மாவீரன் கிட்டு திரைப்படத்தின் First Look டீசர் வெளியீட்டு விழா சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற Licet Engenia கலைவிழாவோடு இணைந்து நடைபெற்றது.
விழாவில் இயக்குநர் சுசீந்திரன் , நாயகன் விஷ்ணு விஷால் , நாயகி ஸ்ரீ திவ்யா , படத்தில் முக்கிய வேடமேற்று நடித்திருக்கும் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் , தயாரிப்பாளர் சந்திர சாமி ,
நடிகர் ஹரிஷ் உத்தமன் மற்றும் சிறப்பு விருந்தினர்களான இயக்குநர் சமுத்திரகனி , பா.ரஞ்சித் ஆகியோர் கலந்து கொண்டனர்.
படத்தின் First Look-ஐ இயக்குநர் சமுத்திரகனி வெளியிட இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டார்.
விழாவில் இயக்குநர் சுசீந்திரன் பேசியபோது, “எனது இரண்டு திரைப்படங்களின் First look மற்றும் டீசர்களை இங்கு தான் வெளியிட்டேன்.
அதை தொடர்ந்து இப்போது மீண்டும் நான் தயாரித்து இயக்கியுள்ள “ மாவீரன் கிட்டு “ திரைப்படத்தின் டீசரை இங்கு வைத்து வெளியிடுகிறேன்.
எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது ஏனென்றால் எனக்கு லயோலா கல்லூரி மிகவும் பிடித்த இடம். முதலில் என்னுடைய தந்தைக்கு நன்றி கூற வேண்டும்.
ஏனென்றால் அவர் மூலமாக தான் இப்படத்தின் தயாரிப்பாளர் சந்திர சாமி எனக்கு நண்பரானார். அழகர் சாமியின் குதிரை திரைப்படத்துக்காக எனக்கு தேசிய விருது கிடைத்தது.
அதே போல் “ மாவீரன் கிட்டு “ திரைப்படத்துக்கும் எனக்கு தேசிய விருது கிடைக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார்.
நாயகன் விஷ்ணு விஷால் தன் பேச்சில்
“எனக்கு லயோலா கல்லூரி மிகவும் பிடித்தமான இடம். சினிமாவில் உள்ள எல்லோருக்கும் லயோலா கல்லூரிக்கும் கண்டிப்பாக தொடர்பு இருக்கும்.
எனக்கும் லயோலா கல்லூரிக்கும் என்ன தொடர்பு என்று கேட்டால் என்னுடைய மனைவி லயோலா கல்லூரியின் முன்னால் மாணவி ஆவார்.
நான் இப்படத்தின் மூலம் இயக்குநர் சுசீந்திரன் அவர்களுடன் மூன்றாவது படத்தில் இணைகிறேன். இப்படம் நிச்சயம் உங்கள் மனதை தொடும் ஒரு படமாக இருக்கும்” என்றார்.
இயக்குநர் சமுத்திரகனி
“ப டத்தின் First look போஸ்டரை பார்க்கும் போது எனக்கு மாபெரும் போராளி மாவீரன் திலீபன் அவர்கள் தான் நினைவுக்கு வருகிறார்.
இயக்குநர் சுசீந்திரன் இப்படத்தின் மூலம் அழுத்தமான ஒரு பதிவை தமிழ் சினிமாவுக்கு வழங்குவார் என்று நினைக்கிறன்” என்றார்.
இயக்குநர் பா.ரஞ்சித் தன் பேச்சில் ” டீசரைப் பார்க்கும் போது சமூகத்துக்கு தேவையான முக்கியமான ஒரு படைப்பை இயக்குநர் சுசீந்திரன் இயக்கியுள்ளார் என்பது தெரிகிறது.
இல்லாதவர்கள் ஒரு விஷயத்துக்காக போராடும் போது தான் அது புரட்சியாக மாறுகிறது. இப்படத்தை பார்க்கும் போது நாயகன் ஏதோ ஒரு முக்கிய சமூக பிரச்சனைக்காக போராடுவது போல் தோன்றுகிறது.
வலி உள்ளவன்தான் கம்யூனிசம் பேசுவான் . சுசீந்திரன் இந்தப் படத்தில் கம்யூனிசம் பேசி இருக்கிறார் . ரொம்ப சந்தோசம் ” என்றார்
“ஆயிரத்தில் ஒருவன் , அழகி திரைப்படத்துக்குப் பிறகு இந்தப் படம் எனக்கு முக்கியமான படமாக அமைந்து இருக்கிறது.
அந்த இரண்டு படங்கள் போன்று இந்தப் படமும் எனக்கு கண்டிப்பாக நல்ல பெயர் வாங்கி தரும் ஏனென்றால் என்னுடைய கதாபாத்திரம் அப்படி. ஹவுஸ் ஃபுல் திரைப்படத்துக்குப் பின்,
இப்படத்துக்காக நான் நிறைய விருதுகளை வாங்குவேன் என நம்புகிறேன்” என்றார் இயக்குநர் நடிகர் பார்த்திபன்.