துணிவு படத்தில் நாயகியாக நடித்திருக்கும் மஞ்சு வாரியர் துணிவு பட அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்
1. துணிவு படம் உங்களுக்கு எந்த வகையில் வித்தியாசமானது?
அஜித் சாரோடு முதல் படம். வினோத் இயக்கத்தில் முதல் படம். ஆக்ஷன் விசயத்தில் முதல் படம். சீரியசான ஆக்ஷன் படத்தில் நடித்த முதல் படம். ஆக்ஷன் படத்தில் இருந்தாலும் நானே ஆக்ஷன் செய்து நடித்தது முதல் படம் . பல நல்ல பண்பும் திறமையும் உள்ள கலைஞர்களுடன் பணியாற்றியது சிறப்பான அனுபவம் . தனிப்பட்ட வகையிலும் கற்றுக் கொள்ளும் வகையிலும் மறக்க முடியாத அனுபவங்களைத் தந்த படம், இந்த அளவுக்கு எதிர்பார்க்கப்படுகிற மிகப் பெரிய படத்தில் நான் இதுவரை நடித்தது இல்லை.
2. துணிவு படத்தின் முதல் தோற்றம் முதல் கொண்டு எல்லாமே பணம் சம்மந்தப்பட்டதுதான் . நீங்க அதை எப்படி பாக்கறீங்க?
பணம் இருக்கு. மறுக்கல. ஆனா பணம் மட்டுமல்ல. பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை
3. வினோத்தின் இயக்கத்தில் நடித்த அனுபவம்?
வினோத் படங்கள் எல்லாமே பாத்து இருக்கேன். ரசிச்சு பாத்து இருக்கேன். அதனால அவர் படம் எண்ணும்போது ரொம்ப ஆர்வமா இருந்தேன் . ஸ்பாட்ல அவரை இன்னும் வியக்க முடிஞ்சது . செட்ல படத்தைத் தவிர எதைப் பத்தியும் அவர் பேசினதே இல்லை. அவர் என்ன பேசினாலும் அதில் துணிவு படம்தான் இருக்கும் .
4. துணிவு படப்பிடிப்பு அனுபவங்கள்… ?
இதுவரை நான் நடிச்ச மலையாளப் படங்கள் எல்லாம் ஒரே ஷெட்யூலில் பெரும்பாலும் முடிஞ்சுடும் . துணிவு நேர்மாறான அனுபவம். முதல் ல ஒரு நாள் வந்தேன் . அப்புறம் ரெண்டு வாரம் கழிச்சு ரெண்டு நாள். அதனால் எல்லார் கிட்டயும் ஹாய் சொல்றதுக்குள்ளயே ஒரு செட்யூல் முடிஞ்சிடும் . அப்புறம் நான் ஸ்பாட்ல இயக்குனர், கேமராமேன் நீரவ் ஷா , மற்ற டெக்னீசியன்ஸ், அசிஸ்டன்ட் டைரக்டர் எல்லார்கிட்டயும் கேள்வியா கேட்டுக்கிட்டே இருப்பேன் . தாய்லாந்து செட்யூல் தான் கொஞ்ச நாள் தொடர்ந்து இருந்தது . அப்போ எல்லார்கிட்டயும் பழக முடிஞ்சது 5. உங்க அடுத்த படம் ?
அது ஒரு மலையாளப்படம் . ஜனவரி இறுதியில் ஷூட்டிங் நடக்கிறது , கிரீஷ் கர்னாட் போன்ற கலைஞர்கள் இருக்கும் படம். அசுரனுக்கு அப்புறம் துணிவு எனக்கு கிடைச்ச பெரிய படம் . அசுரன்ல என்னை ஏத்துக்கிட்ட அளவுக்கு இந்தப் படத்திலும் என் கேரக்டரை ஏத்துக்குவங்கன்னு நம்பறேன்
6. உங்களுக்கு பிடித்த உணவு?
நாம எங்க இருக்கோம் .. அங்க சிறந்த உணவு எது ன்னு பார்த்து அதை அப்போதைக்கு பிடித்த உணவா சாப்பிடுவது என் வழக்கம் .
7. துப்பாக்கி எல்லாம் வச்சு நடிச்சு இருக்கீங்க . எப்படி நடந்தது ?
எனக்கு அது ரொம்ப புதுசு . அஜீத் சார்கிட்டதான் கேப்பேன். அவர் ஆக்ஷன் சீன்ல ஆயுதங்களை யூஸ் பண்ற விதம்…… அந்த ஸ்டைல் எல்லாம் சூப்பரா இருக்கும் . அவர்தான் எப்படி துப்பாக்கியை பிடிக்கணும் . எப்படி நிக்கணும் எல்லாம் சொல்லிக் கொடுத்தார் . அதோடு இயக்குனர் வினோத், ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் இவங்க முக்கிய உதவியா இருந்தாங்க.
8. துணிவு எந்த மாதிரியான படம்?
முழுமையான பொழுது போக்குப் படம். அஜீத் சாரை எப்படி பாக்க விரும்புறாங்களோ அப்படிப்பட்ட படம் . கதை இருக்கு . ஒவ்வொரு கேரக்டருக்கும் நியாயம் இருக்கும் . டிரைலர் பாத்த பல பேர் என்கிட்டே அஜீத் சார் படத்துல நல்லவரா கெட்டவரா ? நீங்க அவர் டீமா ஆப்போசிட் டீமான்னு எல்லாம் கேட்டாங்க . அவ்வளவு இன்ட்ரஸ்டிங்கான விஷயங்கள் இருக்கு
9. அஜீத் சாருடன் நடித்த அனுபவம் ?
அஜீத் சார் பொதுவில் மற்றவர்களுடன் எப்படிப் பழகுவார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அவரது அன்பான பழகும் குணம் பற்றி அனைவரும் எல்லோரும் பாராட்டிப் பேசி இருக்கிறார்கள். அது எல்லாம் நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன் . ஆனால் அதற்கும் மேலாக அவர் பழகுவதை கண்டு வியந்தேன் . அன்பு என்றால் அவர் அதை வார்த்தையாக மட்டும் பார்ப்பது இல்லை. செயலாகப் பார்ப்பவர் , மிகச் சிறந்த மனிதர் அவர். அவர் மாதிரி இனிமையா பழக முடியாது . அவர் கிட்ட அதை கத்துக்கிட்டேன்