ஜே.எஸ்.பி.பிலிம்ஸ் ஸ்டுடியோ சார்பில் ஜே.எஸ்.பி.சதீஷ் தயாரிக்க , விஷ்ணு பிரியன் அஸ்வினி ஜோடியாக நடிக்க,
அட்டக் கத்தி தினேஷ் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, பச்சை என்கிற காத்து படத்தை இயக்கிய வ.கீரா எழுதி இயக்கி இருக்கும் படம் மெர்லின்.
மெர்லின்?
சென்னையின் ஒண்டுக் குடித்தனம் ஒன்றில் வசிக்கும் கோடம்பாக்கக் கனவுலகவாசி உதவி இயக்குனர் வெற்றி.
அவனது அறையில் எப்போதும் நண்பர்கள் கூட்டம் இருக்கும்
படம் இயக்கும் முயற்சியில் இருக்கிற வெற்றிக்கு நடிகர் தினேஷ் நடிக்க பவர்ஸ்டார் தயாரிப்பில் ஒரு படம் இயக்க வாய்ப்பு வருகிறது
கதையை கேட்ட தினேஷ், கதையின் கரு பிடித்து போனதால், முழுக் கதையையும் ஒரு வாரத்திற்குள் சொல்ல வேண்டும் என நாள் குறிக்கிறார்.
ஒரு வாரத்திற்குள் கதை சொல்வதற்காக அறையில் கதை எழுத ஆரம்பிக்கிறான் வெற்றி. அவனால் அறை நண்பர்கள், வெளி நண்பர்களின் தொந்தரவால் கதை எழுத முடியவில்லை.
இந்த அன்பு தொல்லையில் இரு ந்து தப்பித்து நண்பர்கள் வரவைக் குறைக்கவும், கதையை எழுதி முடிக்கவும் வெற்றி பல வகையில் முயன்று தோற்று,
ஒரு நிலையில் நண்பர்களை பயமுறுத்துவதற்காக,
தான் குடியிருக்கும் வீட்டில் கன்னிப்பேய் இருப்பதாக ஒரு பொய் கதையை சொல்கிறார் அது ஏற்கனவே பல பேரைக் கொன்றிருப்பதாகவும் சொல்கிறான்.
அந்தக் கதைய வீட்டின் கீழே இருக்கும் வயதான பாட்டி சொன்னதாகவும்,
பேய் பற்றிய உண்மையை சொல்லிவிட்டதால் எந்த நேரமும் தான் அந்தப் பேயால் கொல்லப்படலாம் எனவும் சொல்லும் பாட்டி,
உண்மையில் திடீரென இறந்து போக பேய் கதை கேட்ட நண்பர்கள் அதிர்ச்சியடை ந்து அ ந்த வீட்டுப்பக்கம் வருவதையே நிறுத்தி விடுகிறார்கள்.
ஆனால் உண்மையிலேயே வெற்றியை ஒரு பேய் துரத்துகிறது.
அதாவது புனைந்த கதையே உண்மையாக நடக்கத் துவங்குகிறது. அவனது மனதுக்கும், உண்மைக்குமான போராட்டம் நடந்து கொண்டே இருக்கிறது.
இயக்குனர் வெற்றி பொய்யாக உருவாக்கிய பேய் கதை நிஜமானதா… கதையை எழுதி முடித்தாரா… உண்மையில் பேய் என்ற ஒன்று இருக்கிறதா… இதற்கெல்லாம் விடை சொல்வதுதான் மெர்லின்
உண்மையிலேயே பேய் இருக்கிறதா… அந்த பேய் யார்… எதனால் இவை நடக்கிறது என்பதை மூன்று கால கட்டங்களில் சொல்லும் படம் இது.
இது அழகான திரில்லர் பேய்க் கதை. 3 கால கட்டங்களில் நடக்கிற கதை.
நான் உதவி இயக்குனராக இருந்த காலத்தில் எனக்கு ஏற்பட்ட ஓர் பேய் அனுபவத்தின் பிரதிபலிப்பே இந்தப் படம் ” என்கிறார் இயக்குனர் வ.கீரா