“என் படத்துக்கு திருட்டு விசிடி வந்தா ….” எச்சரிக்கும் ‘மருது’ விஷால் !

marudhu 5

கோபுரம் பிலிம்ஸ் சார்பில் அன்புச்செழியன் தயாரிக்க, விஷால், ஸ்ரீதிவ்யா, சூரி, ராதாரவி, ஸ்டுடியோ 9 சுரேஷ், மாரிமுத்து, அருள்தாஸ் ஆகியோர் நடிப்பில், 

குட்டிப்புலி மற்றும் கொம்பன் வெற்றிப் படங்களை இயக்கிய முத்தையா இயக்கி இருக்கும் படம் ‘மருது’.

ஒளிப்பதிவாளராக  வேல்ராஜ், எடிட்டராக பிரவீன் KL பணியாற்ற,  வைரமுத்து,யுகபாரதி பாடல்களுக்கு D.இமான் இசையமைத்துள்ளார்.

ஒரு பாட்டிக்கும் பேரனுக்கும் இடையிலான பாசத்தைச் சொல்லும் படம் இது . தாரை தப்பட்டை படத்தில் வில்லனாக நடித்த சுரேஷ் இந்தப்  படத்தில் இன்னும் கொடூரமான வில்லனாக நடித்திருக்கிறாராம் .

சூரியின் கதாபாத்திரம்  காமெடியாக   மட்டுமின்றி படத்தின் இரண்டாம் பகுதியில்  கண்கலங்க வைக்கும்படியாகவும் இருக்குமாம் . 

படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில்  படத்தின் சிறு முன்னோட்டத்தையும் (டீசர்)  ஒரு பாடலையும் திரையிட்டார்கள் .

marudhu 1

அதிரடியான சண்டைக் காட்சியுடன் துவங்கும்  சிறு முன்னோட்டத்தில் முததையாவுக்கே உரிய விலாவாரியான  பஞ்ச டயலாக்குகள் இருக்கின்றன .விஷாலுக்கு இயக்குனர் கொடுத்திருக்கும் தோற்றமே, 

படத்தின் மண் சார்ந்த தன்மையையும் ஒரு அழுத்தமான கதை இருக்கலாம் என்ற உணர்வையும் ஏற்படுத்துகிறது. விஷால் – ஸ்ரீதிவ்யா பாடல் காட்சியில் ‘ எல்லாம் ‘ இருக்கிறது 

நிகழ்ச்சியில் பேசிய வேல்ராஜ் “எங்கள் குழுவை நம்பி படம் கொடுத்த அன்புச் செழியனுக்கு நன்றி . ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு  முடிந்ததும் அறைக்குள் போய் முடங்கி விடாமல், 

உடல் தகுதிக்காக எல்லோரும் சேர்ந்து வாலிபால் விளையாடுவோம். முத்தையா நல்ல கிராமத்துக் கதைப்படமாகக் கொண்டு வந்துள்ளார் . படம் சிறப்பாக வந்துள்ளது ” என்றார் . 

“படத்தில் எனக்கு  மிக நல்ல கதாபாத்திரம் . படமும் சிறப்பாக வந்துள்ளது “என்றார் அருள்தாஸ்

“இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் ஒரு வெற்றிப் படத்தில் நடித்துள்ளேன் என்பது மட்டுமல்ல , விஷால் எவ்வளவு பெரிய மனிதாபிமானி என்பதும் புரிந்தது .

marudhu 8

நிறைய பேருக்கு அவர் சொல்லாமல் உதவி செய்கிறார் ” என்றார் . மாரிமுத்து 

ஸ்டுடியோ 9 சுரேஷ் பேசும் போது, “தாரை தப்பட்டை படம் ஒரு வில்லனாக எனக்கு நல்ல அறிமுகம் தந்தது . ஆனால் இந்தப் படத்தில் எனக்கு மிக சிறப்பான கேரக்டரைத் தந்துள்ளார் முத்தையா. அவருக்கு நன்றி . 

விஷால் பிரதரோடு எனக்கு முன்பே பழக்கம் உண்டு . இந்தப் படத்தின் மூலம் நாங்கள் இன்னும் நெருங்கினோம் . படம் மிக சிறப்பாக வந்துள்ளது ” என்றார் 

படப்பிடிப்பு சமயத்தில் பேரையூர் என்ற இடத்தில் ஒரு தள்ளு வண்டிக் கடை வைத்திருக்கும் பாட்டிக்கும் அவருக்கு வட்டிக்குப் பணம் தரும் சிலருக்கும் பண விசயத்தில் பிரச்னை எழுந்தபோது, 

விவரம் அறிந்த விஷால் , தான் யார் என்பதைக் கூட சொல்லாமல் பல ஆயிரம் ரூபாயை பாட்டிக்கு கொடுத்து அனுப்பியதை உணர்வுப் பூர்வமாக சொன்ன சூரி, 

இன்னொரு பக்கம் விஷால், ஸ்ரீதிவ்யா , சூரி , ஆகியோருக்கு இடையில் உள்ள உயர வித்தியாசம் காரணமாக காட்சிகளை எடுக்க ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் பட்ட கஷ்டங்களை நகைச்சுவையாகச் சொன்னார் .

marudhu 6

நடிகை ஸ்ரீதிவ்யா தன் பேச்சில் “மருது’ படம் நடிக்கும் போதே, இது நிச்சமாக வெற்றிப்படமாக அமையும் என்பது தெளிவாகத் தெரிந்தது

அப்படிப்பட்ட ஒரு சிறப்பான கதை. நடிகர் சூரியின் எமோஷனலான நடிப்பைப் பார்த்து நான் ‘மெர்சலாயிட்டேன்.” என்றார் 

எடிட்டர் பிரவீன் KL பேசும்போது “நடிகர் விஷாலின் உடலமைப்பு,படத்தின் கதைக்கு கச்சிதமாகப் பொருந்தியுள்ளது. சண்டைக்காட்சிகளில் முழு ஈடுபாட்டுடன் நடித்திருக்கிறார்.

படத்தின் கடைசி 30 நிமிடங்கள் நிச்சயமாக நம் மனதில் பதியும்படியாக இருக்கும். நகைச்சுவை நடிகர் சூரி நம்மை கண்கலங்க வைப்பார்.

ஒரு டெரிஃபிக் கான வில்லனாக  சுரேஷ் அருமையாக நடித்திருக்கிறார். 

இந்தப்படம் அனைவருக்கும் ஒரு மாபெரும் வெற்றிப்படமாக அமையும்.” என்றார் 

marudhu 4

படத்தின் இயக்குனர் முத்தையா பேசுகையில்; ‘மருது’ மண் மனம் மாறாத ஒரு கிராமியத் திரைப்படமாக இருக்கும். செண்டிமெண்ட் கலந்த கிராமியப் படங்களை இயக்கவும் ஆள்  வேணாமா? 

எனக்கு சென்டிமெண்ட் படங்களைத்தான் இயக்கத் தெரியும். நான் நகரம் சார்ந்த கதையமைப்பில் படம் செய்தாலும் அதிலும் சென்டிமெண்ட் இருக்கும்.

‘மருது’ கதாபாத்திரத்துக்கு விஷால் சார் மிகச்சரியாக பொருந்தி இருந்தார். அவருடைய உடல் அமைப்பும்,நிறமும் இந்த கதாபாத்திரத்துக்கு நன்றாக பொருந்தியது. 

 படத்தின் கதாநாயகி ஸ்ரீ திவ்யா. இக்கதைக்கு ஸ்ரீ திவ்யா அழகாக பொருந்தி வந்ததால் அவரை இக் கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்தோம்.

அதுமட்டுமல்லாமல் இசையமைப்பாளர் இமானுடன் எனக்கு முதல் படத்தில் இருந்தே பணியாற்ற வேண்டும் என்ற ஆசை உண்டு. இந்த படத்தின் மூலம் அது நிறைவேறி உள்ளது எனக்கு மகிழ்ச்சி. 

படத்தில் பாடல்களும் சிறப்பாக வந்துள்ளது.

marudhu 9

ஒளிப்பதிவாளர்,எடிட்டர், ஸ்டண்ட் மாஸ்டர்,டான்ஸ் மாஸ்டர் மற்றும் படத்தில் என்னோடு பணியாற்றிய அனைவரும் சிறப்பாக ஒத்துழைத்தார்கள். அனைவருக்கும் என் நன்றிகள்”என்றார் 

நிறைவாகப் பேசிய விஷால் “தமிழில் மருது என்ற  பெயரிலும் ,ராயுடு என்ற பெயரில் தெலுங்கிலும் மே 20ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது. 

நான் நடித்த சண்டைக்கோழி படம் இன்றும் திருவிழா சமயங்களில் கிராமங்களில் திரையிடுவதாக விநியோகஸ்தர்கள் சொல்லுவார்கள். அதேபோல இந்த ‘மருது’படம் என்னை நகரம் மட்டுமல்ல,

 தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கொண்டு சேர்க்கும். அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தினை எனக்கு இந்தப் படத்தில் இயக்குநர் தந்துள்ளார். அவருக்கும் தயாரிப்பாளருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

இந்தப்  படத்தில்   நான் நடிக்கக் காரணம் முருகராஜ் அண்ணன்தான் 

marudhu 7

‘எந்தப் படமானாலும் நான்  கொஞ்சம் ஓபி அடிப்பேன் . அந்த சீன் அவ்வளவு போதும் . இதுல இது போதும் நு சொல்லிடுவேன் . இதுக்கு ஒரே விதிவிலக்கு பாலா சாரின் அவன் இவன்’

அந்தப் படத்திற்குப் பிறகு நான் என்னை முழுமையாக அர்ப்பணித்த படம். மருதுதான்  காரணம் முத்தையா .

முத்தையா இயக்கும் அடுத்த படத்தின் கதாநாயகன் யாராக இருந்தாலும் சரி , அந்தப் படத்தை  கண்டிப்பாக எங்களது பட நிறுவனம்தான் தயாரிக்கும்.

ஒரு காமெடியனாக எல்லாருக்கும் நன்கு தெரிந்த சூரி இந்தப்படம் மூலம் சிறந்த குணசித்திர நடிகராகவும் வலம் வருவார். 

வில்லனாக நடித்துள்ள RK சுரேஷ், வெறித்தனமாக நடித்துள்ளார். நாங்கள் இருவரும் நடித்துள்ள கிளைமேக்ஸ் காட்சியில் அவருடைய நடிப்பு சிறப்பானதாக பேசப்படும். 

அதுவும் ஒரு சண்டைக் காட்சியில் அவரும் அருள்தாசும் மிகவும் ரிஸ்க் எடுத்து நடித்தார்கள் . இனி அவர்கள் அப்படிப்பட்ட ரிஸ்கை எந்தப் படத்திலும் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் 

 

marudhu 3

ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் மிக சிறப்பாக ஒளிப்பதிவு செய்துள்ளார். 

படத்திலேயே வெள்ளையான ஒரே ஆள் நடிகை ஸ்ரீதிவ்யாதான். ஷூட்டிங் சமயத்தில் அவர் எங்க இருந்தாலும் கண்டு பிடிச்சிருவோம் . நான் அவருடன் இணைந்து நடித்திருக்கும் முதல் படம்,அருமையாக நடித்துள்ளார். 

திருட்டு விசிடியை தடுக்க நான் ஒருவன் தான் இன்றுவரை தனியாளாக போராடிக் கொண்டிருக்கிறேன். என்னுடைய படத்திற்காக மட்டுமல்ல,எல்லா நடிகர்களுக்காகவும் தான் நான் பேசுகிறேன்.

சூர்யா நடிச்ச 24 படத்தோட திருட்டு விசிடி படம் ரிலீஸ் ஆன ரெண்டாவது நாளே வந்துருச்சி. என்ன அநியாயம் இது ? எவ்வளவு உழைப்பு  வீணாகுது ?

இதை பத்தி தயாரிப்பாளர் சங்கம் தரப்புல யாருமே கண்டுக்கல . அதுதான் எனக்கு ஆச்சர்யமா இருக்கு ?

ஒரு திருட்டு விசிடி காப்பிய வச்சு, நாற்பத்தி அஞ்சாயிரம் செலவுல அந்த திருட்டு விசிடி எந்த ஊர்ல எந்த தியேட்டர்ல என்னைக்கு எத்தன மணிக்கு எடுக்கப்பட்டதுன்னு ஒரு வாரத்துல கண்டு பிடிக்க முடியும் . 

marudhu 2

அப்படி கண்டு புடிக்கிற தியேட்டருக்கு அப்புறம் படமே தர மாட்டோம்னு சொல்லிட்டா அப்புறம் யாரவது  திருட்டு விசிடி எடுக்க  யாரவது அனுமதி தருவாங்களா ?  இதை செய்யறதுல  என்ன கஷ்டம் ?

அரசாங்கத்தின் சட்டம் நமக்கு உறுதுணையாகத் தான் இருக்கிறது. படத்தின் தயாரிப்பாளர்கள் தான் முன்வரவேண்டும். அனைவரும் ஒரு குழுவாக இணைந்தால் மட்டுமே இதனைத் தடுக்க முடியும்

மே20 ஆம் தேதி மருது வெளியாகிறது. கண்டிப்பாக திருட்டு விசிடி வெளியிடுவார்கள். இப்பவே அதுக்கான சி டி கவர் எல்லாம் பிரின்ட் பண்ணி இருப்பாங்க .

எனக்கு அது தெரியும் .நான் நிச்சயமாக என் நண்பர்களுடன் களமிறங்குவேன். திருட்டு விசிடியை பிடிப்பேன் . 

எந்த தியேட்டர்ல எப்போ எடுக்கப்பட்டதுன்னு கண்டு புடிச்சு தயாரிப்பாளர் சங்கத்துல புகார் பண்ணுவேன். நடவடிக்கை எடுக்கலன்னா நான் என்ன பண்ணுவேன் என்பதை,

அப்புறம் உங்களை எல்லாம் கூட்டி சொல்வேன் ” என்றார். 

இப்படியாக மருது படத்தின் முன்னோட்டம் மாதிரியே பத்திரிக்கையாளர் சந்திப்பும் கும்முன்னு இருந்ததுங்கோ!

 

 

 

 

 

 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →