எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் சார்பில் பி.மதன் தயாரிக்க, விமல், சூரி , அஞ்சலி ஆகியோர் நடிப்பில் எழிலிடம் உதவியாளராக இருந்த ராஜ சேகர் இயக்கி இருக்கும் படம் மாப்ள சிங்கம் .
இந்த ராஜ சேகர் தேசிங்கு ராஜா படத்துக்கு வசனம் எழுதியவர். ஆனால் இந்தப் படத்துக்கு தன் நண்பர் அசோக் என்பவரை வசனம் எழுத வைத்துள்ளார் .
“எதிரும் புதிருமான இரண்டு அரசியல் குடும்பங்களை சேர்ந்தவர்கள் விமலும் சூரியும் . விமல் ஜாலியாக ஓட சுற்றும் பேர்வழி. அஞ்சலி வக்கீல்.
ஒரு நிலையில் இருவரும் ஒரு பொதுப் பிர்சனைக்காக ஒன்று சேர்ந்து அதில் எப்படி ஜெயிக்கிறார்கள் என்பதை காமெடியாக சொல்கிறோம் ” என்கிறார் இயக்குனர் .
படத்தில் சிவா கார்த்திகேயன் ஒரு பாட்டுப் பாடி இருக்கிறார் . அது பற்றிக் கூறும் விமல் “மிகுந்த நட்புணர்வோடு சிவா பாடிக் கொடுத்தார் .
நாங்க ரெண்டு பேரும் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்துல நடிக்கறதுக்கு முன்னாடி இருந்தே நல்ல நண்பர்கள். “என்கிறார் .
அஞ்சலி இப்போது அழகான மூணு எலியாக இருக்கிறார் . அந்த அளவுக்கு எடை குறைத்து ஸ்லிம் ஆகி இருக்கிறார் . “தமிழில் அடுத்து அஞ்சு படம் வச்சு இருக்கேன். தெலுங்கில் நாலு வச்சு இருக்கேன் .
தெலுங்கில் பேயா கூட நடிச்சுட்டேன் . தமிழில் இன்னும் பேயா நடிக்கல ” என்கிறார் .
“படத்தில் ஐந்து பாடல்கள் . ஐந்தும் நன்றாக வந்துள்ளது . எனது பாடல்களில் எப்போதும் வரிகளுக்கு முக்கியத்துவம் இருக்கும் . இந்தப் படமும் அப்படியே இனிமையாக இருக்கும் ” என்கிறார் இசையமைப்பாளர் .
“இந்தப் படத்தில் என்ன புதிதாக முயன்று இருக்கிறீர்கள் ?” என்று கவிஞர் யுகபாரதியிடம் நான் கேட்டேன் .
“கல்யாணத் தேனிலா காய்ச்சாத பால் நிலா ‘ பாடலில் எல்லா வரிகளும் லா என்ற நெடிலில் முடியும் இல்லையா ? அது போல நான் ஒரு பாடலை முழுக்க முழுக்க ல என்ற குறிலில் முடியும்படி எழுதி இருக்கிறேன்.
அதற்கு மிக முக்கியக் காரணம் இசை அமைப்பாளர் ரகுநந்தன் . காரணம் அவர் டியூனை அனுப்பி எழுத சொல்லும் இசையமைப்பாளர் அல்ல .
கம்போசிங்கில் கூடவே உட்கார வைத்து எழுத வைப்பவர் . அதனால்தான் இது சாத்தியம் ஆனது ” என்கிறார் .
சிரிப்பு நடிகர் சுவாமிநாதன் “பொதுவாக எல்லா படங்களிலும் நான் சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் வருவேன். இதில் ஒரு முழுநீள நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்
. ராதாரவி அண்ணனை தூண்டி விட்டு கொந்தளிக்க வைத்து வேடிக்கை பார்ப்பது போல ஒரு கதாபாத்திரம். செம காமெடி . இந்தப் படத்துக்குப் பிறகு எனக்கு முழு நீள கதாபாத்திரங்கள் வரும் ” என்கிறார் .
ஆபீஸ் படத்தில் நடிக்கும் விஷ்ணு இந்தப் படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . அவருக்கு ஜோடியாக ஆபீஸ் தொடரிலேயே நடிக்கும் மதுமிலா நடித்துள்ளார் .
விஷ்ணுவை சற்று உற்றுப் பார்த்தேன். “அய்யய்யோ … நான் ஒன்னும் சொல்லல சார். ஆக்சுவலா முதல்ல வேற ஜோடிதான் யோசிச்சோம் . ஆனா டைரக்டர்தான் அவங்களே இருக்கட்டும்னு சொன்னாரு .” என்கிற விஷ்ணு,
அடுத்து இரண்டு படங்களில் ஹீரோவாக நடிக்கிறார் . அதில் ஒரு படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது .
வரும் பதினொன்றாம் தேதி வெளிவருகிறது மாப்பிள்ளை சிங்கம்