சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் , மாளவிகா மோகனன், ஸ்ம்ருதி வெங்கட், சமுத்திரக்கனி , அமீர் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கி இருக்கும் படம் .
நேர்மையாக இருந்ததால் கொல்லப்பட்ட பத்திரிக்கையாளரின் (ராம்கி) மகனும் பத்திரிக்கையாளன் ( தனுஷ்)ஆகிறான் . அப்பா இறந்து போன அதே சமயத்தில் அம்மாவும் பிரசவத்தில் இறந்து போக, பிறந்த தங்கைக்கு தாயாகவும் இருக்கிறான்.
அவனது நேர்மை அவனுக்கு பிரச்னையைக் கொண்டு வர , அதனால் அவன் தங்கையை இழக்க அப்புறம் நடந்தது என்ன என்பதே இந்த மாறன் .
அண்ணன் தங்கை பாசம், உரிமைச் சண்டைகள், காதல் சுதந்திரம் காட்சிகள் நன்றாக உள்ளன.
தனுஷ் உட்பட நடித்திருக்கும் அனைவரும் குறையற்ற நடிப்பு .
சமுத்திரக்கனி வீணடிக்கப்பட்டு இருக்கிறார். அமீரின் கதாபாத்திரம் அபத்தம் அநியாயம் .
மாறன்…. மாறாத காட்சிகள்