வனிதா பிலிம் புரடக்ஷன் , பி விஷன், பானு பிக்சர்ஸ் , சார்பில் வனிதா , ஷிவா, பார்கவி மற்றும் ராஜா ஆகியோர் தயாரிக்க, தி வைப்ரன்ட் மூவீஸ் வெங்கட்டேஷ் ராஜா வெளியிட, ராபர்ட் , ராம்ஜி, நிரோஷா , ஐஸ்வர்யா, வனிதா ஆகியோர் நடிப்பில் வனிதாவின் கதை திரைக்கதை வசனத்தில் ராபர்ட் இயக்கி இருக்கும் படம் எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் ரசிகர்கள் நற்பணி மன்றம் .
ரசிகர் ஷோ நடத்துமா படம் ?
பொருளாதாரத்தில் பின் தங்கிய எளிய இளைஞர்கள் ராபர்ட் உள்ளிட்ட நால்வர் . கண்ணன் என்கிற கண்ணம்மா என்னும் திருநங்கையின் (ராம்ஜி) இட்லி கடையில் கடன் சொல்லி சாப்பிடுவதும் தண்ணி அடிப்பதுவுமாக வாழும் அவர்களில் ஒருவனின் தாய்க்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு இரண்டு லட்ச ரூபாய் இருந்தால்தான் காப்பாற்ற முடியும் என்ற நிலை வருகிறது . அது அவர்களுக்கு பணத்தின் அருமையை சொல்கிறது . அம்மாவை காப்பாற்ற முடியாமல் போகிறது.
அம்மாவுக்காக பணம் திரட்டும் போது உதவிய எளிய மக்கள் , அவமானப்படுத்திய நபர்கள் இவர்களை முன்னிட்டு , நகரில் ஒரு குறிப்பிட்ட வங்கியின் ஏ டி எம் மெஷின்களை உடைத்து எல்லா பணததையும் எடுத்து ஏழைகளுக்கு மருத்துவ உதவிக்கு பயன்படுத்த முடிவு செய்கிறார்கள் . வங்கியின் ஏ டி எம் செயல்பாட்டுப் பெண் அதிகாரியை (நிரோஷா) கடத்தி அவர் மூலம் அப்படியே கொள்ளை அடிக்கின்றனர் .
அடித்த பணம் வழியில் திருடப் படுகிறது . திருடியது வேறு யாருமல்ல ராபர்ட்டை ஒரு தலையாகக் காதலிக்கும் கண்ணன் என்கிற கண்ணம்மாதான். பணம் திருடியவர்களை பிடிக்க ஒரு பெண் டி எஸ் பி (ஐஸ்வர்யா) களம் இறங்குகிறார். அவரிடம் ராபர்ட் மற்றும் நண்பர்கள் மாட்டுகின்றனர் . விஷயம் தெரிந்த கண்ணன் என்கிற கண்ணம்மா எஸ்கேப் ஆக , அப்புறம் என்ன ஆச்சு என்பதே இந்தப் படம் .
ரிக்ஷாக்காரன் , டாக்டர் சிவா படங்களில் வனிதாவின் அம்மாவான நடிகை மஞ்சுளா நடித்த பாடல் காட்சிகளை போட்டு கலக்கலாக ஆரம்பிக்கிறார்கள். ஆரம்பப் பாடல் காட்சியில் கேமரா கோணங்களில் கவர்கிறார் இயக்குனர் ராபர்ட் .
எம் ஜி ஆர் , சிவாஜி , ரஜினி , கமல் , அஜித் மாஸ்க் அணிந்து நடிகர்கள் நடிக்கிறார்கள் .
சந்திர பாபுவின் பாடல் மெட்டில் வரும் பாடல் எடுக்கப்பட்ட விதம் மிக மிக அருமை .
ஆண் தன்மை செறிந்த திருநங்கை கேரக்டரில் பின்னிப் பெடல் எடுத்து இருக்கிறார் ராம்ஜி . அட்டகாசமான நடிப்பு .
எம் ஜி ஆர் சிவாஜி ரஜினி கமல் … மானிட்டர் !