தெலுங்கில் சுமார் 30 கோடி ரூபாய் அளவிற்கு விற்கப்பட்ட ‘லிங்கா’ படத்திற்கு அங்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது
‘எந்திரன்’ படத்தின் வசூலைக் கருத்தில் கொண்டுதான் ‘லிங்கா’ படத்திற்கான வியாபாரமும் நடைபெற்றதாம். ஆனால், அந்தப் படம் போல் ‘லிங்கா’ படம் இல்லாமல், ஒரு சாதாரணப் படமாகவே இருப்பதாக தெலுங்குத் திரையுலகினர் தெரிவிக்கிறார்கள். அதிலும், தெலுங்கு மீடியாக்களின் நெகட்டிவ்வான விமர்சனங்களும் படத்தைப் பதம் பார்த்துவிட்டது.தெலுங்கு ரசிகர்களும் படத்தை மிகவும் எதிர்பார்த்ததாகவும், ஆனால், அவர்களுக்கு பிடித்த மாதிரி படம் இல்லையென்பதாலும் இந்த நிலைமை .
முதல் மூன்று நாட்களில் சுமார் 7 கோடி ரூபாய் வசூலானாலும், நான்காம் நாள் முதல் படம் முதல் படத்தின் வசூல் முழுசாக குறைந்துவிட்டதாம்.
30 கோடி அளவிற்கு அளவிற்கு வசூல் ஆக வேண்டுமென்றால் குறைந்த பட்சம் மூன்று வாரங்களாவது ஓடினால்தான் அந்தத் தொகையை வசூலிக்க முடியும் என்கிறார்கள். குறைந்த பட்சம் சுமார் 15 கோடி வரை படத்திற்கு நஷ்டம் வர வாய்ப்புள்ளளதாக மாட்லாடுகிறது தெலுங்குப் பட உலகம் .
பொதுவாக தமிழின் பெரிய ஹீரோக்கள் படம் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு நன்றாக ஓடுவது வழக்கம் . ஆனால் லிங்கா படத்தின் சூப்பர் ஃபிளாப் தமிழிலிருந்து வெளியாகும் டப்பிங் படங்களுக்கான மவுசையே தெலுங்கில் குறைத்து விடும் என்று கருத்துத் தெரிவிக்கிறார்கள் சினிமா எக்ஸ்பர்ட்டுகள் .
நியாயமா லிங்கா ?