
திரைப் பிரமுகர்
ஆர் .கே நடித்த எல்லாம் அவன் செயல் மற்றும் அழகர் மலை இரண்டு படங்களிலும் வடிவேலு காமெடிக்கு பஞ்சமே இருக்காது .
குறிப்பாக இன்று அரசியல் ரீதியாக இணையதளங்களில் பிரபலமாக இருக்கும் வக்கீல் வண்டு முருகன் சொல்லாடலை கொடுத்தவர் இந்த ஆர் கே தான் .
இப்போது மலையாள இயக்குனர் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் ஆர் கே தயாரித்து நடித்துக் கொண்டு இருக்கும் என் வழி தனிவழி படத்தில் வடிவேலுவுக்கு பதிலாக தம்பி ராமையாவையும் சிங்க முத்துவையும் இணைத்து காமெடி கதகளி நடத்தி இருக்கிறாராம் .

இப்படி சினிமா மட்டுமல்ல…சுய முன்னேற்றம் குறித்த தன்னம்பிக்கை பொதுக் கூட்டங்களில் சிறப்பாக உரையாற்றுவதில் வல்லவர் ஆர்.கே.
விளைவு ? என் வழி தனி வழி படத்தில் இவரது பெயருக்கு பின்னால் மக்கள் தளபதி என்ற பட்டம் வருகிறதாம்