மகாராணி கோட்டை @ விமர்சனம்

Maharani-Kottai-Movie-Stills-13
தனமலர் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ரிச்சர்டு , ஹனி பிரின்ஸ் நடிப்பில் வினோத் குமார் கதை திரைக்கதை வசனம் எழுதி  இயக்கி இருக்கும் படம் மகாராணி கோட்டை . மகாராணி கோட்டை என்ற ஒரு ஜமீன் காலத்து பெரிய அரண்மனை ஒன்று , அதன் உள்ளே மகாராணியின் ஆவி இருக்கிறது என்ற செய்தி காரணமாக குறைந்த விலைக்கு விற்பனைக்கு வருகிறது . அதை வாங்கிப் போடும் ரிச்சர்டு அங்கு தனது நண்பர்கள் அவர்களது குடும்பம் மற்றும் தனது பெண் தோழி ஆகியோருடன் தங்குகிறார் .

maharani 5

அந்த ஊரில் உள்ள பலதரப்பட்ட மக்களும் இவர்களை சந்தித்து பவுர்ணமிக்குள் இந்த அரண்மனையில் இருந்து வெளியேறித் தப்பித்துக் கொள்ளுங்கள் .இல்லை என்றால் உங்கள் எல்லோரையும் மகாராணி மற்றும் அவரது கணவரின் ஆவி கொன்று விடும் என்று பயமுறுத்துகிறார்கள் . ஆனால் தன்னிடம் இருந்து அரண்மனையை இன்னும் குறைவான விலைக்கு வாங்க சிலர் செய்யும் முயற்சி இது என்று நம்புகிறார் ரிச்சர்டு .பவுர்ணமி வந்தது . பேய் வந்ததா?  இல்லையா? வந்தது எனில் நடந்தது என்ன ? இல்லையெனில் நிகழ்ந்தது என்ன என்பதே இந்தப் படம் .

ரிச்சர்டு கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் முயற்சி எடுத்து நடித்து இருக்கிறார் .

maharani 2
கதாநாயகி ஹனி பிரின்ஸ் கவர்ச்சியில் கிளுகிளுப்பு ஏற்றுகிறார்.காடும் மலையுமான லொகேஷன்கள் குளு குளு என்று இருக்கின்றன .

நடிகர் செந்தில், (இசையமைப்பாளர் சங்கர்) கணேஷ் , கிங்காங் , போன்ற பழைய முகங்களை மீண்டும் காண முடிகிறது .

maharani 6

பவர் ஸ்டார் சில காட்சிகளில் வருகிறார் . இசையும் ஒலிக்கலவையும் மகா இரைச்சல் .

பேய் பற்றி கிளைமாக்சில் சொல்லும் விஷயம் பாராட்டுக்குரியது

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →