Filia Entertainment Pvt Ltd. & Kuviyam Mediaworks சார்பில், ரகு எல்லூரு, ரமேஷ் பஞ்சக்னுலா, ஜனார்த்தன் சவுத்ரி, ராக்கோ யோகேந்திரன் ஆகியோர் தயாரிக்க, ரக்ஷன் , மெலினா, தீனா,மெலினா, முனீஸ்காந்த் நடிப்பில், ராக்கோ யோகேந்திரன் எழுதி இயக்கி இருக்கும் படம்.
பத்து வருடங்களுக்கு முன்பு பத்தாவது படித்து மேல் படிப்பு முடித்து வேலைக்கும் போய் விட்ட ஒரு பள்ளிக்கூட மாணவர்களின் தேர்வில் முறைகேடு நடந்ததாகவும் , எனவே அந்த மாணவர்கள் மீண்டும் வந்து அதே மூன்று மாதம் படித்து, தேர்வு எழுதி பாஸ் ஆக வேண்டும் . பெயில் ஆனால்
தகுதிக் குறைப்பு செய்யப்பட்டு இப்போது பணியாற்றும் நிறுவனங்களில் இருந்து வேலை இழக்கும் அபாயமும் இருக்கிறது .

பலர் அந்த பயத்தில் வர, ஒருவன் (ரக்ஷன்) மட்டும் சந்தோஷமாக வருகிறான் . காரணம் அவன் காதலித்து அந்தக் காதலை சொல்ல முடியாமலே போன மாணவியும் (மலினா) வருவாள். இப்போதாவது காதலைச் சொல்லலாம் என்ற காரணம்தான். அதே போல அவர் வருகிறாள். அவளுக்குத் திருமணம் ஆகாமல் இருக்கிறது .
காதலனும் அவனது நண்பர்களும் ( தீனா , ராகுல்) மகிழ, ஆனால் அவளுக்குத் திருமணம் நிச்சயமாகி இருப்பது தெரிய வருகிறது . காதல் என்ன ஆனது? தேர்வு என்ன ஆனது என்பதே படம்
படத்தின் பெரும் பலம் .. அந்த அழகான கன்யாகுமரி பகுதி லொக்கேஷன். . கிளைமாக்ஸ் பகுதி வரை அசத்தல்.
படம் முழுக்க அழகழகான பெண்கள் .

கிளைமாக்ஸ் சமயத்தில் நாயகி பாடும் அந்தப் பாடல் அருமை .
லாஜிக் இல்லாவிட்டாலும் சுவாரஸ்யமான கதை என்பதை மறுப்பதற்கில்லை .
ஆனால் ஒரு சாதாரண ரீ யூனியனில் இருக்கிற மேஜிக்கைக் கூட கொண்டு வர முடியாத வறண்ட திரைக்கதை . நோஞ்சான் வசனங்கள் . நேர்த்தியற்ற காட்சி அமைப்புகள். செயற்கையான நடிப்பு. பொருத்தமற்ற மாடுலேஷனில் பேசும் நாயகன் . எல்லாப் பெண்களுமே பதுமையாட்டம் வருகிறார்கள் போகிறார்கள் .
எனினும் அழகு கொஞ்சும் படம்.