அன்பு மயில்சாமி(யின் மகன்) ஹீரோவாகும் அந்த 60 நாட்கள்

andha60naatkal

கே வி எஸ் ஸ்டுடியோ  சார்பில் வி.சுப்பையா கதை எழுதித் தயாரிக்க , அவரது புதல்வரும் விஸ்காம்  படித்தவருமான எஸ். ராஜசேகர் திரைக்கதை எழுதி இயக்கி இருக்கும் படம் அந்த 60 நாட்கள்.. 

நகைசுவை நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி இந்தப் படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார் . கதாநாயகியாக கோவையைச் சேர்ந்த சந்திரிகா அறிமுகமாகிறார் .
நகைச் சுவை நடிகர் அர்ஜுன் நந்தகுமார் கதாநாயகனின்  நண்பராக  ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 
இவர்கள் தவிர டி.பி.கஜேந்திரன், ஆர். சுந்தர்ராஜன், டில்லிகணேஷ், மதன் பாப், பவர் ஸ்டார் சீனிவாசன் ,
andha 7
பாண்டு , வையாபுரி, அனுமோகன் , மது மிதா ,நளினி , சி ஐடி சகுந்தலா , ஷகிலா,  
சிசர் மனோகர், நெல்லை சிவா  என்று, நாற்பது  நடிகர்கள் காமெடி  வேடங்களில்  நடிக்கிறார்கள். 
கதையில் அப்படி என்ன ஸ்பெஷல் ?
‘தப்பு  செய்தால் பூலோகத்தில்  மட்டுமல்லாமல் இறந்து மேல் லோகம்  போனாலும்  தண்டனை நிச்சயம்’ என்ற கருத்தை சொல்லும் இந்தப்  படத்தில்,  நாயகன் ஒரு தப்பை செய்து விட்டு,
 செத்து மேல் லோகம் போகிறான் . அங்கு எமன் நாயகனுக்கு ஒரு வாய்ப்பை  தருகிறான் . 
andha 4
அதாவது  பூமிக்கு போய்  அறுபது  நாட்களுக்குள் அவன் அந்த  தப்பை  சரி செய்து விட்டால் அவன் ஆயுள் நீட்டிக்கப்பட்டு தொடர்ந்து  பூமியிலேயே  வாழும் அதிர்ஷடம் கிடைக்கும் (கதாநாயகி இருக்காரே !) .  
தப்புக்கு  பிராயச் சித்தம் செய்யாவிட்டால் அறுபதாவது நாள்  அவன் தலை வெடித்து விடும் . . இதுதான் நிபந்தனை 
இறப்பதற்கு  முன்பு சினிமாவில் அசிஸ்டன்ட் டைரக்டராக  வேலை  பார்த்தவன் நாயகன் . 
படத்தில் நடிகராகவே  வரும் சார்லி , தயாரிப்பாளராகவே  நடிக்கும்  தயாரிப்பாளர்  சங்கிலி முருகனிடம் நாயகனுக்கு  டைரக்ஷன் வாய்ப்பு  வாங்கிக் கொடுத்து இருப்பார் .
 andha 99
இந்த நிலையில் செத்துப் போய் மீண்டும் எம தர்மன் தந்த சலுகைப் படி வந்திருக்கும் நாயகன் , செய்த தப்புக்கான பிராயச் சிததமும் செய்ய முடியாமல்,
 தயாரிப்பாளர் சங்கிலி முருகன் தந்த இயக்குனர் வேலையையும்  ஒழுங்கா  செய்ய முடியாமல் தவிப்பதுதான் படத்தின் கதை என்கிறார்கள் சுப்பையாவும் ராஜசேகரும் 
அப்படி  ஹீரோ செய்த  தப்புதான் என்ன என்றால் “அதுதான்  சார்  படத்தின் முக்கியமான சஸ்பென்ஸ் ” என்கிறார் இயக்குனர்  ராஜசேகர். 
andha 6
படம் பற்றிக் கூறும் நடிகர் சார்லி “திரைக் கதைப்படி ஹீரோவுக்கு  டைரக்ஷன் வாய்ப்பு வாங்கித் தரும் காட்சிகளும், ஹீரோவின் பிராயச் சித்தத்துக்கு நான்  உதவும் காட்சிகளும் ,
தயாரிப்பாளரிடம் மாட்டிக் கொண்டு ஹீரோ முழிக்கும் காட்சிகளும் படப்பிடிப்புக் காட்சிகளும்,  ரசிகர்கள்  கொண்டாடும் அளவுக்கு இருக்கும் ” என்கிறார் . 
என் எஸ் கே  என்பவர்  இசையில் படத்தின் ஐந்து பாடல்களும் சிறப்பாக வந்திருக்க , “படத்தின் தேவலோக  காட்சிகளும் , வை ஃபை என்ற பாடலும் ,
andha 999
வரைகலை மற்றும் அனிமேஷன் சித்திரக் காட்சிகளும் பெரிய அளவில் ரசிகர்களை பாராட்ட வைக்கும் ” என்கிறார் ஒளிப்பதிவு செய்திருக்கும் சீனியர் ஒளிப்பதிவாளர் கார்த்திக் ராஜா. 
“படத்தில் எமனாக நடிக்கும் நெல்லை சிவா  , எமனாகவும் நெல்லைத் தமிழிலேயே பேசி  இருப்பது ரசிக்கும்படி வித்தியாசமாக இருக்கும்.
கதைக் கருவும்  நகைசுவையாக சொல்லி இருக்கும் விதமும் ரசிகர்களைக் கவரும் “என்கிறார் சுப்பையா. 
சரி , ஹீரோவாக அறிமுகமாகும் அன்பு மயில்சாமி என்ன சொல்கிறார் ? ” விஸ்காம் படித்த நிலையில்  சினிமாவில் டெக்னிக்கலாக  களம் இறங்குவதா…?
andha 5
இல்லை நடிகராகவா என்ற யோசனை  இருந்தது , இந்த நிலையில் இந்தப் படத்தின் கதை கேட்க  வந்தேன் . 
எனக்கு தயாரிப்பாளரையும்  இயக்குனரையும் பார்க்கும் போது தந்தை  மகன் என்ற வகையின் என் அப்பாவையும் என்னையும் பார்ப்பது போலவே இருந்தது .கதையும் ரொம்ப பிடித்து இருந்தது . 
அப்புறம் அப்பாவிடம் சொன்னேன் . அவருக்கும் பிடித்து சம்மதம் சொன்னார் . ‘ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போனா  டைரக்டரையும் தயாரிப்பாளரையும் மனசார மதிக்கணும்.
அவங்க சொல்றத மட்டும் செய்யணும்’ என்பதுதான் எனக்கு அப்பா சொன்ன அறிவுரை  ” என்கிறார் . 
andha 7777
இது பற்றிப் பேசும் தயாரிப்பாளர் சுப்பையா ” மயில்சாமி சார் என்னிடம் பேசும்போது உங்க பணத்தை  காப்பாததணும்னு உங்க மகன் உழைப்பாரு . அவரை ஜெயிக்க வைக்கனும்னு நீங்க உழைப்பீங்க .
அது போதும் ரெண்டும் சரியா நடந்தா என் மகனும் ஜெயிச்சிடுவான்னு சொன்னார் ” என்கிறார் 
“எல்லாம் சரி .. சிவாஜியின் எமனுக்கு எமன் , ரஜினியின் அதிசயப் பிறவிகள், கார்த்திக்– கவுண்டமணியின் லக்கி மேன், வடிவேலுவின் இந்திர லோகத்தில் நா. அழகப்பன் என்று….
எமலோகப் பின்னணியில் வந்த எந்தப் படமும் தமிழில் நன்றாக ஓடியது இல்லை . உங்கள் படம் அதில் இருந்து எந்த வகையில் வேறுபடும்?” என்று கேட்டேன் . 
andha 8
அதற்குப் பதில் சொன்ன இயக்குனர் ராஜசேகர் “அந்தப் படங்கள் எல்லாமே ஒரு தனி நபரை நம்பி உருவான படங்கள். எங்கள் படத்தில்  அப்படி அல்ல ..
இதில் வரும் நிகழ்வுகளும் அடுத்ததடுத்து வரும் கேரக்டர்களும் வேறு மாதிரி இருக்கும் . தவிர , இதில் ஹீரோ செய்த தவறும் அதை வைத்து பூமியில் நடைபெறும் சம்பவங்களுமே பிரதானம் .
எமலோகம் என்பது திரைக்கதையில் இரண்டாம் நிலைதான் 
andha 88
ஒரு குற்றவாளிக்கு  நீதிபதி  தண்டனையை  தீர்ப்பாக வழங்குகிறார். ஆனால் சட்டத்தின் ஓட்டையைப் பயன்படுத்தி அவன் தப்பிக்கிறான். 
பதிலாக நீதிபதியே  நேரடிதண்டனையை வழங்கினால் எப்படி இருக்கும் ((அதுதானே  ‘ நீதி’?) ) என்று அப்பா சீரியசாக கதை யோசித்து ,
பின்னர் அதை நகைசுவையாக கொண்டு வந்து உருவாக்கியதுதான் அந்த எம லோக ஏரியா . 
andha 2 
எனவே அந்தப் படங்களுக்கு வந்த பிரச்னைகள் எங்கள் படத்துக்கு இருக்காது . எங்களது  ‘அந்த 60 நாட்கள்’ படம் சிறப்பாக ரசிகர்களைக் கவரும் ” என்கிறார் உறுதியாக . 
இதுதான் தெளிவு ! வாழ்த்துகள் !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →