‘மகேந்திரன் சாரை இயக்கியது …” – நெகிழ்வில் ‘தெறி’க்கும் அட்லீ

 

solo

வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க, 

விஜய் , இயக்குனர் மகேந்திரன்,  சமந்தா, ஏமி ஜாக்சன், நடிகை மீனாவின் மகள் சிறுமி நைனிகா ஆகியோர் நடிக்க, 
அட்லீ  இயக்கி இருக்கும்  ‘தெறி’ !
படம் தமிழ்ப் புத்தாண்டு அன்று இரண்டாயிரம் திரையரங்குகளில் படம் வெளியாகும் நிலையில்,
 DCIM (101)பத்திரிகையாளர்களை சந்தித்தது அட்லீ, ஏமி ஜாக்சன், மீனா , நைனிகா ஆகியோர் (மட்டுமே) அடங்கிய படக் குழு . 

ஏமி ஜாக்சன் பேசும்போது  “தமிழில் எனக்கு தொடர்ந்து மிக நல்ல கேரக்டர்கள்  கிடைத்து வருவது சந்தோசம். இந்தப் படத்திலும் அப்படி ஒரு கேரக்டர் .
இந்த படத்தில் அட்லீ மற்றும் விஜய்யோடு பணியாற்றியது ரொம்ப சந்தோஷம்” 
DCIM (130)
— என்ற ரீதியில்  (ஏத்தா அப்படித்தான பேசுன ?)…
அட்லீயின் வார்த்தைகளில் சொல்வதானால்  , ஆஸ்கர் விருது விழாவில் பேசுவது போலப் பேசினார் , 
நைனிகா எல்லாருக்கும் நன்றி என்று சொல்ல , 
DCIM (133)
உற்சாகமாக , விரிவாக , தெளிவாகப பேசினார் அட்லீ.
“படத்தில் விஜய் சாருக்கு மூன்று  கேரக்டர்கள் .  ஏமி ஜாக்ஸன் ஒரு மலையாள டீச்சராக வருகிறார் .சமந்தா  டாக்டராக வருகிறார் . படத்தில்  குழந்தை நட்சத்திரம்  நைனிகா தவிர இன்னொரு சஸ்பென்சும் உண்டு .
படத்தில் ஒரு முக்கியமான சமூகப் பிரசனை இருக்கிறது . அதற்கு குரல் கொடுக்க வேண்டிய கடமை  நம் எல்லோருக்கும் இருக்கிறது . 
ராஜா ராணி படத்தின் இன்டர்வல் பிளேஸ் எப்படி இருந்ததோ,  அதே பாணியில் இல்லாமல் வேறொரு வகையில் இந்தப் படத்தின் இன்டர்வெல் பிளேஸ்மென்ட்டும் சிறப்பாக இருக்கும் .
DCIM (95)
படத்தில் சந்தானம் போன்ற காமெடி நடிகர்கள் இல்லைதான் . ஆனால் விஜய் சார்  – நைனிகா சம்மந்தப்பட்ட காட்சிகளில் சிரித்துக் கொண்டே இருப்பீர்கள் .
விஜய் — ராதிகா மேடம் சம்மந்தப்பட்ட காட்சிகளும் அப்படியே . சமந்தா சம்மந்தப்பட்ட காட்சிகளிலும் காமெடி இருக்கும் .
இது சமூக அக்கறையுள்ள செண்டிமெண்ட் இணைந்த ஆக்ஷன் பொழுதுபோக்குப் படம். 
DCIM (92)
ராஜா ராணி படம்மௌன ராகம் மாதிரி இருக்கிறது என்று  சொன்னது போல இந்தப் படத்தை சத்ரியன் போல என்று சொல்வதும் உண்மை இல்லை .
மணிரத்னம் சார் நான் உட்பட பலருக்கும் இன்ஸ்பிரேஷநாக இருப்பவர் . அந்த விதத்தில் அவர் படங்களாக சொல்வது சந்தோசம் என்றாலும் , மவுன ராகத்தையோ சத்ரியனையோ  நான் காப்பி அடிக்கவில்லை 
தெறி படம் பற்றி விஜய் சார் ‘இதுவரை நான் பண்ணாத அளவுக்கு முழுமையாக ஆக்ஷன் காட்சிகளில் நடித்த திருப்தி எனக்கு இருக்கிறது’ என்று சொல்லி இருக்கிறார் என்றால்,  
DCIM (82)
அந்த அளவுக்கு அவர் ரிஸ்க் எடுத்து நடித்து இருக்கிறார் . ஒரு காட்சியில் அம்பது அடி நுயரத்தில் இருந்து குதித்தார் , நிஜ ஆணிகள் இருக்கும் நாற்காலியை உடைத்துக் கொண்டு எழுந்தார் 
ஒரு காட்சியில் அவர் எடுத்த ரிஸ்க் பார்த்து இயக்குனர் மகேந்திரன் சாரே பதறி விட்டார் .
மகேந்திரன் சார்  வில்லனாக நடிக்கிறார் . எத்தனையோ காவியங்களைப் படைத்த  மகேந்திரன் சாரை இயக்கியது எனக்கு மிகப் பெரிய பெருமை .
அதுவும் அவரை வைத்து முதல் காட்சியை இயக்கிய நாளை  என்னால் மறக்க முடியாது .
DCIM (137)
அவரிடம் முதல் ஷாட்டை சொல்லப் போனபோது தயங்கி தயங்கி நின்றேன் . என்னை ‘வாங்க ‘கோச்’ என்று ஜாலியாக அழைத்து,  ரிலாக்ஸ் ஆக்கினார் .மிக அட்டகாசமாக நடித்தார் .
அது என்னால் மறக்க முடியாத அனுபவம் . இனி என் வாழ்நாளில் எவ்வளவு பெரிய நடிகரை நிற்க வைத்து நான் டைரக்ட் செய்தாலும்,  அதெல்லாம் மகேந்திரன் சாரை நடிக்க வைத்ததற்கு இணையாகாது.
அது என் வாழ்நாள் பெருமை . 
DCIM (79)
எனது டயலாக்குகளை அவர் ரொம்ப ரசித்தார் என்பது மிகப் பெரிய பெருமை .
ஏனெனில் சிவாஜி சார் நடித்த தங்கப் பதக்கம், ரஜினி சாரின் முள்ளும் மலரும் உள்ளிட்ட பல படங்களில் அவர் எழுதிய பல வசனங்கள் சரித்திரம் படைத்தவை .
இந்த இடத்தில் இன்னொரு விசயத்தையும்  அடக்கத்தோடு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் . மகேந்திரன் சார் , தான் அடுத்து இயக்கும் படத்துக்கு   என்னை வசனம் எழுதச்  சொல்லி இருக்கிறார் .
இந்த இடத்தில் நான் இன்னும் சிலரை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன் . 
DCIM (127)
இந்திப் பட இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி . அவரது வசனங்கள் அவ்வளவு ஷார்ப்பாக இருக்கு .திரீ இடியட்ஸ் படத்தை நண்பன் என்ற பெயரில் எனது குருநாதர் ஷங்கர் எடுத்த போது ,
இந்தி வசனங்களை தமிழில் மொழி பெயர்த்துக் கொடுப்பார்கள் . அந்த மொழி பெயர்ப்பிலேயே ராஜ்குமார் ஹிரானியின் எழுத்தின் ஷார்ப்னஸ் தெரியும் . 
அப்புறம் எங்கள் இயக்குனர் ஷங்கர் சார் . வசனங்களை அவ்வளவு கூர்மையாக நெருப்பு மாதிரி தருவார். அதில் அவ்வளவு சக்தி இருக்கும் . 
மணிரத்னம் சாரின் வசனங்கள் பற்றி சொல்லவே வேண்டாம் . 
DCIM (6)
மகேந்திரன் சாரின் வசனங்கள் இவர்களை அனைவருக்கும் முன்னோடியாக அமைந்த ஒன்று . 
வசனம் பற்றிய எனது புரிதல் என்பது எல்லாம்  இவர்கள் கொடுத்ததுதான். அப்படி இருக்க அந்த மகேந்திரன் சாரே என்னை தனது படத்துக்கு வசனம் எழுதச் சொன்னது , ஒரு மாபெரும் விருது .
எல்லா விருதுகளையும் விட பெரிய விருது “என்றார் அட்லி 
வாழ்த்துகள் !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →