தமிழ் சினிமாவில் ‘அன்டர்கவர் ஆபரேஷன்’ என்ற காவல் துறை விசயத்துக்கு முதன் முதலாக முழு முக்கியத்துவம் கொடுத்து,
மீகாமன் என்ற அற்புதமான செய் நேர்த்தி மிக்க சிறப்பான படத்தைக் கொடுத்தவர் இயக்குனர் மகிழ் திருமேனி .
(அதற்கும் முன்பே இவர் இயக்கிய முன் தினம் பார்த்தேனே, தடையறத்தாக்க, ஆகியவையும் தொடர் வெற்றிப் படங்கள்தான் .)
மகிழ் திருமேனி இடத்தில் வேறு யார் இருந்தாலும் இந்நேரம் அடுத்தடுத்து அஞ்சு படமாவது பண்ணி இருப்பார்கள் .
ஆனால் மீண்டும் ஒரு தங்க முட்டையை அடைகாத்து களம் இறங்குகிறார் மகிழ் திருமேனி
ஆம் !
அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய், மகிமா நம்பியார் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற “குற்றம் 23” திரைப்படத்தை தயாரித்த,
ரெதான் – தி சினிமா பீப்பள் சார்பாக இந்தர் குமார் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்க,
மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தில் அருண் விஜய் நாயகனாக நடிக்கிறார்.
என்னை அறிந்தால், குற்றம் 23 போன்ற படங்களில் தனது தனித்தன்மையான நடிப்பை வெளிப்படுத்தி அனைத்து ரசிகர்களை கவர்ந்த அருண் விஜய் இப்படத்தில் புதிய பரிமாணத்தில் தோன்றவுள்ளார்.
(முன்பே மகிழ் திருமேனி இயக்கத்தில் இவர் நடித்த தடையறத் தாக்க திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது என்பது இங்கே குறிப்படத்தக்கது.)
இன்னும் பெயரிடப்படாத இந்த புதிய படத்தின் மற்ற நடிகர் நடிகையர் விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.
அசத்துங்க சார் (ஸ்)