிட்.
1966 ஆம் ஆண்டு வில்லியம் வைலர் என்பவர் இயக்கத்தில் வெளிவந்த ஹாலிவுட் படம் How To Steal A Million. (ஒரு மில்லியன் பணத்தை திருடுவது எப்படி?).
Peter O’toole and Audrey Hepburn இருவரும் நடித்துள்ள இந்தப் படத்தில் வந்த — காந்தத்தை பயன்படுத்தி சாவி எடுக்கும் ….காட்சியைதான் கொஞ்சம் கூட மாற்றாமல் அச்சு அசலாக திருடி லிங்காவில் வைத்திருக்கிறார்கள் .
அந்தக் காட்சியை இந்த இணைப்பில் பார்க்கலாம் .
தகவலுக்கு நன்றி : பத்திரிக்கையாளர் பிஸ்மி
அட திருடியதுதான் திருடினார்கள் .
ஐடியாவை மட்டும் எடுத்துக் கொண்டு காட்சியையாவது வேறு மாதிர் அமைத்திருகக் கூடாதா ? சாவி, கதவு இவைகளை கூடவா அப்படியே உருவாக்க வேண்டும் . ஒரு வேளை அந்த படத்தின் ஆபிசுக்குள் நுழைந்து அவற்றையும் திருடிக் கொண்டு வந்து வைத்தார்களோ?
இதெல்லாம் ரஜினிக்கு அழகா ?