வெள்ளிக்கிழமை காலை பதினொன்றரை மணிக்கு படத்தின் ரிலீசை வைத்துக் கொண்டு இருபது மணி நேரம் முன்பாக வியாழக் கிழமை மாலை மூன்றரை மணிக்கு படத்தின் புரமோஷனுக்காக பத்திரிக்கையாளர்களை சந்தித்தது ….
சரத்குமார் , ராதிகா சரத்குமார் , லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோரின் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனமும் தனுஷின் உண்டர்பார் நிறுவனமும் இணைந்து வழங்க, தனுஷ் , காஜல் அகர்வால் நடிப்பில் காதலில் சொதப்புவது எப்படி படப் புகழ் பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘மாரி’ படத்தின் குழு . (‘வாயை மூடிப் பேசவும்’ படமும் பாலாஜி மோகன் இயக்கியதுதான் )
“நாளைக்கு ரிலீஸ் ஆனா என்ன? அடுத்து பலநாட்களுக்கு இந்த புரமோஷன் உதவுமே ” என்று காரணம் சொன்னார் தனுஷ் .
ஒரு ரவுடியின் கதை . தனுஷ் கேரக்டருக்கு ஏக பில்டப்புகள் என்று , “பக்கா லோக்கல் தரை டிக்கட் படமாக வந்திருக்கிறது மாரி” என்று மாறி மாறி சந்தோஷப்பட்டார்கள் படம் சம்மந்தப்பட்டவர்கள் .
படத்தின் இசை அனிருத் . எனவே பாடல்களை எழுதி இருப்பது ‘பொயட்டு’ தனுஷ்தான். ” சின்ன வயசுல இருந்தே நானும் அனிருத்தும் பழக்கம் . அதனால் நானும் அவரும் சேர்ந்து பண்ற படங்களுக்கு பாடல் எழுதறேன் . கதை எழுத , வசனம் எழுத , டைரக்ட் பண்ண ஆசை இருக்கு . ஏன்னா நானே ஒரு டைரக்டர் குடும்பத்துல இருந்து வந்தவன்தான் . ஆனா அதுக்கான தகுதிய நான் இன்னும் வளர்த்துக்கல. ரெண்டு வருஷம் கழிச்சு டைரக்ட் பண்ணுவேன் ,
கே ஜே யேசுதாசின் மகனான பாடகர் விஜய் யேசுதாஸ் இந்தப் படத்தில் நடிகராக அறிமுகம் ஆகிறார் .
கலகலப்பாகப் பேசிய சரத்குமார் “நான் தனுஷை விட வயசுல சின்னவன். அவரை நான் அண்ணன்னு தான் சொல்வேன் . என்னை தம்பின்னு கூப்பிடனும்னு அவர்கிட்ட சொல்லி இருக்கேன் . மிக அற்புதமான நடிகர் அவர் . அவர் கூட ஏதாவது ஒரு படத்தில் இணைந்து நடிக்க காத்திருக்கேன் ” என்றார் .
“அவருக்கு பொருத்தமான கதாபாத்திரம் வரும் கதையில் நடக்க நானும் ஆவலா காத்திருக்கேன் ” என்றார் தனுஷ்.